சில நடிகர்கள் சினிமா துறைக்கும், மக்களுக்கும் உதவி செய்வதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் முக்கியமாக அஜித், விஜய், ரஜினி, கமல் போன்று பல நடிகர்களை குறிப்பிடலாம்.
இளையதளபதி விஜய் ஒவ்வொரு பட ரிலீசுக்கு பிறகும் சில சினிமா சார்ந்த சங்கத்திற்கு உதவி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி தான் அண்மையில் பைரவா பட ரிலீஸிற்கு பிறகு எடிட்டிங் சங்கத்திற்கு ரூ. 10 லட்சம் நன்கொடை தந்திருக்கிறார். ஆனால் அந்த தகவல் உண்மையா என பலரும் கேட்டு வந்தனர்.
இந்த நிலையில் அவர் ரூ. 10 லட்சம் கொடுத்திருக்கிறார் என்பதற்கான ஒரு கடிதம் எடிட்டிர் சங்கத்தில் இருந்து வெளியாகியுள்ளது.

