பாகிஸ்தானில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சொந்த மகளை கொலை செய்த தந்தைக்கு மகள் தக்க பாடம் புகட்டியுள்ளார்.
அப்பெண்ணின் பெயர் சபா... இவர் துப்பாக்கிச் சூடு வாங்கும் இவருக்கு வயது பதினெட்டு... நெஞ்சை உறையச் செய்திடும் இச்சம்பவம் டாக்குமெண்ட்ரியாக எடுக்கப்பட்டு ஆஸ்கர் விருது பெற்றது.
காய்சர் என்ற நபரை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் சபா. தனது அப்பா காதலுக்கு சம்மதம் தெரிவித்த மகிழ்ச்சியுடனும், கனவுகளுடனும் தனது காதலனுடன் அவ்வப்போது போனில் பேசிக் கொண்டிருந்தார்.
இவர்களின் காதலுக்கு வில்லனாக வந்தது இவரது மாமா.... காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாமா கொஞ்சம் கொஞ்சமாக அப்பாவின் மனதை மாற்ற ஆரம்பித்தார். காதலிக்கும் அந்த நபர் ஏழ்மையைக் கருதி மனதை மாற்றியுள்ளார்.
பின்பு தனது சொந்தக்கார நபர் ஒருவரை திருமணம் செய்து வைக்கலாம் என்று சபாவின் அப்பாவிடம் மாமா கூறியுள்ளார். உடனே பதறிய சபா அங்கு நடக்கும் சூழ்நிலையினை தனது காதலருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரிவித்தார். அவர்கள் அவரை இங்கு வந்து விடு நாங்கள் உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
திட்டமிட்டபடி வீட்டைவிட்டுச் சென்ற சபா அன்றே நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் செய்த அன்று இரவே இவர்களை பிரித்து சபாவினை பிரித்துவிட்டனர்.
பல்வேறு மிரட்டல்களை சந்தித்த சபா எதற்கும் துணிந்து நின்றார். இறுதியில் உறவினர்களின் கெஞ்சல்கள், குர்ஆன் மீது சத்தியம் எல்லாவற்றையும் அவதானித்த சபா இனி நம்மளை பிரிக்க மாட்டார்கள் என்று துணிந்து அவர்களுடன் சென்றார்ஃ
சில மணி நேரத்தில் வழியில் ஓரிடத்தில் காரினை நிறுத்தி உள்ளே உட்கார்ந்திருந்த சபாவை அவரது மாமா வெளியே இழுத்து கடுமையாக தாக்கியுள்ளார். தனனை விட்டுவிடும் படி கெஞ்சிக் கொண்டிருந்த சபாவின் குரலை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
ஒருவர் அவரது கையினை பிடிக்க அவரது மாமா அவரது கழுத்தினையும், வேறொருவர் அவரது தலையில் துப்பாக்கியினை பிடித்தனர். துப்பாக்கி முனையிலிருந்து தப்பிக்க அசைந்து கொண்டிருந்த சபாவின் கன்னத்தில் குண்டு நுழைந்தது. தலையில் சுடுவதற்கு வைத்த குறி தப்பிவிட்டது.
சம்பவ இடத்தில் மயங்கிய அவர் இறந்துவிட்டார் என்று அவர்கள் உறவினர்கள் அவரை மூட்டையாக கட்டி ஆற்றோரத்தில் வீசிவிட்டனர். இரவில் அங்கிருந்து தப்பிய அவரை சிலர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதன் பின்பு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மயக்கத்தில் இருந்த சபா கண்விழித்த போது விசாரணை நடத்தப்பட்டது. விபத்து என்று நினைத்துக் கொண்டிருந்த பொலிசாருக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது.
சபா கொடுத்த புகாரின் பெயரில் அவரது மாமா, அப்பாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை முடிந்து சபா காதலருடன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
குர்ரான் மீது அவர்கள் பொய் சத்தியம் செய்தார்கள். துன்புறுத்தவே மாட்டோம் என்று சொல்லிவிட்டு என்னை கொல்லத் துடித்தார்கள். அவர்களை ஒரு போதும் நான் மன்னிக்க மாட்டேன். என்ன நடந்தாலும் சரி, இடையில் யார் வந்தாலும் சரி. என் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் மன்னிப்பே கிடையாது என்று உறுதியாக சொன்னார் சபா.
தந்தையை சிறையில் அவதானிக்க சென்றவர்கள் சபாவினை புகாரை திரும்ப பெறுமாறு கூறியுள்ளனர். எதற்கும் சம்மதிக்காமல் இருந்த சபாவின் மீது அவர்களுக்கு இருந்த கோபம் மட்டும் குறையவே இல்லை.
நீதிமன்றத்தில் வைத்து தந்தையும், மாமாவும் கெஞ்சியுள்ளனர். அதனை காதில் வாங்கிக் கொள்ள மறுத்த சபா தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். தனது காதலனுடன் சந்தோஷமாக வாழ்ந்துள்ளார்.
திடீரென சபா மாமியாரிடம் ஊர்க்காரர்கள் வந்து பேச, மறுக்க முடியாமல் குழம்பிய மனநிலையில், சரி சொல்லுங்கள் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். கேஸை வாப்பஸ் வாங்கிடு என்பதனை ஒப்புக்கொண்டார். நீதிமன்றத்தில் தான் அப்பாவையும் மாமாவையும் மன்னிப்பதாக தெரிவிக்க இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். என் விதி என்ன சொல்கிறது என்று தெரியாது. மீண்டும் அவர்கள் கையாலயே கொல்லப்படலாம் யாருக்குத் தெரியும் என்கிறார் சபா. தற்போது ஒரு குழந்தையுடன் கணவர் வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.