பிரபல பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தை தெலுங்கில் எடுக்க உள்ளனர்.
இதில் நடிகை சமந்தா , கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளனர், முதலில் சாவித்திரி வேடத்தில்தான் சமந்தா நடிப்பதாக இருந்தது.
ஆனால் இப்போது சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறாராம்.
சமந்தாவுக்கு ஜெமினி கணேசனின் முதல் மனைவி வேடமாம்.
சமந்தா தான் கீர்த்தி சுரேஷை விட நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகை. உடல்வாகும் சாவித்திரியோடு ஒத்துப்போகும்.
ஆனால் சமந்தாவுக்கு திருமணம் என்பதால் மார்க்கெட் டல்லாகி விடும். கீர்த்தி சுரேஷ் என்றால் வியாபாரத்துக்கு பயன்படும் என்று மாற்றிவிட்டார்கள்.
நடிகையர் திலகத்தின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதா? என்று எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன.
படக்குழுவோ 'முதல் மனைவி கேரக்டர்தான் அதிகம் நடிக்க முக்கியத்துவம் வாய்ந்த . எங்க டைரக்டர் யோசிக்காம எதையும் செய்ய மாட்டார்' என்று சப்போர்ட் செய்கின்றனர் .