Home
Mystery
Showing posts with label Mystery. Show all posts
Showing posts with label Mystery. Show all posts
Sunday, 17 December 2017
Friday, 1 December 2017
இந்த குடிமகன் கேட்கும் கேள்வியை பாருங்கள்.. நீங்களே ஆடிப்போய்டுவீங்க
மது அருந்தினால் அவர்கள் போதையில் செய்யும் செயல் கொஞ்சம் நெஞ்சம் இல்லை. மனதில் உள்ளதை எவ்வித பயமும்மின்றி அப்படியே பேசுவார்கள்.
அப்படி இந்த நபர் பேசியதில் சில நல்ல விடயமும் உள்ளது. இவர் பொலிசிடம், டெங்கு காய்ச்சலை தடுக்க உங்களிடம் எதாவது மருந்து உள்ளதா? காசு கொடுத்து குடிக்கும் என்னை ஊத சொல்கிறீர்கள் என்கிறார்.
மேலும் அவர் மனதில் பட்ட பல விடயங்களை பொலிஸ்காரர்களிடம் கேட்டுகும் காட்சியை நீங்களே இந்த காணொளியில் பாருங்கள்...
ஒருவர் விரைவில் இறக்க போகிறார் என்பதை வெளிகாட்டும் முதல் அறிகுறி இதுதானாம்!.
புதிய ஆய்வொன்றில், நுகரும் உணர்வை இழப்பது, மரணத்தை குறிக்கும் அறிகுறிகளில் ஒன்று என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது வயது, பாலினம், டிமென்ஷியாஎனும் மன சோர்வு நோய் சார்ந்து வேறுபடும் என்றும் கூறியுள்ளனர்.
ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம்! இந்த ஆய்வு ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வை நடத்தியவர் டாக்டர் ஜோன்ஸ் எனும் முதன்மை ஆராய்ச்சியாளர் ஆவார்
ஆய்வு! இந்த ஆய்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். ஆய்வில் கலந்துக் கொண்டவர் 40 – 90 வயதுக்குட்பட்டவர்கள்.
8% சுகாதாரம் மற்றும் அறிவாற்றல் சார்ந்து யாரெல்லாம் சரியாக நுகரும் திறன் கொண்டிருந்தனரோ அவர்கள் எல்லாம் 8% இறக்கும் வாய்ப்பு குறைவாக கொண்டிருந்தனர்
19% சாதாரணமாக நுகரும் திறன் கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில், யாருக்கெல்லாம் வாசனை நுகர்ந்து கண்டறிவதில் சிரமம் இருந்ததோ அவர்கள் 19% வேகமாக இறக்கும் வாய்ப்பு கொண்டிருந்தனர்
23% இந்த ஆய்வில் பங்கெடுத்துக் கொண்ட 1774ல் 411பேர் ஆய்வு நடத்தி கொண்டிருந்த காலத்திலேயே இறந்துவிட்டனர். அவர்கள் எல்லாம் இவர்களில் சரியாக வாசனை நுகர்வும் திறன் கொண்டவர்கள் 8% குறைவான இறக்கும் சதவீதம் கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிகுறி! இதை வைத்து, ஆய்வாளர்கள், வாசனை நுகரும் திறனானது, நடுவயது மற்றும் வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் மரணத்தை வெளிப்படுத்தும் அறிகுறியாக இருக்கிறது என கூறியுள்ளனர்
மூளை! நுகரும் திறனானது, மூளையின் வயது / செயற்திறனை குறிப்பதாக இருக்கிறது என்றும் இந்த ஆய்வை நடத்தியவர்கள் பரிசோதனைகளுக்கு பிறகு கூறியுள்ளனர்.
வேறுபடும்! சிலருக்கு மூக்கு பகுதியில் விபத்து அல்லது சைனஸ் போன்ற வேறு ஆரோக்கிய காரணங்களால் கூட நுகரும் திறனில் குறைபாடு இருக்கலாம். இந்த நிலைகளுக்கு இது பொருந்தாது.
முகத்தில் 50 பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பெண் ... பேய் போல் மாறிய கொடுமை
ஏஞ்சலினா ஜோலியின் அழகில் காதல் வயப்பட்டு 50 பிளாஸ்டிக் சர்ஜரியை செய்த பெண் ஒருவரின் முகம் கொடூரமாக மாறிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஈரானின் டெரான் பகுதியைச் சேர்ந்த சஹர் தாபர் என்ற பெண் ஹாலிவுட்டில் பிரபலமான நடிகையான ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். தன் அழகு ஏஞ்சலினாவை போல் காட்சி அளிக்க வேண்டும் என்பதற்காக மேக்கப்பில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளார்.
தொடர்ந்து ஏஞ்சலினா மீது காதல் அதிகரிக்கவே சஹர் தாபர் முகத்தில் மட்டும் 50 வகையான பிளாஸ்டிக் சர்ஜரிக்கு செலவிட்டுள்ளார். மேலும் உடல் எடையை டயட் இருந்து குறைத்துள்ளார். இதனால் 19 வயதான அப்பெண் தற்போது 40 வயதை தாண்டியவர் போல் காட்சியளிக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.
இவருக்கும் ரோஷன் என்பவருக்கும் திருமணம் நடக்கபோகும் நேரத்தில், இவர் இப்படி செய்ததால் நெட்டிசன்களிடமிருந்து நேர் எதிர்மறை விமர்சனங்கள் குவிகிறதாம். இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பார்த்த 3,18,000 பேர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
https://www.instagram.com/sahartabar_official/
முதலிரவில் மனைவியின் முகம்... அதிர்ச்சியடைந்த கணவன்!.. பின்பு நடந்தது என்ன?..
திருமணம் முடிந்த தம்பதிகளில் முதலிரவு அன்று மனைவியின் முகத்தினை பார்த்த கணவன் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம் அவளது நிறம் சற்று கறுப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான்.
படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் கணவன் தன் மீது வெறுப்பினைக் காட்டினாலும் அளவுகடந்த பாசத்தினை வைத்திருந்தாள்.
ஒருநாள் கணவனிடம் ஏன் இப்படி என்னை வெறுக்கின்றீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் அளிக்காமல் சென்றுவிட்டான் கணவன். இரவு 1மணியளவில் அவனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
வலி தாங்க முடியாமல் கணவனின் கதறலை காணமுடியாத மனைவியும் கதறிதுடித்த நிலையில் தனது உறவினரையும், கணவனின் நண்பரையும் போன் செய்து அழைத்துள்ளார்.
பைத்தியக்காரி மாதிரி துடித்த மனைவியை பார்த்த கணவர் ஒன்றும் புரியாமல் திரு திருவென முழிக்கின்றான். தகவறிந்த கணவனின் நண்பர் கார் எடுத்துக் கொண்டு வேகமாக வருகிறார். தன் மார்போடு கணவனை அனைத்துக் காண்டு அண்ணா கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் என்கிறாள். அந்த நொடியில் ஒரு கணம் கணவன் இவளையா வெறுத்தேன் என்று கண் மூடி அழுதான்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற கணவர் புகைப்பிடித்ததே இதற்கான காரணம் என்று மருத்துவர் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட உறவினர்கள் அவனுக்கு அறிவுரை சொல்ல அவன் தன் மனைவியியை தேடுகிறான்.
அவள் கதவு அருகில் நின்று இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள். தன் மனைவியின் பெயரை முதன்முதலாக சொல்லி சத்தமாக அழைக்கிறான். சடார் என்று “என்னங்க” என்று பதறி ஓடி வருகிறாள். அழுது அழுது அவள் கண்கள் சிவந்து போனது. அவள் கையை பிடித்து இனி நான் புகை பிடிக்க மாட்டேன்! உனக்காக என்கிறான்.
தன் கணவன் தன்னுடன் பேசுகிறான் என்ற சந்தோஷமும், அழுகையும் ஒன்றாய் வர அழுது கொண்டே சிரிக்கிறாள். என் மேல் இவ்வளவு பாசமா என்று கணவன் கண்ணால் கேட்க நீங்கள் என் கணவர். நான் உங்கள் மனைவி என்று ஒரு வார்த்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லி அவன் நெற்றியில் முத்தமிடுகிறாள் அந்த காதல் கொண்ட மனைவி.
தற்போதும் சில பெண்கள் தனது கணவன் பெயரைக் கூட சொல்வதில்லை. காரணம் அவர் மீதுள்ள மரியாதையே. எத்தனை உறவுமுறையும் ஒரு காலகட்டத்தில் நம்மைவிட்டு கட்டாயம் பிரிந்துவிடும். ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை நம் பின்னால் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
Source: Tamilputhagam
கமெரா இருப்பது கூட தெரியாம இந்த பெண் செய்த கேவலமான வேலையை பாருங்கள்...
கமெரா இருப்பது கூட தெரியாமல் பெண் ஒருவர் கடைக்கு வெளியில் இருக்கும் மூட்டையை திருடும் காணொளி வெளியாகியுள்ளது.
இருசக்கர வாகனத்தில் நிற்கும் பெண் சுற்றும் முற்றும் பார்த்தவாறு இருக்கிறார். பின்னர் யாரும் வராத நேரத்தில் அங்கு இருக்கும் மூட்டையை ஒவ்வொன்றாக தன் வண்டியின் முன் பக்கத்தில் வைத்து ஒட்டிச்செல்கிறார்.
அப்பெண் செய்த செயலை நீங்களே இந்த காணொளியில் பாருங்கள்....
Tuesday, 28 November 2017
கோவில் பூசாரிகள் செய்யும் கேவலமான செயல்... வைரலாய் பரவும் காட்சி
கோவிலில் பூஜை செய்யும் மனிதர்கள் மிகவும் பக்தியுடனும், பயத்துடனும், நேர்மையாகவே இருப்பார்கள். ஆனால் இங்கு நீங்கள் காணும் காட்சி தலைகீழாக அமைந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 1500 ஆண்டு பழமை வாய்ந்த அந்தியுர் பத்ரகாளியம்மன் கோவில் உண்டியலில் இருந்து பூசாரிகளே நூதனமாக குச்சியில் பசையை தடவி பணத்தை திருடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இது பல ஆண்டுகாலம் நடப்பதாகவும், அதிகாரிகளே இதற்கு உடந்தையாக இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Sunday, 26 November 2017
காலில் விழுந்த வணங்கிய ரசிகரை கன்னத்தில் அறையும் கமல்...
காலில் வழுந்து வணங்கிய ரசிகரை நடிகர் கமலஹாசன் கன்னத்தில் அரைவது போன்ற காட்சி வெளியாகியுள்ளது.
திரைப்பட வேலைக்காக டெல்லி சென்ற கமலஹாசன் தனது நண்பரும் இயக்குனருமான ரமேஷ் ஆரவிந்த் உடன் வணிக வளாகம் போன்ற இடங்களுக்கு செல்கிறார். அங்குகிருந்து திரும்புகையில் ரசிகர் பட்டாளம் திரண்டு நிற்கிறது.
அப்போது ரசிகர் ஒருவர் கமலஹாசனை நெறுங்குவதற்காக படிகட்டில் ஏறுகிறார். அவரை தடுத்த ரமேஷ் ஆரவிந்தையும் மீறி கமலஹாசன் காலில் விழுந்து வணங்குகிறார். அப்போது ரசிகரின் கன்னத்தில் ஓங்கி அரைகிறார் நடிகர் கமல்.
Friday, 24 November 2017
பணத்தை விட மகிழ்ச்சி தருவது எது என்று தெரியுமா? ஆய்வில் கண்டுபிடிப்பு
மனிதர்களுக்கு வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி அளிப்பது எது என்ற ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அந்த பட்டியலில் தற்போது மனிதர்கள் அதிகளவில் தேடி ஓடும் பணம் 'டாப்-5'ல் கூட இடம் பிடிக்கவில்லை.
இந்த ஆய்வில் சுமார் 8,250 பேர் கலந்து கொண்டனர். அவர்களிடம் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சி அளிப்பது எது என கேள்வி எழுப்பப்பட்டது. இதில் பங்கேற்றவர்களுக்கு பொருளாதாரம், வேலை, தூக்கம், உறவுகள், நெருங்கிய நண்பர்கள், மற்றும் குடும்பத்தினர் பற்றிய 60 கேள்விகள் கேட்கப்பட்டது.
இதில் பங்கேற்றவர்களுக்கு பொருளாதாரம், வேலை, தூக்கம், உறவுகள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பற்றிய 60 கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலானோர் தூக்கம் மற்றும் செக்ஸ் தான் தங்கள் வாழ்வில் அதிக மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்திருந்தனர்.
மனிதர்கள் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையான பணம் மகிழ்ச்சி அளிக்கும் பட்டியலில் 'டாப்-5'ல் கூட இடம் பெறவில்லை.
தூக்கம் மற்றும் செக்ஸ்க்கு பின் வேலை உத்தரவாதம், ஆரோக்கியம், அக்கம் பக்கத்தினருடன் ஜாலியாக பேசுவது என குறிப்பிட்டுள்ளனர்.
வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக செலவிட தங்களின் துணையுடன் செக்ஸில் ஈடுபடுவதுதான் என பலர் தெரிவித்திருந்தனர்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்காமல் இந்த மக்கள் செய்த வேலையை பாருங்கள்....
பிகார் மாநிலத்தில் நடந்த விபத்து ஒன்றில் மீன்களை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்தது. ஆனால் அங்குள்ள மக்கள் காயமடைந்தவர்களுக்கு உதவாமல், மீன்களை அள்ளிச் சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் காலை, அராரியா மாவட்டம், சிமராஹா பகுதியில், மீன்களை ஏற்றி வந்த வேன், சாலையில் திரும்பும்போது, திடீரென கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில், வேன் டிரைவரும், உதவியாளரும், பலத்த காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த, அப்பகுதி மக்கள், காயமடைந்த டிரைவர் மற்றும் உதவியாளருக்கு உதவாமல், மீன்களை அள்ளிச் சென்றனர்.
தாய் வயது பெண்ணுடன் இளைஞர்... இறுதியில் நிகழ்ந்த கொடூரம்
இந்தியாவில் விழுப்புரம் மாவட்டத்தில் தாய் வயதுடைய பெண்ணை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் ஓடைக்கடை பகுதியில் 41 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த 19ம் திகதி சடலமாக கிடந்துள்ளார். இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி இக்பால் மனைவி மம்முதா பீவி என்பது தெரியவந்துள்ளது.
இவரது வீட்டின் கட்டிட வேலை 3 வருடத்திற்கு முன்பு நடந்துள்ளது. அதில் வேலை செய்ய வந்த விக்னேஷ்(20) என்ற இளைஞருக்கும், இவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இவர்களில் கள்ளத்தொடர்பினை தெரிந்துகொண்ட கணவன் இவர்களை கண்டித்தும் மனைவி கேட்கவில்லை. இந்நிலையில் விக்கேஷிடம் மம்முதா அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
மேலும் தனது கள்ளத்தொடர்பு ஊர் முழுவதும் தெரிந்துவிட்டதை நினைத்து படும் கோபத்தில் இருந்துள்ள விக்னேஷை சம்பவத்தன்று போன் செய்து அழைத்துள்ளார்.
ஆத்திரத்தில் அவரைக் காண சென்ற இடத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் உச்சத்தில் மம்முதாவின் புடவை எடுத்து கழுத்தை நெறிந்து கொலை செய்துள்ளார் விக்னேஷ்.
அதுமட்டுமின்றி அடையாளம் தெரியாமல் இருப்பதற்கு மம்முதாவின் முகத்தில் ஆசிட்டை ஊற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
ஆரம்பத்தில் கொத்தனாராக பணிபுரிந்த விக்னேஷ் தற்போது நகைக்கடையில் வேலை செய்துள்ளது தெரியவந்த நிலையில் பொலிசார் விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Wednesday, 22 November 2017
நடுக்கடலில் கோவில்.. 6 மணி நேரம் மட்டுமே கண்ணுக்குத் தெரியுமாம்! மெய்சிலிர்க்கும் காட்சிகள்
கடலுக்குள் அமைந்திருக்கும் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு கடல் அலைகள் வழிவிடுகிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?...
ஆம் இந்தியாவில் அகமதாபாத் மாவட்டத்தில், பவநகர் என்னும் ஊருக்கு அருகே உள்ளது ‘கோலியாக்’ என்ற கடற்கரை கிராமம். இங்குள்ள கடற்கரைதான் பலரையும் வியப்பையும், அதன் வாயிலாக மெய்சிலிர்க்க வைக்கும் பக்தியையும் வழங்கி வருகிறது.
இந்த கடற்கரையில் இருந்து சுமார் 1½ கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் இருக்கும் சிவாலயம் எல்லா நேரங்களிலும் கண்களுக்குத் தென்படுவதில்லை. ஆனால் குறிப்பிட்ட இடைவெளியில் சுமார் 6 மணி நேரம் மட்டும் கடல் உள்வாங்கி சிவாலயம் வெளிப்படுவதுதான் விசேஷம்.
பெளர்ணமி காலங்களில் அதிக தூரம் உள்வாங்கக் கூடியது. ஆகஸ்ட் -செப்டம்பர் மாதம் பல மணி நேரம் கடல் உள்வாங்கிய நிலையில் இருக்கும். கடல் உள்வாங்க நாமும் அப்படியே நடந்து போகலாம்.
இந்த சிவாலயத்தில் உள்ள இறைவனை அந்தப் பகுதி மக்கள் ‘நிஷ்களங்க மகாதேவர்’ என்று போற்றி வழிபடுகின்றனர். இந்த ஆலயம் பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட தலம் என்று கூறப்படுகிறது.
மகாபாரதப் போரில் தங்களுடைய கவுரவர்களை எதிர்த்து போரிட்டனர். அவர்கள் அனைவரும் ஒருவகையில் உறவினர்களே, போரில் உறவினர்களையே கொன்றதால், அவர்களுக்கு ஏற்பட்ட களங்கத்தினை போக்குவதற்கு, பாண்டவர்கள் ஐந்து பேரும் தனித்தனியாக 5 சிவலிங்கத்தினை அமைத்து வழிபாடு செய்துள்ளனர்.
அவர்களின் வழிபாட்டில் மனமிரங்கிய சிவபெருமான், அவர்களின் களங்கத்தைப் போக்கினார். இதனால் இந்த இறைவன் ‘நிஷ்களங்க மகாதேவர்’ என்று அழைக்கப்படுவதாக காரண காரியம் கூறப்படுகிறது. இதுகுறித்து சுவாரசியமான காணொளியினை இங்கு காணலாம்....
Monday, 20 November 2017
நான்கு சொட்டு நல்லெண்ணெயை எடுத்து, சிறுநீரில் விட்டு பாருங்கள்..!! அடுத்த கணத்தில் தெரியவரும்
ஆனால் நம்முடைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின் துணை இன்றி அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள்.
சித்தர்கள் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்க்கும் முறை அவ்வளவு கஷ்டமானது கிடையாது.
அந்த முறையைப் பயன்படுத்தி நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும்.
நம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் தான் காரணம் என்று ஆரம்பத்திலே நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்
அதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டாலே போதும் அதை நாம் குணப்படுத்த முடியும்.
இதைத்தான் நம்முடைய சித்தர்கள் சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்தனர். இந்த மூன்றும் சிறுநீரில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வைத்து நோயை குணபடுத்தி உள்ளனர்
எவ்வாறு செய்யலாம்..?
காலையில் எழுந்ததும் சிறுநீரை ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை அதில் விட்டு சிறுது நேரம் கழித்து பாருங்கள். அறிவியல் ரீதியாக என்ன நடக்கிறது..?
அந்த எண்ணெய்த்துளி சிறுநீரின் மேல் கயிறு போல நெளிந்து காணப்பட்டால் உடலில் வாதம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று பொருள்..அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக அதை குணபடுத்த பார்க்க வேண்டும்..
அதுவே மோதிரம் போல வட்ட வடிவில் அல்லது கோள வடிவில் இருந்தால் உங்களுக்கு பித்த நோய் இருப்பதாக பொருள்..
சிறுநீரின் மேல் எண்ணெய் முத்துப்போல் அங்கொன்று இங்கொன்றாக நின்றுகொண்டிருந்தால் கபம் அதிகமாக இருக்கிறதென்று பொருள்.
அதேபோல் எண்ணெய்த்துளி மிக வேகமாக சிறுநீருக்குள் பரவினால் நோய் விரைவில் குணமடையும் என்பதாக பொருள்
எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாத் தாமதமாகும்.உடனடியாக அதை குறைக்க நடவடிக்கை எடுப்பது நல்லது
அதுவே எண்ணெய்த்துளி சிதறினாலோ சிறுநீருக்குள் அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த முடியாது.மிகவும் சிரமமான நிலை என்று அர்த்தம்..
Thursday, 9 November 2017
ஐபோனுக்காக இளம் பெண் செய்த கேவலமான காரியம்..!
ரஷ்யாவில் ஐபோனுக்காக இளம் பெண் ஒருவர் நிர்வானமாக போஸ் கொடுத்தது ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் Troitsk நகரில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் இளைஞர்கள் மத்தியில் போட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் கூடியிருந்த இளைஞர்கள் மத்தியில் குறிப்பிட்ட நேரம் வரையில் நிர்வாணமாக போஸ் கொடுக்கும் இளைஞர்களுக்கு புதிதாக வெளிவந்த ஐபோன் பரிசாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதில் பலர் தயங்கிய நிலையில் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் கூட்டத்தின் மத்தியில் தமது ஆடைகளை களைத்து நிர்வாணமாக நின்றுள்ளார்.
இதை அங்கிருந்த சிலர் வீடியோவாகவும் பதிவு செய்ததுள்ளனர். பிறகு அந்த பெண்ணை போட்டியில் வென்றதாக அறிவிக்கப்பட்டு ஐபோனையும் மொபைலையும் பரிசாக வழங்கப்பட்டது.
முதலில் இந்நிகழ்ச்சியில் இளைஞர்கள் தான் தன் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர். பின்னர் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த நிர்வாண வீடியோ இணையதளத்தில் வெளியானதால் அந்த பெண் தலைமறைவாகியுள்ளார். அது மட்டுமின்றி கல்லூரி நிர்வாகம் அவரை கல்லூரியில் இருந்து வெளியேற்றியுள்ளது.
Tuesday, 7 November 2017
பறக்கும் விமானத்தில் கணவனுடன் கடும் சண்டைபோட்ட மனைவி: பாதி வழியில் விமானத்தை திருப்பி விட்ட விமானி
கட்டார் விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்றில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் விமானி பாதியிலேயே விமானத்தை திருப்பி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கட்டாரின் தோஹா செல்லும் விமானத்திலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. இதில் பயணம் செய்த ஈரானிய குடும்பம் ஒன்று நடுவானில் கடும் ரகளையில் ஈடுபட்டதால் சமாளிக்க முடியாத விமானி குறித்த விமானத்தை சென்னை நோக்கி திருப்பி விட்டுள்ளார்.
சம்பவத்தின்போது ரகளையில் ஈடுபட்ட ஈரானிய பெண்மணி தமது கணவரின் மொபைல் போனை தூக்கத்தில் இருந்த அவரது விரல் ரேகையை பயன்படுத்தி திறந்துள்ளார்.
மொபைலில் இருந்த தகவல்கள் அந்த பெண்மணியை கடும் மன உளைச்சலுக்கு தள்ளியது. தமது கணவர் தம்மை இன்றி வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளது குறித்த பெண்மணிக்கு தெரிய வந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் பறக்கும் விமானத்தில் தமது கணவருடன் சண்டையிட்டுள்ளார். மட்டுமின்றி மதுவும் அருந்தியிருந்த அவரை அமைதிப்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் வீணானது.
இதனையடுத்து உடனடியாக விமானத்தை சென்னைக்கு திருப்பி விட்டுள்ளார் விமானி. பின்னர் சென்னையில் இருந்து மலேசிய விமானத்தில் குறித்த ஈரானிய குடும்பத்தை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
Monday, 6 November 2017
மலேசிய தேசிய உணவினை ஆடையாக அணிந்த அழகி! வைரலாகும் புகைப்படம்
மலேசியாவை சேர்ந்த அழகி ஒருவர் Miss universe 2௦17- இல் கலந்து கொண்ட போது அந்நாட்டின் பாரம்பரிய உணவான Nasi Lemak என்ற உணவு வகை போன்று ஆடையினை டிசைன் செய்து அணிந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Nasi Lemak என்பது மலேசியாவின் பாரம்பரிய உணவாகும். தேங்காய் பாலில் தயார் செய்யப்பட்ட சாதம், கடலை, நெத்தலி, சம்பல், முட்டை ஆகியவை வைத்து ஒரு தட்டில் பரிமாறப்படும்.
இந்நிலையில் மொடல் அழகியான Samantha Katie, இந்த உணவு வகைகள் போன்று டிசைன் செய்யப்பட்ட ஆடையினை அணிந்து கொண்டு அதனை புகைப்படம் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஒரு தேசிய உணவினை இவ்வாறு அவமானப்படுத்துவதா என இதற்கு சில எதிர்மறை கருத்துக்கள் வந்துள்ளன. மேலும், மிஸ் யுனிவர்ஸ் மலேசியா நிறுவனத்தின் தேசிய இயக்குனர் Elaine Daly கூறியதாவது, “ இது ஒரு பிரபலமான தேசிய ஆடை ஆகும்.
கடந்த ஆண்டு சின்னமான இரட்டை கோபுரத்தினை அடிப்படையாக கொண்ட ஆடையினை பயன்படுத்தினோம், இந்த ஆண்டு உணவினை பயன்படுத்தியுள்ளோம் என கூறியுள்ளார்.
Friday, 6 October 2017
இளமைக்கு ஆசைப்பட்டு இந்த நடிகை செய்த காரியம்!
ஜேர்மனியைச் சேர்ந்த 48 வயது நடிகை மானோஷ் தனது இளமை தோற்றத்தினை தக்க வைத்துக் கொள்ள 35 லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பக்டீரியாவை தன் உடலினுள் செலுத்தியுள்ளார்.
Bacillus F எனும் 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான பக்டீரியாவை ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பக்டீரியாவை 2015-ம் ஆண்டு வரை வைத்து ஆராய்ச்சிகள் செய்யப்பட்டது.
இந்த ஆராய்ச்சியின் மூலம் Bacillus F எனும் பக்டீரியா இளமையை நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் மற்றும் ஆயுட்காலத்தை நீடிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
இதை அறிந்த நடிகை மானோஷ் தன் உடலில் பக்டீரியாக்களை செலுத்த முடிவு செய்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு சிறுவயதில் இருந்தே முதுமை மீது வெறுப்பு வந்து விட்டது.
நான் மட்டும் முதுமை அடைந்து விடக் கூடாது என்று எண்ணி கடந்த 20 ஆண்டுகளில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யாத உறுப்புகளே இல்லை.
மூக்கில் 2, உதட்டில் 2, மார்பகங்களில் 6 என்று ஏராளமான அறுவை சிகிச்சைகளுக்காக பல லட்சங்கள் செலவிட்டு செய்திருக்கிறேன்.
சமீபத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த Bacillus F எனும் பாக்டீரியா சிகிச்சை பற்றி கேள்விப்பட்டேன்.
உடனே அதைச் செய்து கொள்ள முடிவெடுத்து, அவர்களை தொடர்பு கொண்டு தனது உடலில் பக்டீரியாவைச் செலுத்த சம்மதம் தெரிவித்தேன்.
ஆனால் அதற்கு ஆராய்ச்சியாளர்கள், என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
ஒரு சில மருத்துவர்களின் மேற்பார்வையில் அவரே 2 வாரங்களுக்கு ஒருமுறை எனது உடலில் பக்டீரியாவை செலுத்தினேன்.
அதன் பின் 3 மாதங்களில் அவரின் உடலில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. அதாவது அவரின் தோல் குழந்தையின் தோல் போன்று மென்மையானது.
அதோடு என் முகத்தில் தழும்புகள், கோடுகள் என்று அனைத்துமே மறைந்து விட்டது. ஆனால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டது.
இந்த பக்டீரியா ஒருவேளை எனக்கு நீண்ட காலத்திற்கு வெற்றியைத் தரவில்லை என்றாலும் பரவாயில்லை. ஏனெனில் இந்த பக்டீரியா என்னுடைய ஆயுளை 80, 90 வயது வரை நீட்டிக்கும்.
அதனால் நான் சாகும் வரை என் உடலின் அனைத்து பாகங்களும் வேலை செய்யும் என்று நடிகை மானோஷ் கூறியுள்ளார்.
வயதில் மூத்த பெண்களை ஏன் திருமணம் செய்யக்கூடாது? இவைதான் காரணம்.
திருமண வாழ்க்கையில் ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் துணையை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்துவது உண்மைதான்.
அதில் பல காரணங்கள் அவர்களை திருப்தி படுத்தியிருக்கும். அதே சமயம் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் முடிவெடுப்பதும் மிக முக்கியம்.
அந்த வகையில் ஆண் தன்னை விட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்தால் ஏற்படும் சில பிரச்சனைகளை பார்க்கலாம்:
திருமண வாழ்வில் தாம்பத்தியம் என்பது இன்றியமையாத ஒன்று. பெண்களுக்கு பொதுவாக தாம்பத்தியம் மீது ஏற்படும் ஈடுபாடு அவர்களின் மாதவிடாய் நிற்கும் வரை மட்டுமே இருக்கும் அதன் பின் குறைய தொடங்கும். இதனால் ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டி அவர்களுக்கு தாம்பத்தியம் மீது ஆசைகள் இருக்காது.
ஆனால் ஆண்களுக்கு தங்கள் 80 வயது வரை உறவில் ஈடுபட விரும்புவர். இப்படி மனைவிக்கு நாட்டம் குறையும்பொழுது கணவன் தவறான வழியில் செல்ல வழி வகுக்கும்.
இது இயற்கையின் செயல்பாடு. தன்னை விட மூத்த பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் தங்கள் மனைவியிடம் சில காலங்கள் வரைதான் உறவில் ஈடுபட முடியும்.
மேலும் காலங்கள் செல்ல செல்ல வெளித்தோற்றமானது மூத்த வயதுடையவள் என்று சுலபமாக காட்டி கொடுத்துவிடும். இது நடைமுறையில் சில மன உளைச்சலுக்கு காரணமாகலாம்.
மேலும் வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்தால், கணவனை விட மனைவி சீக்கிரம் மரணிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதனால், தள்ளாத வயதில் அவன் தனித்துவிடப்படும் நிலைகள் ஏற்படும். இதை தெளிவாக உணர்ந்து திருமண முடிவெடுத்தால் பின்காலத்தில் பிரச்னை இல்லை.
600 ஆண்களுடன் செல்பி எடுத்த பெண் , காரணம் கசிந்தது
பல ஆண்களுடன் செல்பி எடுத்த பெண் சாதனை படைத்துள்ளார். இதை ஒரு சோதனையாக அவர் செய்து பார்த்துள்ளார்.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டிராமை சேர்ந்த 20 வயதுப்பெண் நோயா ஜான்ஸ்மா .
இவர் ஒரு வித்யாசமாக சோதனை செய்துள்ளார்.
வீதிகளில் பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்யும் ஆண்களுடன் இவர் செல்பி எடுப்பார். அதை சமூக வளைதளங்களில் பதிவிட்டு அவர்களை பற்றிய விவரங்களையும் வெளியிடுவார்.
இதன் மூலம் பல பெண்களுக்கு அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இவர் வைத்திருக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 45, 000 பேர் பின் தொடர்கிறார்கள்.
இந்த பக்கத்திற்கு அவர் ‘ டியர் கேட் காலர்ஸ் (dear catcallers) என்று பெயர் வைத்துள்ளார்.
இதுவரை ஒரு ஆண் கூட அவர் ஏன் செல்ஃபி எடுக்கிறார் என்று கேட்கவில்லை .
அனைவரும் அவரிடம் ஒட்டி உரசிக்கொண்டு செல்ஃபி எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tuesday, 20 June 2017
ஸ்ரீரங்கம் கோயிலால் இறந்தவர்கள்: திடுக்கிடும் மர்மம் இதுதான்
திருச்சி மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் கோவிலில், பக்தர்களின் வழிபாடுகள் மிகவும் சிறப்பானது.
உலகெங்கிலும் உள்ள இந்துக் கோயில்களுள் பெரிய அளவில் செயல்படும் கோவிலாக நம்பப்படும் இக்கோயில் சுமார் 631,000 சதுர அடியில், 4 கி.மீ. அல்லது 10,710 அடி சுற்றளவில் கட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கமானது, மகாவிஷ்ணுவின் எட்டு முக்கிய திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகக் கொண்டாடப்படும் தனிப்பெருமை வாய்ந்ததாகும்.
ஸ்ரீரங்கம் கோவிலால் ஏற்பட்ட இறப்புகளின் காரணம்?
ஸ்ரீரங்கம் கோவிலால் ஏராளமானோர் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர். அதற்கு அந்த கோவிலின் பக்தர்கள் சில மர்மக் கதைகளை கூறுகின்றனர்.
அதாவது, அலாவுதீன் கில்ஜி எனும் மன்னன் தென்னகத்தே புகுந்து அனைத்து கோவில்களையும் அதன் செல்வங்களையும் அனுபவிக்கத் துணிந்து, அவன் படைகளை அனுப்பி அனைத்தையும் கவர ஆணையிட்டான்.
அப்போது தான் ஸ்ரீரங்கம் எனும் அற்புத தீவு அவன் கண்ணுக்கு புலப்பட்டது. அந்த கோவில் மீது ஒரு கண் வைத்திருந்த மன்னன் தக்க சமயம் பார்த்து, அந்த கோவிலின் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுவிட்டான்.
கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களில் எதையும் விரும்பாத அந்த மன்னனின் மகள், கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளுடன் கூடிய பெருமாளின் சிலை மீது மட்டும் அதிக ஆசை வைத்திருந்தாள்.
அதனால் அந்த இளவரசி தன்னருகே பெருமாள் சிலையை ஒரு பொம்மை போல வைத்து விளையாடி வந்துள்ளதாக கூறுகின்றனர்.
பின் ஸ்ரீரங்கத்தில் உள்ள மக்கள், ஆடல் பாடல் கலைகளில் நல்ல அறிவு கொண்டிருந்த அந்த அலாவுதீன் கில்ஜி மன்னனை சந்தித்து, ஆடல் பாடல் மூலம் பரிசாக அந்த பெருமாள் சிலையை மீட்டனர்.
அதனால் கோபம் கொண்ட அந்த இளவரசி, நேரடியாக யானை மீது அமர்ந்து ஸ்ரீரங்கம் சென்று அங்கேயே உயிர் விட்டாள்.
மீண்டும் படையெடுக்க வந்த மன்னர் படைக்கு அஞ்சாமல், பாதிபேர் நேருக்கு நேராக மோதி, சிலையை கொண்டு சென்றனர்.
அதனால் அலாவுதீன் கில்ஜி மன்னர் அந்த ஊரையே அழிக்குமாறு உத்தரவிட்டதால், அவரின் படைகள் அந்த ஊர் மக்களை வெட்டி சாய்த்தனர்.
இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதன் பின் 40 ஆண்டுகளுகள் கழித்து, அந்த சிலை ஸ்ரீரங்கத்தை அடைந்ததாக கூறுகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)



















