Tuesday, 16 May 2017

பூட்டிய அறைக்குள்.... பாலியல் தொழிலாளிகளின் ஊதியம் எவ்வளவு?



வங்கதேசத்தில் உள்ள Tangail மாவட்டத்தில் பாலியல் தொழில் என்பது சட்டரீதியாக நடைபெற்று வருகிறது.

ஏழை முதல் பணக்கார ஆண்கள் என பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் வரவேற்கிறது இந்த Kandapara.

இங்கு, 12 வயது முதலே பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். ஜேர்மன் நாட்டை சேர்ந்த Sandra Hoyn என்பவர் அங்குள்ள பாலியல் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை புகைப்படம் எடுத்துள்ளார்.

வீடுகள், தெருக்கள், கடைகள் என எப்போதும் ஒரே கூட்டமாகவே இருக்கிறது Kandapara.

அங்கு இருக்கும் பெண்கள் ஒரு சாதாரண குடிமகள்கள் போன்று நடத்தப்படுவதில்லை, அவர்களுக்கு சுதந்திரம் என்ற ஒன்று கிடையாது. அங்கு இருக்கும் பெண்கள் அதிகமாக ஏழ்மையான குடும்பத்தில் இருந்தே வருகின்றனர்.

அல்லது, கடத்தி கொண்டுவரப்பட்டு பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர்.

Meghla ( 23)

மெகல் என்பவர் தனது 12 வயதில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளார். தையல் நிறுவனத்தில் ஒன்றில் வேலைபார்த்துக்கொண்டிருந்த என்னை, அதிக சம்பளத்தில் வேலை வாங்கிதருவதாக கூறி, நபர் ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவிட்டார்.

இங்கிருந்து தப்பித்து செல்ல வேறு வழியின்றி, இந்த தொழிலையே செய்து வருகிறேன் என கூறுகிறார். பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு ஒரு பெண்ணின் சரியான வயது 18 என்றிருக்கையில், 12 வயது முதலே இங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கஜோல் 17

9 வயதில் திருமணம் செய்துகொண்ட கஜோலை அவரது மாமியார் பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்துவிட்டார். கஜோலுக்கு குழந்தை பிறந்த 2 வாரத்திலேயே வாடிக்கையாளருடன் உறவில் ஈடுபட வற்புறுத்தப்பட்டுள்ளார்.

அப்போதுதான், வியாபாரம் சூடுபிடிக்கும் என்பதற்காக, இங்கு இருக்கும் அதிகமான பெண்களின் மனதிலும் ஒரு தேடல் இருக்கிறது. என்றாவது ஒருநாள் நமக்கு நல்லதொரு எதிர்காலம் அமையாதா என்பதுவே அவர்களின் தேடலாக உள்ளது.

குறிப்பாக இங்கு வரும் வாடிக்கையாளர்கள், பாலியல் தொழிலாளர்களுடன் சேர்ந்தது புகைப்படம் எடுத்துக்கொள்வதை அனுமதிக்கவில்லை.

நாங்கள் செய்வது தவறு கிடையாது, எங்கள் மனதை இலகுவாக்கிகொள்ள மட்டுமே இங்கு வருகிறோம் என கூறிக்கொள்ளும் வாடிக்கையாளர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை.

மேலும், ஒரு சில பாலியல் தொழிலாளிகளும் புகைப்படம் எடுத்துக்கொள்வதை தர்மசங்கடமாக உணர்கிறார்கள், தாங்கள் செய்வது பாலியல் தொழில் என்றாலும், அதனை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்த விரும்பவில்லை.

அழகு, வயது, வாடிக்கையாளர்களை அறைக்குள் எவ்வாறு திருப்திபடுத்துகிறார்கள் என்பதற்கு ஏற்றவாறு ஒரு பாலியல் தொழிலாளிக்கான ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு 1000-2000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். ஒரு வாடிக்கையாளர்களுக்கு 300 ரூபாய் வாங்குகிறார்கள்.



Next

Related