Home
Astrology
Showing posts with label Astrology. Show all posts
Showing posts with label Astrology. Show all posts
Friday, 1 December 2017
சனி பார்வையால் துலாம் ராசிக்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்!
டிசம்பர் 19ஆம் திகதி காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார்.
சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார். சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 12வது இடம், 5வது இடம் 9வது இடங்களின் மீது விழுகிறது.
இதுவரை உங்கள் ராசிக்கு 2ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் சொல்ல முடியாத வகையில் துயரங்கள், வேதனைகள், வீண் விரயங்கள் மற்றும் பிரச்சனைகளை கொடுத்து வந்தார்.
அவர் இப்பொழுது உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சிறப்பு ஆகும். இதுவரை பட்ட கஷ்டத்திற்கு ஒரு விடிவு காலமாகும்.
படிப்பில் அதிகக் கவனம் தேவை. 3ம் இடத்தில் சனி சஞ்சாரம் ஞாபக சக்தி குறைவு ஏற்படும் என்பதால் சோம்பலை விட்டு சுறுசுறுப்பாக இருக்கவும்.தேவையற்ற விஷயங்களில் கவனத்தை திருப்ப வேண்டாம். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் சேர்வதில் நிறைய தடைகள் ஏற்பட்டு விலகும்.பலர் வேறு ஊருக்கு படிப்புக்காக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
முன்னோர்களின் ஆசி கிடைக்கும்...
சனிபகவான் தனது 3வது பார்வையாக உங்களின் ராசிக்கு 5வது இடத்தை பார்க்கிறார். 7ஆம் பார்வையாக ராசிக்கு 9வது இடத்தை பார்க்கிறார். 10ஆம் பார்வையாக ராசிக்கு 12வது இடத்தைப் பார்க்கிறார்.
பித்ருகளின் ஆசி கிடைக்கும். தந்தையினாலும் நன்மைகள் கிடைக்கும். சனி பகவான் 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 9ம் இடத்தை பார்வை செய்வதால் உயர்கல்வி பயிலுவதில் இதுவரை இருந்து வந்த தடைகளை நிவர்த்தி செய்வார். வெளிநாட்டு பயணங்கள் ஏற்படும்.
சனியின் பார்வை பஞ்சம ஸ்தானத்தில் விழுவதால் குழந்தைகளுக்கு வெற்றி கிடைக்கும்.
துலாம் ராசியில் ஜென்ம குரு அமாந்துள்ளார். வேலை தொடர்பான உயர்படிப்புகளை படிப்பீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலைகள் கிடைக்கும்.
குரு உங்களின் ஏழாம் இடத்தைப் பார்ப்பதால் காதல் கை கூடும். கணவன் மனைவி உறவிற்குள் உற்சாகம் ஏற்படும்.
சனிபகவானை சரணடையவும்...
தாயார் உடல் நலத்தின் மீது அதிக அக்கறை தேவை. சுவாச உறுப்புகளில் அலர்ஜி ஏற்படும். ரத்த அழுத்தம், ஜீரண உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யவும்.
ஸ்ரீவைகுண்டம் கைலாச நாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஈசன் சனிபகவானின் அம்சமாக திகழ்கிறார். அவரை வணங்கலாம்.
Tuesday, 28 November 2017
சனியின் கோரப்பார்வையில் இருந்து தப்பிவிட்டது சிம்மம்! தப்பிக்க போராடுபவர்கள் தாமதிக்காமல் படியுங்கள்!!!!
சனிபகவான் உங்கள் ராசிக்கு 5 ஆவது இடமான தனுசு ராசியில் புண்ணிய சனியாக சஞ்சாரம் செய்கிறார்.
சிம்மம் ராசியில் மகம், பூரம் , உத்திரம் 1ஆம் பாதம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்களையும், பரிகாரங்களையும் பார்க்கலாம்.
டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார்.
இதுநாள்வரை சிரமத்தில் இருந்தவர்கள் விடுதலை பெறுகிறார்கள். நோய் நொடிகள் பிரச்சினைகள் தீரும்.
சனிபகவானின் பார்வை தனுசில் இருந்து கும்பம், மிதுனம், கன்னி ராசி மீது விழுகிறது. சிம்மம் ராசிக்கு 2வது இடம்,7வது இடம் 11வது இடங்களின் மீது சனிபகவானின் பார்வை விழுகிறது.
பகைவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். அல்லல்பட்டவர்களுக்கு வியாதிகளில் இருந்து விடுதலை கிடைக்கும். குழந்தைகளின் படிப்பில் நாட்டம் குறையும். குழந்தைகளை கண்காணியுங்கள். கூட்டு குடும்பத்தில் சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் வந்து சேரும். குடும்பத்தில் குழப்பங்கள் வந்தாலும் அது நன்மையிலே முடியும்
புதிய வாய்ப்புகள் உருவாகும். திருமணம் நடைபெறாத சிம்ம ராசிக்காரர்களே காதல் வயப்படுவீர்கள். சனிபகவான் 7வது இடத்தை பார்ப்பதால் திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்படும். தொழில் பங்குதாரர்கள் பிரிந்து செல்ல வாய்ப்பு ஏற்படும். புதியதாக வீடு வாகனம் வாங்க ஏற்படும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு தனவரவை தரும் காரணம் 11வது இடத்தை 7வது பார்வையாக சனிபகவான் பார்க்கிறார். மூத்த சகோதர சகோதரிகள் அன்பும் ஆதரவும் கிட்டும். சனிபகவான் 2வது இடத்தை லாப ஸ்தானத்தை பார்க்கிறார்.
மூத்தவர்களிடம் ஆலோசனை பெறலாம். குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பணம் வரவும், அதே போல செலவும் ஏற்படும். சிக்கனம் அவசியம் சிம்மராசிக்காரர்களே.
சுறுசுறுப்பாக இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். கல்விக் கடன்கள் கிடைப்பதில் தடைகள் ஏற்படும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்க போராடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். உயர்கல்விக்காக ஒரு சிலர் வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். அவநம்பிக்கை தாழ்வு மனப்பான்மை விடுங்கள் வெற்றி நிச்சயம்.
உத்யோகத்தில் உயர்வை காண்பது சற்று கடினமாக இருக்கும். ஊதிய உயர்வும் எதிர்பார்த்த அளவு இருக்காது. எனவே கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்த பின் உங்களை ஸ்த்திரபடுத்திக் கொள்ளுங்கள் எதிரிகள் விஷயத்தில் அலட்சியம் காட்டுதல் கூடாது. சுய தொழில்களில் முதலீடு செய்வதில் அதிகக் கவனம் தேவை. தொழில் பங்குதாரர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. அடிக்கடி உடல் அசதி, சோர்வு அலைச்சல்களால் கால்வலி, அடிவயிற்று பிரச்சனைகளை சமாளித்து கொள்ள வேண்டி வரும். திருவாதவூரில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரனை எள் தீபம் போட்டு வழிபடலாம்.
பார்க்கும் வேலையில் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றி மறையும். பாஸ்போர்ட் விசா போன்றவற்றில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சரியாகி விடும்.
வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மனவருத்தங்களும் வந்து சேரும். காதல் விஷயங்களில் தேவையற்ற பிரச்சனைகளும் போராட்டங்களும் ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். திருச்செந்தூர் முருகனை தரிசித்து வந்தால் திருப்பம் ஏற்படும்.
குடும்பத்தில் இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். இனி உங்களை அறியாமலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.
மனசஞ்சலம் தடுமாற்றம் இல்லாமல் ஒரே சீராக எடுத்த காரியத்தை முடிக்க முயல்வீர்கள். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள் அமையும். காதல் கைகூடும் குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும்.
தப்பிக்க போராடுபவர்கள்...
ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். அனுமன் துதியை கேளுங்கள் உற்சாகம் தானாக கிடைக்கும்.
Friday, 24 November 2017
பிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்னை பற்றி அறிவது எப்படி?
ஒருவர் பிறந்த மாதத்தை வைத்து அவர்களது குணாதிசியங்களை இங்கு அறிந்துக்கொள்ளுங்கள்.
ஜனவரி
ஜனவரி மாதம் பிறந்த பெண்கள் போர் வரம் கொண்டவர்கள். லட்சியங்கள் அதிகம் உள்ளவர்களாகவும் திகழ்வர். எந்த ஒரு விடயத்தையும் சிரியசாக எடுத்துக்கொள்வார்கள். இவர்களது உணர்வுகளை அவ்வளவு சீக்கரமாக வெளிப்படையாக கூறமாட்டார்கள். இவர்களை பேன்றே ஈர்க்கும்நபர்காளுடம் தான் அதிகம் பழகுவார்கள்.
பிப்ரவரி
பிப்ரவரி மாதம் பிறந்த பெண்கள் சற்று ரொமாண்டிக்காக இருப்பார்கள். இவர்களிடம் பொருமை காத்து பழகவேண்டும். அனைவராலும் இவர்களை புரிந்துக்கொள்ள முடியாது. இவர்களது மூட் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.
மார்ச்
மார்ச் மாதம் பிறந்த பெண்கள் வலிமையான கவர்ச்சி இருக்கும். இவர்கள் எளிதாக அனைவரையும் ஈர்த்துவிடுவார்கள். மிக நேர்மையான மற்றும் ஆழுமை செலுத்தும் நபர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அவ்வளவு எளிதாக காதல் வயப்படமாட்டார்கள். பழக எளிமையானவர்கள்.
ஏப்ரல்
ஏப்ரல் மாதத்தில் பிறந்த பெண்கள் இவர்கள் அனைவரும் மிக எளிதாக பழகி பேசி விடுவார்கள். சிலர் பொறாமை குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். தங்கள் முழுமையாக நம்பும் நபர்களிடம் மட்டுமே தங்களை பற்றிய விடயங்களை பகிர்ந்துக்கொள்வார்கள்.
மே
மே மாதம் பிறந்த பெண்கள் உறுதியான விடாபிடியான குணம் கொண்டவர்கள். நேர்மறையாக பழகுவார்கள். இவர்களுக்கென தனி கோட்பாடுகள் இருக்கும். இவர்களிடம் எளிதாக பழகிவிட முடியாது. காதலில் விழுவதும் கடினம்.
ஜூன்
ஜூன் மாதம் பிறந்த பெண்கள் கர்ப்பனை திறன் அதிகம் கொண்வர்கள். நீங்கள் நினைத்து இருக்கும் முன்னறே அதை பேசி முடித்துவிடுவார்கள். ஒளிவு மறைவின்றி நடந்து கொள்வர்.
ஜூலை
ஜுலை மாதம் பிறந்த பெண்கள் நேர்மை, அறிவு, அழகு, மர்மம், மோதல்கள் பல ஏற்பட்டாலும் அதனை கடந்து வாழ நினைப்பவர்கள். அனைவரிடமும் கவனமாக நடந்துக்கொள்வார்கள். இவர்களை ஏமாற்றிவிட்டால் மறந்து விட வேண்டியதுதான் இவர்களை.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதம் பிறந்த பெண்கள் தனித்துவமானவர்கள். தன்னம்பிக்கை, நல்ல உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் மோத நினைத்தால் இவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் இவர்கள் தான் அனைவராலும் ஈர்க்கப்படுவார்கள்.
செப்டம்பர்
செப்டம்பர் மாதம் பிறந்த பெண்கள் அன்பு, கட்டுப்பாடு, அழகின் கலவை, யாரையும் அவ்வளவு எளிதாக மன்னித்துவிட மாட்டார்கள். இவர்களுக்கு குறுகிய கால உறவுகள் பிடிக்காது. ஒருவருடம் பழகினால் அவர்களுடம் நீண்ட நாள் இணைந்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
அக்டோபர்
அக்டோபர் மாதம் பிறந்த பெண்கள் உணர்ச்சிவசபடகூடிய பெண்கள். அனைவரிடமும் வெளிப்படையாக பேசமாட்டார்கள். தங்கள் மீது பொறாமை கொள்ளும் நபர்கலையும் வெறுக்கமாட்டார்கள்.
நவம்பர்
நவம்பர் மாதம் பிறந்த பெண்கள் மற்றவர்களை விட ஒருபடி முன்னே இருக்க ஆசைபடுவார்கள். பொய்களை வேகமாக கண்டுபிடித்து விடுவார்கள். உண்மையாக இருக்க விருப்பப்படும் இவர்கள் உண்மையை மட்டுமே கேட்க விரும்புவார்கள்.
டிசம்பர்
டிசம்பர் மாதம் பிறந்த பெண்களிடம் பெருமை பெரிதாக இருக்காது ஆனால் இவர்கள் லக்கியாக நபர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக்கொண்டு வெற்றி பெருவார்கள். திறந்த மனதுடன் பேசுவார்கள்.
Wednesday, 22 November 2017
உங்களைப் பற்றி கால் விரல் கூறும் ரகசியம் தெரியுமா?
நம் கைரேகையை வைத்து நம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பது வழக்கம். அதே போல கண்கள், மூக்கு, முகத்தின் வடிவம், நகங்கள் போன்றவற்றை வைத்து ஒருவரின் குணாதிசியங்கள் சிலர் கணிப்பது வழக்கம்.
இது ஒருபுறமிறக்க நமது பாதத்தின் அளவு, கால் விரல்களின் அளவு வைத்து ஒருவரின் குணாதிசியங்களை பற்றி சொல்ல முடியுமாம் . இதை குறித்து இங்கு பார்ப்போம்.
வளைவுகளின் உயரம்
பெரிய வளைவுகளைக் கொண்டவர்கள், மற்றவர்களின் கருத்துக்களை கேட்கமாட்டார்கள். இவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் மற்றும் வெளிப்படையாக எதையும் பேசாமல் தன்னுள் வைத்துக் கொள்வார்கள். இவர்கள் எப்போதும் தனிமையை விரும்புவார்கள்.குறைந்த வளைவு கொண்டவர்கள், எப்போதும் மற்றவர்களை சார்ந்து வாழ்வதோடு, எந்த ஒரு செயலை செய்யும் முன்னும் மற்றவர்களின் அனுமதியை நாடுவார்கள். எதையும் வெளிப்படையாக பேசுபவர்கள் மற்றும் தனிமையை விரும்பமாட்டார்கள்.
கட்டைவிரல் நீளம்
கால் கட்டைவிரல் மற்ற விரல்களை விட நீளமாக இருந்தால், அவர்கள் தாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தெளிவாக இருப்பதோடு, எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண நினைப்பார்கள்.
இரண்டாம் விரல்
கட்டைவிரலுக்கு அருகில் உள்ள இரண்டாம் விரல் நீளமாக இருப்பவர்கள், துணிச்சல் மிக்கவர்கள், பாதகமான சூழ்நிலையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், பேச்சுத்திறமை மிக்கவர்களாக இருப்பார்கள்.
ஒருவேளை இரண்டாம் விரல் சிறியதாக இருந்தால், அவர்கள் மற்றவர்களுக்கு தலைமைத்துவத்தை விட்டுக் கொடுப்பார்கள். அதாவது இவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகம் இருக்கும்.
நடுவிரல்
நீளமான நடுவிரலைக் கொண்டவர்கள் வணிகத் தீர்வுகள் என்று வரும் போது வலிமையானவராக இருப்பார்கள். மேலும் இவர்களிடம் எந்த ஒரு கேள்விக்கும் பதில் இருக்கும். மொத்தத்தில் தைரியசாலி. ஒருவேளை நடுவிரல் சிறியதாக இருந்தால், இவர்கள் மிகவும் சென்சிடிவ்வானவர்கள். இவர்களால் எந்த ஒரு பிரச்சனைக்கும் சரியாக தீர்வு காண முடியாது.
நான்காம் விரல்
நான்காம் விரல் குடும்பத்தைக் குறிக்கும். அதாவது நான்காம் விரல் நீளமாக இருந்தால், அவர்கள் உறவினர்களுடன் நன்கு நெருக்கமாக இருப்பதோடு, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பார்கள். அதுவே நான்காம் விரல் சிறியதாக இருந்தால், இத்தகையவர்கள் குடும்பத்தை சார்ந்து இருக்கமாட்டார்கள்.
கடைசி விரல்
கடைசி விரல் அனைவருக்குமே சிறியதாகத் தான் இருக்கும். பெரும்பாலானோரால் கடைசி விரலை தனியாக அசைக்க முடியாது. ஒருவேளை அப்படி தனியாக அசைக்க முடிந்தவராயின், நீங்கள் மற்றவர்களை எளிதில் கவரக்கூடியவர்கள்.
இது ஒருபுறமிறக்க நமது பாதத்தின் அளவு, கால் விரல்களின் அளவு வைத்து ஒருவரின் குணாதிசியங்களை பற்றி சொல்ல முடியுமாம் . இதை குறித்து இங்கு பார்ப்போம்.
வளைவுகளின் உயரம்
பெரிய வளைவுகளைக் கொண்டவர்கள், மற்றவர்களின் கருத்துக்களை கேட்கமாட்டார்கள். இவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் மற்றும் வெளிப்படையாக எதையும் பேசாமல் தன்னுள் வைத்துக் கொள்வார்கள். இவர்கள் எப்போதும் தனிமையை விரும்புவார்கள்.குறைந்த வளைவு கொண்டவர்கள், எப்போதும் மற்றவர்களை சார்ந்து வாழ்வதோடு, எந்த ஒரு செயலை செய்யும் முன்னும் மற்றவர்களின் அனுமதியை நாடுவார்கள். எதையும் வெளிப்படையாக பேசுபவர்கள் மற்றும் தனிமையை விரும்பமாட்டார்கள்.
கட்டைவிரல் நீளம்
கால் கட்டைவிரல் மற்ற விரல்களை விட நீளமாக இருந்தால், அவர்கள் தாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தெளிவாக இருப்பதோடு, எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண நினைப்பார்கள்.
இரண்டாம் விரல்
கட்டைவிரலுக்கு அருகில் உள்ள இரண்டாம் விரல் நீளமாக இருப்பவர்கள், துணிச்சல் மிக்கவர்கள், பாதகமான சூழ்நிலையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், பேச்சுத்திறமை மிக்கவர்களாக இருப்பார்கள்.
ஒருவேளை இரண்டாம் விரல் சிறியதாக இருந்தால், அவர்கள் மற்றவர்களுக்கு தலைமைத்துவத்தை விட்டுக் கொடுப்பார்கள். அதாவது இவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகம் இருக்கும்.
நடுவிரல்
நீளமான நடுவிரலைக் கொண்டவர்கள் வணிகத் தீர்வுகள் என்று வரும் போது வலிமையானவராக இருப்பார்கள். மேலும் இவர்களிடம் எந்த ஒரு கேள்விக்கும் பதில் இருக்கும். மொத்தத்தில் தைரியசாலி. ஒருவேளை நடுவிரல் சிறியதாக இருந்தால், இவர்கள் மிகவும் சென்சிடிவ்வானவர்கள். இவர்களால் எந்த ஒரு பிரச்சனைக்கும் சரியாக தீர்வு காண முடியாது.
நான்காம் விரல்
நான்காம் விரல் குடும்பத்தைக் குறிக்கும். அதாவது நான்காம் விரல் நீளமாக இருந்தால், அவர்கள் உறவினர்களுடன் நன்கு நெருக்கமாக இருப்பதோடு, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பார்கள். அதுவே நான்காம் விரல் சிறியதாக இருந்தால், இத்தகையவர்கள் குடும்பத்தை சார்ந்து இருக்கமாட்டார்கள்.
கடைசி விரல்
கடைசி விரல் அனைவருக்குமே சிறியதாகத் தான் இருக்கும். பெரும்பாலானோரால் கடைசி விரலை தனியாக அசைக்க முடியாது. ஒருவேளை அப்படி தனியாக அசைக்க முடிந்தவராயின், நீங்கள் மற்றவர்களை எளிதில் கவரக்கூடியவர்கள்.
Monday, 20 November 2017
நீங்க புகழுக்கு சொந்தக்காரர் நீங்கள் தான்...! உங்கள் ராசி இதில் இருக்கானு பாருங்களேன்...
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நவக்கிரகங்களில் சுக்ரன் எனப்படும் அசுர குரு, நமது சுய ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் கலைத் துறையில் ஈடுபடும் யோகம் கிடைக்கும்.
அதுவும் ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு ராசிநாதனாக சுக்ரனே உள்ளார். அதனால் இவர்களுக்கு கலைத்துறை யோகம் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஒருவரின் ஜாதகத்தில் சுக்ரன் லக்னாதிபதியாகவும், தொழில் ஸ்தானாதிபதியாகவும் பலம் பெற்றிருந்தாலும், சந்திரன் அல்லது சுக்ரன் அம்சத்தில் பலம் பெற்றிருந்தாலும், கலைஞன் என்று வர்ணிக்கப்படும் சுக்ரனின் ஆதிக்கத் திகதியில் பிறந்தவர்களாக இருந்து, தங்கள் பெயரையும் சுக்ரனின் ஆதிக்கத்தில் அமைத்துக் கொண்டவர்கள், சுய ஜாதகத்திலும் தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் பார்வை பதிந்து இருக்கும்.
இவ்வாறான ஜாதக அமைப்பினை கொண்டவர்களுக்கு கலைத்துறை, வானொலி, தொலைக்காட்சி நிலையங்களில் பணிபுரிந்து நிரந்தரப் புகழுக்குச் சொந்தக்காரர்களாக விளங்கும் யோகம் உண்டாகும்.
Friday, 10 November 2017
இந்த வார ராசி பலன்!!!
செவ்வாய், குரு, புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். தாமதித்த பணியில் முன்னேற்றம் ஏற்படும். எவரிடமும் நிதானித்து பேசுவது நல்லது. வாகனத்தில் பராமரிப்புபணி செய்வதால் பயணம் எளிதாகும். புத்திரரின் கருத்திற்கு முக்கியத்துவம் தருவீர்கள். விரும்பிய உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள். மனைவியின் செயல்பாடு நிம்மதிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் தடைகள் குறுக்கிடலாம். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் மதித்து பணிபுரிவது நல்லது. பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் வேண்டும். மாணவர்கள் கூடுதல் பயிற்சியால் சீரான மதிப்பெண் பெறலாம்.
ரிஷபம்:
ராகு சுக்கிரன் சூரியன் அளப்பரிய நன்மை தருவர். நண்பரின் ஆறுதல் பேச்சு மனதில் நம்பிக்கை வளர்க்கும். வாழ்வில் வளர்ச்சிக்கான புதிய செயல் திட்டம் உருவாகும். தாய்வழி உறவினர்களால் உதவி கிடைக்கும். புத்திரர் நல்வழியில் நடந்து நற்பெயர் பெறுவர். ஆரோக்கியம் பலம் பெறும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வெளியூர் பயணத்தால் பணச்செலவு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும். பணியாளர்கள் பொறுப்புணர்வுடன் பணி புரிந்து சலுகை பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
மிதுனம்:
புதன், குரு, சுக்கிரன் சனீஸ்வரர் நற்பலன்களை வழங்குவர். பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். புத்திரர் பெற்றோர் சொல்லை வேதமென ஏற்றுக் கொள்வர். நோய் தொந்தரவு குறையும். வழக்கில் நல்ல முடிவு கிடைக்கும். மனைவியின் சொல்லும் செயலும் குடும்பநலனுக்கு வழிவகுக்கும். தொழில்,வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி மேற்கொள்வீர்கள். லாபம் உயரும். பணியாளர்கள் புதிய தொழில் நுட்பங்களை ஆர்வமுடன் கற்பர். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். பெண்களுக்கு தாய்வழி உறவினரின் அன்பை பெறுவர்.
மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் மேம்படும்.
கடகம்:
செவ்வாய், சந்திரன், சுக்கிரனால் நன்மை உண்டாகும். அன்றாட நடைமுறை வாழ்வில் இருந்த சிரமம் குறையும். உங்களைஅவமதித்தவரும் அன்பு பாராட்டுவர். வாகனப்பயணம் இனிய அனுபவம் தரும். புத்திரரின் அறிவுப்பூர்வமான செயல்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். நோய் தொந்தரவு குறையும். குடும்பத்தில் சுபவிஷய பேச்ச நடந்தேறும். உறவினர் வருகை மகிழ்ச்சி தரும். மனைவி அன்பு பாசத்துடன் நடந்து கொள்வார். தொழில் வியாபாரத்தில் இடையூறு விலகி பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் ஈடுபடுவர்.
சிம்மம்:
சூரியன், சுக்கிரன், கேது, புதன் அதிக நன்மை தருவர். மனதில் சாந்த குணம் நிறைந்திருக்கும். நண்பர்களின் ஆலோசனையை ஏற்று பின்பற்றுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க நிதியுதவி கிடைக்கும். புத்திரர் படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். நிர்பந்த கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரம் செழித்து லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதில் பூர்த்தி செய்வர். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் போட்டியில் பங்கேற்று பரிசு பெறுவர்.
கன்னி:
ராகு, குரு, சுக்கிரன், சனீஸ்வரர் அனுகூல அமர்வில் உள்ளனர். பேச்சில் இனிமை வெளிப்படும். எதிர்பார்த்த நன்மை எளிதில் வந்து சேரும். வீடு வாகனத்தில் தேவையான மாற்றம் செய்வீர்கள். பூர்வ புண்ணிய பலன் நல்ல விதமாக துணை நிற்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்து கொள்வீர்கள். மனைவி வழி சார்ந்த உறவினர்களின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய மாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பு மூலம் வருமானம் காண்பர். பெண்கள் தாய் வீட்டு உதவியை கேட்டுப் பெறுவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
துலாம்:
சுக்கிரன், சந்திரனால் நற்பலன் கிடைக்கும். அன்றாட பணிகளில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புத்திரர் எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து லாபம் கூடும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கு நிறைவேற்றுவர். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும்.
விருச்சகம்:
செவ்வாய், சுக்கிரன், கேது நற்பலன் வழங்குவர். மனதில் நிம்மதி நிறைந்திருக்கும். நண்பர்களின் மத்தியில் மதிப்பு உயரும். வாகனப்பயணம் அளவுடன் மேற்கொள்வீர்கள். தாராள பணச்செலவில் புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு நடக்கும். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் தர வேண்டாம். மனைவி கருத்திணக்கமுடன் நடந்து கொள்வார். உறவினர்களின் வாழ்த்து கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு கடனுதவி கிடைக்கும். பெண்கள் குடும்பத்தினர்களின் பரிபூரண அன்பை பெறுவர். மாணவர்கள் படிப்பில் உரிய பயிற்சி வேண்டும்.
தனுசு:
சூரியன், குரு, சந்திரனால் நன்மை உண்டாகும். எதிர்ப்பாளரால் இருந்த தொல்லை விலகும். வாழ்வில் புதிய நல்ல மாற்றம் உருவாகும். உடன்பிறந்தவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாகனப் பயணத்தால் நன்மை அதிகரிக்கும். புத்திரரின் குளறுபடியான செயல்களை இதமுடன் சரி செய்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். வழக்கு, விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். மனைவியின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வெளியூர் பயணத்தின் மூலம் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்புக்கேற்ப வருமானம் காண்பர். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.
மகரம்:
சூரியன், புதன், சுக்கிரன், சனீஸ்வரர் அனுகூல அமர்வில் உளளனர். சாதனை நிகழ்த்தும் எண்ணத்துடன் பணியில் ஈடுபடுவீர்கள். வளர்ச்சிக்கான சூழ்நிலை உருவாகும். தம்பி தங்கைக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். வீடு வாகனத்தில் உரிய பாதுகாப்பு நடைமுறை பின்பற்றவும். புத்திரரின் செயல்கள் பாராட்டும் விதத்தில் இருக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். நண்பரிடம் கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணியில் ஈடுபடுவீர்கள். சுற்றுலா பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்படும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். பெண்கள் தாராள பணவசதியுடன் சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை தவிர்க்கவும்.
கும்பம்:
புதன், குரு, சுக்கிரன், ராகு அளப்பரிய நற்பலன் வழங்குவர். பணிகளில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர் வகையில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். தாய்வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். பிள்ளைகள் அறிவாற்றல், செயல் திறனில் மேம்படுவர். ஆரோக்கியம் பலம் பெறும். சிரமம் அணுகாத சுமுக வாழ்வு உருவாகும். மனைவியின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பெண்கள் உறவினர்களை உபசரித்து மகிழ்வர். மாணவர்கள் விரும்பிய பொருட்களை பெற்றோர் வாங்கித் தருவர்.
மீனம்:
கேது, சந்திரனால் நன்மை கிடைக்கும். திட்டமிட்ட செயல் நிறைவேற கூடுதல் முயற்சி உதவும். உடன்பிறந்தவரால் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வீடு வாகனத்தில் பாதுகாப்பு நடைமுறையை பலப்படுத்தவும். பிள்ளகைளின் உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். பகைவரின் கெடுசெயல் உணர்ந்து விலகுவது நல்லது. பெறறோர் தேவையறிந்து உதவ முன்வருவீர்கள். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது நன்மைக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும். பணியாளர்கள் அதிக பணம் கடன் பெற வேண்டாம். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பு தவிர பிற விஷயம் பேச வேண்டாம்.
உங்க கையில இந்த ரேகை இருக்குதா?.. அப்போ பணம் கொட்டுமாம்!
இந்த திரிசூலம் போன்ற குறியுடைய ரேகை ஒருவரது கையில் இருந்தால் மிகவும் ராசியானவர் என கூறப்படுகிறது. இந்த மூன்று கூர்மையான கோடுகள் இணைந்துள்ள ரேகையை ஆங்கிலத்தில் Trident என கூறுகிறார்கள்.
இந்த ரேகை இருப்பவரது வாழ்வில் செல்வம் கொட்டும் எனவும் கூறப்படுகிறது. மேலும், இதன் மூலம் அடையும் ஆன்மீக பலனால் ஆரோக்கியமான வாழ்க்கை பெறுவார்கள், தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த திரிசூலம் போன்ற ரேகை கையில் எங்கெங்கே இருந்தால், என்னன்னா பலன்கள் கூறப்படுகிறது என இந்த தொகுப்பில் காணலாம்...
சுக்கிர மேடு!
இந்த திரிசூல ரேகை சுக்கிர மேட்டில் காணப்பட்டால், அவர் காதல் வாழ்வில் மிகவும் லக்கியான நபராக கருதப்படுகிறார். அதே நேரத்தில் அவர் மற்ற நபர்களை எளிதாக புரிந்து வைத்துக் கொள்வார் என்றும் கூறுகிறார்கள். தன்னை சுற்றி நல்ல விஷயங்களை பாராட்ட தயங்காத நபராகவும் இருப்பார்.
செவ்வாய்
செவ்வாய் ரேகை, கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலுக்கு நடுவே இந்த ரேகை அமைந்திருந்தால் அவர்களது வாழ்க்கை மிகவும் வெற்றிகரமானதாக அமையும். அவர்கள் செய்யும் தொழில், வேலையில் சிறந்து காணப்படுவார்கள்.
அதுவே அதற்கு நேர் எதிர் பக்கம் சுண்டு விரலுக்கு கீழ் அமைந்திருந்தால் அவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்ந்தாலும், அவ்வப்போது வாழ்வில் தொல்லைகள் வந்துக் கொண்டே இருக்கும்.
புத்தி!
புத்தி ரேகையில் இந்த திரிசூல ரேகை அமைந்திருந்தால், அவர்கள் செய்துக் கொண்டிருக்கும் வேலை, தொழில் செம்மையாக அமையும். வெற்றிப்பாதையில் செல்லும். இவர்களின் பேச்சு திறன் இவர்களது வெற்றிக்கு உறுதுணையாக அமையும்.
சந்திர மேடு!
சந்திர மேட்டில் இந்த திரிசூல ரேகை அமைந்திருந்தால் அவர்கள் கற்பனை மற்றும் செயற்திறனில் மேம்பட்டு காணப்படுவார்கள். மேலும், இவர்கள் இயற்கையாகவே மிக ரொமாண்டிக்கான நபராக இருப்பார்கள்.
இதய ரேகை!
இவர்கள் உணர்வு ரீதியாக, மன ரீதியாக, உடல் ரீதியாக மிகவும் வலிமையான நபராக இருப்பார்கள். இவர்கள் இந்த அனைத்திலும் சமநிலையில் இருப்பார்கள். இவர்களிடம் செல்வம் வந்து சென்று கொண்டே இருக்கும்.
விதி!
விதி ரேகையில் திரிசூல அமைப்பு இருப்பது, தெள்ளத்தெளிவாக, அந்நபரின் வாழ்க்கை வெற்றிகரமாகவும், பணத்திற்கு பஞ்சம் இல்லாமலும் இருக்க செய்யும் என்பதை குறிக்கிறதாம். இவர்கள் நிலம் சார்ந்த தொழிலில் சிறந்து விளங்க வாய்ப்புகள் உள்ளன.
புதன்!
இந்த திரிசூல அமைப்பு புதன் ரேகையில் அமைந்திருந்தா அவர்கள் தங்கள் நிலையில் இருந்து மேம்பட வாய்ப்புகள் உண்டு. பிரமோஷன், தொழில் அடுத்த நிலைக்கு முன்னேறுவது, புதிய கிளைகள் துவங்குவது என நல்லவை நடக்கும். தங்கள் பேச்சு திறனால் பார்வையாளர்கள், கஸ்டமர்களை எளிதாக ஈர்த்துவிடுவார்கள்.
குரு!
குரு பகுதியில் திரிசூல ரேகை அமைப்பு இருந்தால் அவர்கள் வெற்றி பெறுவது மட்டுமின்றி, அதற்கான சிறந்த அங்கீகாரமும் பெறுவார்கள். இவர்களது இலட்சியங்கள் நிறைவேறும். தலைமை பொறுப்பு இவர்களை தேடி வரும்.
சனி!
இவர்கள் அதிக புத்திசாலியாக இருப்பார்கள். இவர்களை வைத்து பொருளீட்டுவது எளிது. செல்வம் என்பதை தாண்டி, சிறப்பான முறையில் வெற்றிகளை குவிக்கும் நபர்களாகவும் இருப்பார்கள். தங்கள் பொறுமை மற்றும் கடின உழைப்பால் அனைத்தையும் சாத்தியம் ஆக்குவார்கள்.
சூரியன்!
சூரிய ரேகையில் இந்த திரிசூலம் அமைப்பு பெற்றிருந்தால் அவர்கள் வெற்றி, செல்வம் என்பதை தாண்டி அதிக புகழ் பெற்று திகழ்வார்கள். கைரேகைகளில் இந்தஸ் திரிசூல ரேகை மிகவும் அதிர்ஷ்டம் தரும் ரேகையாக காணப்படுகிறது.
Thursday, 9 November 2017
வீட்டில் பணம் தங்கலையா?… அதுக்கு நீங்க செய்ய வேண்டிய மிகச்சிறிய பரிகாரம் இதுதான்…
நம்முடைய வீட்டில் எவ்வளவு தான் சேமித்து வைத்தாலும் செல்வம் தங்குவதில்லை என்று வருத்தப்படுகிறீர்களா? கவலைப்படாதீங்க… அதற்கும் சில பரிகாரங்கள் உண்டு. மேலைநாடுகளிலும் சில மாந்திரீக முறைகள் இதற்காகப் பின்பற்றப்படுகின்றன.
இந்த பரிகாரங்களை எல்லா நாள்களிலும் செய்யலாம். இதற்கென தனியே கால நேரம் பார்க்கத் தேவையில்லை. ஆனால் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி இடைவெளியில் இதைச் செய்தால் பலன் இரட்டிப்பாகும்.
ஒரு சிறிய வெள்ளி அல்லது கண்ணாடி கின்னத்தை எடுத்துக் கொண்டு அதில் உப்பு, சர்க்கரை, அரிசி மூன்றையும் சமஅளவு எடுத்துக் கொண்டு அதற்கு நடுவில் ஒரு குத்தூசியை (safty pin) ஒன்றை மேல்நோக்கி இருக்கும்படி குத்தி வைக்க வேண்டும்.
இதை அப்படியே கையில் ஏந்திக் கொண்டு, தங்களுடைய விருப்பக் கடவுளிடம் மனதைவிட்டு, துன்பங்களைப் போக்குமாறும் செல்வ வளம் தரும்படியும் வேண்டிக்கொண்டு, பின் அந்த கின்னத்தை மூடாமல், திறந்திருக்கும்படி வீட்டின் ஏதேனும் ஒரு மறைவான மூலையில் வைக்க வேண்டும்.
தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கியும் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கியும் வைத்தால் பலன் இரட்டிப்பாகும்.
இதை தினமும் 2 நிமிடமாவது தொட்டு வணங்கிக் கொள்ள வேண்டும். இதை தினமும் செய்து வந்தால், அன்றாடம் உங்கள் வீட்டுப் பொருளாதாரத்தில் நல்ல மாற்றம் உண்டாவதை உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.
அந்த கின்னத்தில் தூசி படிந்தபின், அதை மாற்றிவிட்டு அதேபோல் வேறு ஒரு கின்னத்தை வைத்து வழிபட ஆரம்பிக்கலாம். இதை இத்தனை நாள் தான் செய்ய வேண்டும் என்றில்லை. வாழ்நாள் முழுவதும் கூட இதை கடைபிடிக்கலாம்.
இவ்வாறு செய்து வருவதால் வீட்டில் வளமும் செல்வமும் அதிகரிக்கும்.
Wednesday, 8 November 2017
உங்கள் பிறந்த நாளின் கூட்டுத்தொகை என்ன? காத்திருக்கும் அதிர்ஷ்டம்
ஒருவர் பிறந்த திகதியின் கூட்டுத்தொகைப்படி, எந்த வகையான பொருட்களை வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பதை பொருத்து அதிர்ஷ்ட பலனை பெறலாம்.
எந்த கூட்டுத்தொகை எண்ணிற்கு என்ன பொருளை வீட்டில் வைக்க வேண்டும்?
- பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை 1-ஆக இருந்தால், அவர்கள் புல்லாங்குழலை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருக்க வேண்டும்.
- பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை 2-ஆக இருந்தால், அவர்கள் வெள்ளை நிறத்திலான ஷோ பீஸை வீட்டின் வட-தென் திசையில் வைத்திருக்க வேண்டும்.
- பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை 3-ஆக இருந்தால், அவர்கள் வீட்டின் வடகிழக்கு திசையில் முழு ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும்.
- பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை 4-ஆக இருந்தால் அவர்கள், பெரிய கண்ணாடியை வீட்டில் தென்மேற்கு திசையில் வைத்திருக்க வேண்டும்.
- பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை 5-ஆக இருந்தால், அவர்கள் வெள்ளியிலான விளக்கு மற்றும் நீலநிறக் கல்லை வீட்டின் வடமேற்குப் பகுதியில் வைத்திருக்க வேண்டும்.
- பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை 6-ஆக இருந்தால், அவர்கள் வீட்டில் தென்கிழக்கு திசையில் மயில் இறகை வைத்திருக்க வேண்டும்.
- பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை 7-ஆக இருந்தால், அவர்கள் வீட்டின் தென்கிழக்கு திசையில் அடர் பழுப்பு நிறமுள்ள ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும்.
- பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை 8-ஆக இருந்தால், அவர்கள் கருப்பு நிற கிரிஸ்டலை வீட்டின் தென் திசையில் வைத்திருக்க வேண்டும்.
- பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை 9-ஆக இருந்தால், அவர்கள் வீட்டின் தென் திசையில் பிரமீடு வைத்திருக்க வேண்டும்.
- பலன்கள்
மேலே கூறப்பட்டுள்ள பிறந்த திகதியின் கூட்டுத்தொகை எண்ணிற்கு ஏற்ற பொருளை வீட்டில் வைப்பதால், வீட்டில் உள்ள கெட்ட ஆற்றல் முழுவதும் வெளியேறி, செல்வ வளம் பெருகும்.
Subscribe to:
Posts (Atom)


















