கரூர் நாச்சியார் பட விவகாரம் தொடர்பாக நடிகை ஜோதிகா, டைரக்டர் பாலா ஆகியோர் மீது கரூர் கோர்ட்டில் இன்று மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டைரக்டர் பாலாவின் நாச்சியார் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரைலரின் நடிகை ஜோதிகா கெட்ட வார்த்தை பேசிய காட்சி இடம்பெற்றது.
இதற்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜன் மேட்டுப்பாளையம் ஜூடிஷியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை ஜோதிகா, இயக்குனர் பாலா மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. எனவே ஜோதிகா மீதும், அப்படத்தின் .இயக்குனர் பாலா மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
இதனால் ஜோதிகாவின் குடும்பத்தினர் மிகவும் கோபமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.