ரஜினியோ அல்லது மோடியோ யார் இலங்கைக்கு போனாலும் ஒரு பயனும் ஏற்பட போவதில்லை என சீமான் கூறியுள்ளார்.
நான் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்துள்ள பேட்டியில், இந்திய பிரதமர் மோடி சென்று விட்டு வந்த பின்னர் கூட தமிழனத்துக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை.
நாம் இங்கிருந்து கத்திக் கொண்டு இருப்பதால் தான் ஏதோ கொஞ்ச நஞ்ச உதவிகளும் அங்கே ஈழத்தமிழர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.
சர்வதேச அளவில் பிரச்னைகள் வரும் என்று சொல்லி இந்தியா அழுத்தம் கொடுத்தால் தான் இலங்கை அரசாங்கம் பெயரளவுக்காவது நல்லது செய்யும்.
இலங்கைக்கு போகவிருந்த ரஜினி அதை ரத்து செய்து விட்டதை பற்றி கேட்கிறீர்கள்.
அங்கே ரஜினி போனால் என்ன, மோடி போனால் என்ன.. யார் போயும் ஒரு பயனும் கிடையாது என சீமான் கூறியுள்ளார்.