Showing posts with label Spiritual. Show all posts
Showing posts with label Spiritual. Show all posts

Friday, 24 November 2017

அட்டமத்து சனியால் அவஸ்திப்படுபவரா நீங்கள்? கவலை வேண்டாம்... இதை படியுங்க


சனி பெயர்ச்சி சிலருக்கு நன்மையும், சிலருக்கும் சோதனையாகவும், சில ராசிக்காரர்களுக்கு வேதனையாகவும் இருக்கும்.

இந்த வருடம், ரிஷப ராசிக்காரர்களுக்கு அட்டம சனியாக அமர்கிறார் சனி பகவான்.

ஜன்ம ராசிக்கு எட்டாவது ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது அட்டம சனி என்று அழைக்கப்படுகிறது.

அகப்பட்டவனுக்கு அட்டமத்து சனி என்ற பழமொழியே இருக்கிறது. ஜன்ம ராசிக்கு நான்காவது ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது அர்த்தாஷ்டம சனி என்று அழைக்கப்படுகிறது.

இதேவேளை, கன்னி ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாக அமர்கிறார். சனியை கண்டு அச்சம் வேண்டாம் அதற்கேற்ப பரிகாரங்கள் இருக்கின்றன. குறித்த காணொளியை பார்வையிடவும்,

Tuesday, 7 November 2017

3, 12, 21, 30திகதிகளில் பிறந்தவர்களின் நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்!!


3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதம் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள்.

ஓரளவு பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. வீட்டை கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடி வரும். பழைய சொந்த-பந்தங்கள் வலிய வந்து உறவாடுவார்கள்.

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் இருந்த உரசல் போக்கு மாறும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். என்றாலும் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களின் உடல் நலம் பாதிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனம் பழுதாகும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். சளித் தொந்தரவு வந்து நீங்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள்.

கன்னிப் பெண்களே! தடைபட்ட கல்யாணம் முடியும். முன்பின் தெரியாதவர்களிடம் அநாவசியப் பேச்சு வேண்டாம்.

அரசியல்வாதிகளே! வீண் விமர்சனங்களை தவிர்த்து, செயலில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி கலந்து ஆலோசிப்பீர்கள். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் செல்வார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கலைத்துறையினர்களே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். அந்தஸ்து உயரும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 1, 3, 10, 12, 27

அதிஷ்ட எண்கள்: 6, 8

அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

அதிஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

Monday, 6 November 2017

இந்த வார ராசிபலன்... 12 ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்டம் எப்படி?


மேஷராசி அன்பர்களே! எதிர்பார்த்ததை விடவும் கூடுதலான பணவரவு இருக்கும். ஆனால், தேவையற்ற செலவுகளும் ஏற்படும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நீண்டகாலமாக தொடர்பில் இல்லாமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இதுவரை எதிர்பார்த்த சலுகைகள் இப்போது கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சிலருக்கு இட மாறுதலுக்கான உத்தரவு வரக்கூடும்.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை.

கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகளும் அதனால் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்கள் உங்களுடன் இணக்கமாகப் பழகுவார்கள்.

மாணவ மாணவியருக்குப் படிப்பில் கூடுதல் ஆர்வம் உண்டாகும். பாடங்களை நன்றாகப் புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குச் செலவுகளால் சற்று சிரமப்படவேண்டியிருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்க முடியாது.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

அசுவினி: நவ 6,8,9,10; பரணி: நவ 6,7,9,10,11; கிருத்திகை: நவ 6,7,8,10,11,12

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6

தவிர்க்க வேண்டிய நாள்கள்: அசுவினி: நவ 11,12; பரணி: நவ 8,12; கிருத்திகை: நவ 9

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச்சி வாயவே

ரிஷபம்:

ரிஷபராசி அன்பர்களே! பண வரவு ஓரளவுக்கே இருக்கும். சிலருக்கு ஆரோக்கியக் குறைவும் அதனால் மருத்துவச் செலவும் ஏற்படும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட சகோதரர்களும் உறவினர்களும் உங்களைப் புரிந்துகொண்டு அன்பு பாராட்டுவார்கள். ஒரு சிலருக்குப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சலுகைகள் எதையும் இந்த வாரம் எதிர்பார்ப்பதற்கு இல்லை. சக ஊழியர்களுடன் எச்சரிக்கையாகப் பழகவும்.

வியாபாரத்தில் விற்பனை மந்தமாகத்தான் இருக்கும், எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கில்லை. ஏற்கெனவே பெற்ற வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவும்.

மாணவ மாணவியர் படிப்பில் கவனம் செலுத்திப் படிப்பீர்கள். அதனால் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறவும் முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குச் செலவுகள் அதிகரிப்பதால் மன அமைதி குறையும். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகள் அலுவலகத்தில் மற்றவர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:

கிருத்திகை: நவ 6,7,8,10,11,12; ரோகிணி: நவ 7,8,9,11,12; மிருகசீரிடம்: நவ 8,9,10,12

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,3,5

தவிர்க்க வேண்டிய நாள்கள்: கிருத்திகை: நவ 9; ரோகிணி: நவ, 6,10; மிருகசீரிடம்: 6,7,11

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விண்கடந்த சோதியாய்விளங்கு ஞான மூர்த்தியாய்

பண்கடந்த தேசமேவு பாவநாச நாதனே

எண்கடந்த யோகினோடி ரந்துசென்று மாணியாய்

மண் கடந்த வண்ணம்நின்னை யார்மதிக்க வல்லரே.

மிதுனம்:

மிதுனராசி அன்பர்களே! வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும்.

அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். மற்றபடி பதவி உயர்வோ சலுகை உயர்வோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது.

வியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்காது. எனவே, பொறுமையை விடாமல் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே வாய்ப்புகளைப் பெற முடியும். வருமானம்கூட ஓரளவுக்குத்தான் இருக்கும்.

மாணவ மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். அதேசமயம் உடல் நலன் சற்று பாதிக்கப்படும் என்பதால் உணவு மற்றும் தண்ணீர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு போதிய அளவு பண வசதி கிடைப்பதால் மனநிறைவு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் எச்சரிக்கையாக இருப்பதுடன், சக பணியாளர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மிருகசீரிடம்: நவ 8,9,10,12; திருவாதிரை: நவ 6,9,10,11; புனர்பூசம்: நவ 6,7,10,11,12

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,4

தவிர்க்க வேண்டிய நாள்கள்: மிருகசீரிடம்: நவ 6,7,11; திருவாதிரை: நவ 7,8,12; புனர்பூசம்: நவ 8,9

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச

சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு

வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று

ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே

கடகம்:

கடகராசி அன்பர்களே! பண வரவுக்குக் குறைவில்லை. உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளைப் பலமுறை யோசித்து எடுப்பதால் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அதனால் மனநிம்மதி சற்று குறையக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளை முடிக்க உதவி செய்வார்கள்.

வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். லாபமும் குறைவாகவே கிடைக்கும் என்பதால் மனதில் சஞ்சலம் ஏற்படும். புதிய முடிவுகள் எதுவும் இப்போது எடுக்க வேண்டாம்.

கலைத்துறையினருக்குக் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமையுடன் இருப்பது அவசியம்.

மாணவ மாணவியர்க்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை உடனுக்குடன் புரிந்துகொண்டு படிப்பதால் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குப் போதிய அளவு பணம் கிடைப்பதால் சிரமம் எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வழக்கமான நிலையே நீடிக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: புனர்பூசம்: நவ 6,7,10,11,12; பூசம்: நவ 6,7,8,11,12; ஆயில்யம்: நவ 7,8,9,12

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5,6,9

தவிர்க்க வேண்டிய நாள்கள்: புனர்பூசம்: நவ 8,9; பூசம்: நவ 9,10; ஆயில்யம்: நவ 6,10,11

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,

என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்

ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து

அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!

சிம்மம்:

சிம்மராசி அன்பர்களே! பண வரவு சுமாராகத்தான் இருக்கும். பிள்ளை அல்லது பெண்ணின் திருமணம் விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். கணவன் - மனைவி இடையில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். வழக்குகளில் பிற்போக்கான சூழ்நிலையே காணப்படுகிறது. கொடுத்த கடனைத் திரும்பப் பெறுவதில் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைப்பதற்கு கிரக நிலைகள் அனுகூலமாக உள்ளன. சிலருக்கு இடமாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாகக் கிடைக்கும். கடையை விரிவுபடுத்தும் எண்ணம் தற்போது வேண்டாம்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்ததை விடவும் வாய்ப்புகள் கூடுதலாகக் கிடைக்கும். வருமானமும் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும்.

மாணவ மாணவியர்க்கு அடிக்கடி மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு படிப்பில் கவனம் செலுத்தமுடியாத நிலை ஏற்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைப்பதால் சந்தோஷம் உண்டாகும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மகம்:நவ 6,8,9,10 ; பூரம்:நவ 6,7,9,10,11; உத்திரம்: நவ 6,7,8,10,11,12

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,4

தவிர்க்க வேண்டிய நாள்கள்: மகம்: நவ 7,11,12; பூரம்: நவ 8,12; உத்திரம்: நவ 9

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

சீர் ஆர் கழலே தொழுவீர்! இது செப்பீர்

வார் ஆர் முலை மங்கையொடும் உடன் ஆகி,

ஏர் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்

கார் ஆர் கடல்நஞ்சு அமுதுஉண்ட கருத்தே.

கன்னி:

கன்னிராசி அன்பர்களே! பொருளாதார நிலைமை திருப்திகரமாகஇருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும். சிறிய அளவில் உடல்நலன் பாதிக்கப்பட்டு சரியாகும்.சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். ஆனால், அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். கடையை விரிவுபடுத்தவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ நினைத்திருந்தால்,

அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்குப் புது வாய்ப்புகள் கிடைக்காது என்பதுடன், கிடைத்த வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியாது.

மாணவ மாணவியர் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். பழைய நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குத் தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: உத்திரம்: நவ 6,7,8,10,11,12; அஸ்தம்:நவ 7,8,9,11,12; சித்திரை: நவ 8,9,10,12

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5,9

தவிர்க்க வேண்டிய நாள்கள்: உத்திரம்: நவ 9; அஸ்தம்: நவ 6,10; சித்திரை: நவ 6,7,11

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்

பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை

என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி

அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.

துலாம்:

துலாம் ராசி அன்பர்களே! பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது என்பதால் நிம்மதியாக கிருஷ்ணதுளசிஇருப்பீர்கள். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு உரிய சிகிச்சையினால் உடனுக்குடன் சரியாகும்.

வேலைக்குச் செல்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையே காணப்படுகிறது. வேறு வேலைக்கு அல்லது வேறு இடத்துக்கு மாற நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். சாதகமாக முடியும்.

வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். லாபமும் எதிர்பார்த்ததைவிட குறைவாகவே கிடைக்கும் என்பதால், மனதில் சஞ்சலம் உண்டாகும். பணம் கடன் வாங்குவதையோ கொடுப்பதையோ இந்த வாரம் தவிர்க்கவும்.

கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாகவே இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவ மாணவியர்க்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் புரிந்துகொண்டு படிப்பீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் உங்களை உற்சாகப்படுத்தும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மனநிம்மதி தரும் வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: சித்திரை: நவ 8,9,10,12; சுவாதி:நவ 7,8,12; விசாகம்: நவ 8,9

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,7

தவிர்க்க வேண்டிய நாள்கள்: சித்திரை: நவ 6,7,11; சுவாதி: நவ 6,9,10,11; விசாகம்: 6,7,10,11,12

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நன்மை தரும்.

பாராருல கும்பனி மால்வரையும் கடலும்சுட ருமிவை யுண்டும், எனக்

காரா தென நின்றவ னெம்பெருமான் அலைநீருல குக்கரசாகிய,அப்

பேரானைமுனிந்த முனிக்கரையன் பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்,

நீரார்ப்பே ரான்நெடு மாலவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.

விருச்சிகம்:

விருச்சிகராசி அன்பர்களே! பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். செலவுகள் கட்டுக்குள் அடங்கியிருக்கும். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக இருக்கவும். வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும்.

அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், தற்காலிகமாகக் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரும்.

வியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன் வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

மாணவ மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். சக நண்பர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்ப நிர்வாகத்தில் சிறிது சிரமங்கள் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: விசாகம்: நவ 8,9; அனுஷம்: நவ 6,11,12; கேட்டை: நவ 6,10,11

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,5,6

தவிர்க்க வேண்டிய நாள்கள்: விசாகம்: நவ 6,7,10,11,12; அனுஷம்: நவ 7,8,9,10; கேட்டை: நவ 7,8,9,12

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! மெய்ம்மை குன்றா

மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்! முன்பு செய்த

பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்! பயந்த தனி

வழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே!

தனுசு:

தனுசுராசி அன்பர்களே! பணவரவும் அதற்கேற்ற செலவுகளும் சமமாக இருக்கும் என்பதால் பிரச்னை எதுவும் இருக்காது. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சிகளில் பொறுமை அவசியம். இருக்கும் வீட்டை மாற்றும் முயற்சியில் இப்போது ஈடுபடவேண்டாம். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு இந்த வாரம் சில சலுகைகள் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மகிழ்ச்சியான வாரம். தேவையான பணம் கிடைக்கும்.

மாணவ மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு நிம்மதி தரும் வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: மூலம்: நவ 6,8,9,10; பூராடம்: நவ 6,7,9,10,11; உத்திராடம்: நவ 6,7,8,10,11,12

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,3,6

தவிர்க்க வேண்டிய நாள்கள்: மூலம்: நவ 7,11,12; பூராடம்: நவ 8,12; உத்திராடம்: நவ 9

வழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,

கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர் தரும் கலவியேகருதி

ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து

நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.

மகரம்:

மகரராசி அன்பர்களே! பண வரவுக்குக் குறைவில்லை. செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமண வயதில் உள்ளவர்கள் வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் - மனைவி இடையில் சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடனே சரியாகிவிடும்,

அலுவலகத்தில் இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். அதனால் மனதில் உற்சாகம் ஏற்படும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்.

வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை நிலவும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை உடனுக்குடன் புரிந்துகொள்வதால் ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். வேலைக்குச் செல்லும் பெண்மணி களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: உத்திராடம்: நவ 6,7,8,10,11,12; திருவோணம்: நவ 7,8,9,11,12; அவிட்டம்: நவ 8,9,10,12

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6,7

தவிர்க்க வேண்டிய நாள்கள்: உத்திராடம்: நவ 9; திருவோணம்: நவ 6,10; அவிட்டம்: நவ 6,7,11

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக்

குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்

மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்

கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.

கும்பம்:

கும்பராசி அன்பர்களே! பண வசதி நல்லபடியே இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளை அல்லது பெண்ணின் திருமண விஷயத்தில் இந்த வாரம் ஈடுபடவேண்டாம். வாரத்தின் பிற்பகுதியில் கணவன் - மனைவி இடையில் சிறிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும்.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் உடல் அசதியும் மனதில் சோர்வும் உண்டாகும். ஆனாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு சோர்ந்த மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். கடையை விரிவு படுத்துவதற்கான எண்ணம் இருந்தால் இந்த வாரம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

கலைத்துறையினர் தங்கள் தொழிலில் உற்சாகத்துடன் செயல்படுவர். பண வரவு சுமாராகவே இருக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

மாணவ மாணவியர்க்கு நினைவாற்றல் அதிகரிக்கும். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்திப் படிப்பீர்கள். ஆசிரியரின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் கொடுக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலையே இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: அவிட்டம்: நவ 8,9,10,12; சதயம்: நவ 7,8,12 ; பூரட்டாதி: நவ 8,9

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,5,7

தவிர்க்க வேண்டிய நாள்கள்: அவிட்டம்: நவ 6,7,11; சதயம்: நவ 6,9,10,11; பூரட்டாதி: நவ 6,7,10,11,12

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,

மறையாய் மறைப்பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த

வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,

உள்ளத்தி னுள்ளே உளன்.

மீனம்:

மீன ராசி அன்பர்களே! பணவசதி சுமாராகத்தான் இருக்கும். சிறு சிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படவும் அதன் காரணமாக மருத்துவச் செலவுகள் செய்யவும் நேரும். குடும்பத்தில் சற்று நிம்மதி இல்லாத நிலை காணப்படும். வழக்குகளைப் பொறுத்தவரை உங்களுக்குச் சாதகமான நிலையே இருக்கும். சகோதரர்கள் வகையில் அனுகூலம் இருக்காது.

அலுவலகத்தில் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. சக பணியாளர்கள் உங்களிடம் மரியாதையாக நடந்துகொள்வார்கள்.

வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். கடன் கொடுப்பது மற்றும் வாங்குவது இரண்டையும் இந்த வாரம் தவிர்க்கவும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்காது. பொறுமையுடன் அடுத்தடுத்து முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.

மாணவ மாணவியர்க்கு நண்பர்களின் குறுக்கீடுகளால் படிப்பில் ஆர்வம் குறையும் என்பதால், பொழுதுபோக்குகளைத் தவிர்த்துவிட்டு படிப்பில் முழுகவனம் செலுத்தவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு மனநிறைவு தரும் வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: பூரட்டாதி:நவ 6,7,10,11,12; உத்திரட்டாதி:நவ 6,7,8,11,12; ரேவதி: நவ 6,10,11

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,7,9

தவிர்க்க வேண்டிய நாள்கள்: பூரட்டாதி: நவ 8,9; உத்திரட்டாதி: நவ 9,10; ரேவதி: நவ 7,8,9,12

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்.

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

Source: Vikatan

Friday, 19 May 2017

சிம்ம ராசி பெண்ணை திருமணம் செய்தால்... இவ்வளவு அதிர்ஷ்டமா?


ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு ஒருவிதமான குணாதிசயங்கள் இருப்பது இயல்பு.

ஆனால், அந்த வகையில் சிம்ம ராசி பெண்களுக்கு என்று ஒருமித்த சில பொதுவான குணாதிசயங்கள் இருக்கின்றது.

அவை காதலில் எப்படி இருக்கிறது? இவர்களை காதலிக்கும் ஆண்களுக்கு என்ன அதிரஷ்டம் உள்ளது என்பது பற்றி பார்ப்போம்..

சிம்ம ராசி பெண்களிடம் உள்ள குணாதிசயங்கள் என்ன?

சிம்ம ராசி பெண்களிடம் பொதுவாகவே அறிவுக் கூர்மை அதிகம். மேலும் படைப்பாற்றல், நகைச்சுவை ஆற்றல் கொண்டவர்களாக இவர்கள் திகழ்வார்கள். இவர்கள் எங்கிருந்தலும் தனக்கானவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள்.

புத்தகங்கள் மற்றும் படங்களில் உள்ள கனவு வாழ்க்கையை கூட இவர்கள் உண்மையாக மாற்றும் திறமையை கொண்டவர்களாக திகழ்வார்கள்.

சிம்ம ராசி பெண்கள் மிகவும் அதிகமாக காதலிப்பார்கள். நீங்கள் ஒரு மடங்கு எதிர்பார்த்தால், அவர்களிடம் இருந்து ஆயிரம் மடங்கு எதிரொலிக்கும்.

சிம்ம ராசி பெண்கள் ஒரே மாதிரியான சுழற்சியான வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள். ஒவ்வொரு நாளுமே இவர்கள் புதிய புதியதாய் வாழ விரும்புவார்கள்.

தாம்பத்தியத்தில் ஆண்களுக்கு நிகராக ஈடுபடும் திறன் கொண்டவராக சிம்ம ராசி பெண்கள் திகழ்வார்கள். எனவே சிம்ம இராசி பெண்களை திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் அதிர்ஷ்டசாலி தான்.

சிம்ம ராசி கொண்ட பெண்கள் உடை உடுத்துவதில் இருந்து, தாங்கள் செய்யும் சிறிய விடயங்களில் கூட அழகாக ஈடுபடுபவர்களாக இருப்பார்கள்.

தங்களின் துணையை திடீரென ஆச்சரியப்படுத்துவதில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். ஆனால் அது பரிசாக மட்டுமில்லாமல், அவர்களின் துணை எதிர்பார்த்த விடயமாகக் கூட இருக்கலாம்.

சிம்ம ராசி பெண்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிடுவதில் எவ்வித குழப்பமும் கொள்ளாமல், யாரையும் சந்தேகிக்கும் குணத்தை கொள்ளாமலும் இருப்பார்கள்.

தங்கள் துணையின் மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும்
செய்யும் குணத்தைக் கொண்டவர்களாக சிம்ம ராசி பெண்கள் இருப்பார்கள்.

Tuesday, 16 May 2017

ஜாதகம் இல்லாதவர்கள் இதை செய்திடுங்கள்...!


பரிகாரங்கள் என்பது ஒருவரின் ஜாதக ரீதியாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஜாதகம் இல்லாதவர்கள் தங்களின் கஷ்டங்களை போக்க பரிகாரம் எப்படி செய்ய வேண்டும்?

ஜாதகம் இல்லாதவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

பசு மாடுகளுக்கு புல், வைக்கோல் மற்றும் அகத்திக்கீரை போன்ற தீவனங்களை வழங்க வேண்டும்.

ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் மற்றும் வஸ்திரதானம் செய்ய வேண்டும்.

தினமும் பைரவருக்கு உணவிட்டு வர வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கி நிம்மதி உண்டாகும்.

பறவைகளுக்கு நவதானியங்களும், காகத்திற்கு உணவுகளும் தினமும் மறக்காமல் வைக்க வேண்டும்.

தினமும் பெரியோர்களின் காலில் விழுந்து, அவர்களின் நல்ல ஆசியை பெற வேண்டும்.

பெற்றோர்களின் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் சொற்படி நடக்க வேண்டும்.

ஏழை மற்றும் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு பொருள், கல்வி உதவி அளிக்க வேண்டும்.

கோவில்களில் அடிக்கடி அன்னதானம் செய்ய வேண்டும். தினமும் காலையில் குளித்து விட்டு, சூரியக் கடவுளை வணங்க வேண்டும்.
ஜாதகம் இல்லாதவர்கள் முக்கிய வேலையாக வெளியே செல்லும் போது, சர்க்கரை கலந்த தயிரை சிறிதளவு சாப்பிட்ட பின் செல்ல வேண்டும்.


ஜாதகம் இல்லாதவர்கள் விருத்தாசலத்தில் பழமலைநாதர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகரை வேண்டி, வணங்கினால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.

Monday, 10 April 2017

விநாயகப்பெருமான் முன் தோப்புக்கரணம் போடுவது ஏன்?


தோப்புக்கரணம் போடுவது ஏன்?

முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு வழக்க முறையிலும் பல்வேறு ஆரோக்கிய அர்த்தங்கள் இருக்கும்.

அந்த வகையில், தான் தலையில் குட்டு போடுவதும், தரையில் தோப்புக்கரணம் போடும் முறைகள் வழக்கத்தில் உள்ளது.

ஏனெனில் நமது காதுகளில் உள்ள 200 நரம்புகள் சீராக ரத்தல் செல்வதற்கும், புதிய ரத்தம் உருவாகி ஞாபக சக்தியை வளர்ப்பதற்கும் இந்த வழக்க முறைகள் பெரிதும் உதவுகிறது.

எனவே தான் சாதரணமாகக் கூட குழந்தைகளுக்கு மறதி ஏற்படாமல் இருக்க தோப்புக்கரணம் போடுவது, மோதிரக் கையினால் குட்டுப் போட வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

முன்னோர்களின் ஆரோக்கிய பழக்கங்களில் சில..

ஒவ்வொருவரும் அதிகாலையில் எழும் பொழுது, வலதுபக்கம் திரும்பி படுக்கையில் இருந்து எழுந்திருக்க வேண்டும். அப்படி செய்தால், அன்றைய நாளில் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்குமாம்.

காலையில் எழுந்தவுடன் முதலில் உச்சரிக்கும் வார்த்தை நேர்மறைச் சிந்தனையோடு இருக்க வேண்டும். அது தெய்வப் பெயர்களாகக் கூட உச்சரிக்கலாம்.

காலையில் எழுந்து முதலில் உள்ளங்கையைப் பார்த்த பின் பூமியைத் தொட்டு வணங்கி, அதன் பின் காலைக் கடன்களைத் தொடர்ந்தால், ஒவ்வொரு நாளும் உற்சாகமாகச் செயல்படும் என்று கூறுகின்றார்கள்.

Friday, 7 April 2017

அழகான மனைவி அமையும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?


ஒருவரின் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சுபர், குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன் போன்றவர்கள் அமர்தல், பாவர்கள் பார்க்காமல் இருத்தல் போன்றவை இருந்தால், அவர்களுக்கு அழகான, அறிவான மனைவி/கணவன் அமைய வாய்ப்புள்ளதாம்…

ரிஷபம் மற்றும் துலாம்

ரிஷபம் மற்றும் துலாம் ராசிக் காரர்கள் அனுபவிக்க பிறந்தவர்கள். தனது வாழ்க்கையில் உணவாக இருந்தாலும் கூட நல்ல ருசியாக இருக்க வேண்டும், சாப்பிடும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த இராசிக் காரர்கள்.

ரிஷப ராசிக் காரர்கள் மிகவும் உஷாராக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு அழகான மனைவி/கணவன் கிடைப்பது நிச்சயம்.

தனுசு மற்றும் கடகம்

தனுசு, கடகம் ராசிக் காரர்கள் ஆண், பெண் விஷயத்தில் பெரிய ஆய்வாளர்களாக இருப்பார்கள். அதனால் அவர்கள் ஒருவரின் புன்னகை, பேச்சு, கண்கள், மூக்கு என்று ஒவ்வொரு பாகத்தையும் ரசித்து காதலித்து திருமணம் செய்பவர்களாக இருப்பார்கள்.

மகரம், கும்பம், சிம்மம், மேஷம் மற்றும் விருச்சிகம்

மகரம், கும்பம், சிம்மம், மேஷம், விருச்சிகம் போன்ற ராசிக் காரர்கள் எல்லாம் இஷ்டப்பட்டு திருமணம் செய்பவர்கள் என்று கூறுவதை விட மிகவும் கஷ்டப்பட்டு திருமணம் செய்பவர்கள் என்று ஜோதிடம் சொல்கிறது

ஆனால் இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சுபர் லக்னம் ஏழாமிடத்தில் இருந்தால் இவர்களுக்கும் அழகான வாழ்க்கை துணை அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றது.

கன்னி, மிதுனம் மற்றும் மீனம்

கன்னி, மீனம் மற்றும் மிதுனம் ராசிகாரர்கள் கணக்குப் போட்டுப் பார்த்து செயலில் இறங்குபவர்கள். இவர்கள் தங்களுக்கான துணையை தேர்வு செய்வதிலும் கூட தெளிவாக இருப்பார்கள்.

இந்த ராசிக்காரர்கள் அனைவருமே ஒருவரது குணாதிசயங்கள், அவரது குடும்பம், என்று அனைவரை பற்றியும் தெரிந்துக் கொண்டு தான் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்வார்கள்.

மேலும் இவர்களுக்கு அழகு என்பது இரண்டாம் பட்சம் தான். அறிவும், திறமையும் தான் இவர்கள் எதிர்பார்ப்பது.

குறிப்பு

மேலே கூறப்பட்டுள்ள அனைத்தும் பொதுவான குறிப்புகள் தான். ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் இடத்தில் வலுத்தவர், 7 ஆம் இடத்தை சுபர் பார்வை செய்பவர், சுக்கிரன், குரு வலிமையான நிலையில் இருந்தால், அவர்களுக்கு அழகான கணவன், மனைவி அமைவது நிச்சயம்.

Wednesday, 22 March 2017

எந்த பரிகாரம் செய்வதால் கோடீஷ்வரர் ஆகலாம் தெரியுமா?


ஐப்பசி மாதத்தில் குபேர எந்திரத்தினை பயன்படுத்தி செய்யும் வழிபாடு வீட்டில் செல்வ வளத்தினை பெருக செய்யும்.

இந்த படத்தில் உள்ள குபேர யந்திரத்தை போல பூஜை அறையில் அரிசி மாவினால் வரைந்து கொள்ளவேண்டும்.

வடக்கு திசை பார்த்து குபேர படத்தினை வைத்து இப்பூஜையினை செய்வது இன்னும் சிறப்பு.

குபேர மந்திரம்:

ஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம்

ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம்

க்லீம் விட்டேஸ்வராய நமஹ

ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு ரூபாய் நாணயத்தினை வைத்து அதில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பூக்களை வைத்து, சுத்தமான நெய்யினை ஊற்றி விளக்கேற்றி இந்த குபேர மந்திரத்தினை 11 முறை கூறி வழிபட வேண்டும்.

பின், விளக்கு அணைந்ததும் இந்த நாணயங்களை எடுத்து வைத்து விட்டு மறுநாள் பூஜையில் உபயோகிக்கலாம். இதே போல் ஐப்பசி மாதம் முழுதும் வழிபாடு நடத்தினால் செல்வம் பெருகும்.

ஐப்பசி மாதம் முடிந்த பின்னர், ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் இப்பூஜையினை செய்தால், குபேரர் நம்முடன் இருந்து செல்வத்தினை வாரி வழங்குவார்.


கெட்ட கனவு வந்தால் என்ன செய்வது?


அதிகாலையில் கனவு கண்டால் பலிக்கும் என்கிறது சாஸ்திரம்.

நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம்.

கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது.

அன்று பசுவுக்கு புல், பழம், கீரை கொடுக்க வேண்டும்.

அதன் முன் நின்று, தான் கண்ட கனவினை மனசுக்குள் சொல்ல வேண்டும்.

“ அச்சுதா! கேசவா! விஷ்ணுவே! சத்ய சங்கல்பரே! ஜனார்த்தனா! ஹம்ஸ நாராயணா! கிருஷ்ணா! என்னை காத்தருள வேண்டும்”

என சொல்லி திருமாலை வணங்க வேண்டும்.

Sunday, 12 March 2017

ஜென்ம நட்சத்திரத்தில் தவிர்க்க வேண்டியவை எவை தெரியுமா ? படித்து பாருங்கள்..!


ஒருவர் பிறக்கும் பொழுது உடல், மனோ காரகன் சந்திரன் இருக்கும் நட்சத்திரம் அவரின் ஜென்ம நட்சத்திரம், அந்த நட்சத்திரம் எந்த ராசியில் உள்ளதோ அதுவே ஜென்ம ராசி ஆகும்.

ராசி மண்டலத்தில் 12 ராசிகளில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் , இவற்றில் 3 நட்சத்திர ங்களுக்கு ஒரு கிரகம் என்ற கணக்கில் 9 கிரகங்கள் அதிபதியாக உள்ளன.

நட்சத்திரங்கள் – அதிபதி

அஸ்வினி மகம் மூலம் – கேது

பரணி பூரம் பூராடம் – சுக்கிரன்

கார்த்திகை உத்திரம் உத்திராடம் – சூரியன்

ரோகினி ஹஸ்தம் திருவோணம் – சந்திரன்

மிருகசீரிஷம் சித்திரை அவிட்டம் – செவ்வாய்

திருவாதிரை சுவாதி சதயம் – ராகு

புனர்பூசம் விசாகம் பூரட்டாதி – குரு

பூசம் அனுஷம் உத்திரட்டாதி – சனி

ஆயில்யம் கேட்டை ரேவதி – புதன்

உதாரணத்திற்கு, ஒருவர் பூர நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அது ஜென்ம நட்சத்திரமாகும் பூராடம், பரணி அவரின் அனுஜென்ம, திரி ஜென்ம நட்சத்திரங்கள் ஆகும்.

இந்த மூன்று நட்சத்திரங்கள் வரும் நாட்களிலும் கூடாதவைகள் என்பவைகளை தவிர்த்தல் வேண்டும்.

ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் செய்ய தக்கவை என்றும், கூடாதவை, ஆகாதவை என செயல்களில் சிலவற்றை நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர், இங்கு கூடாதவை, ஆகாதவை என்று கூறுவது அவர்களின் அனுபவத்தை கொண்டு தான், அவற்றை தவிர்க்கலாம், அவற்றை செய்வதால் எதிர்மறையான அல்லது திருப்தியற்ற பலன்களே ஏற்படலாம்.

ஜென்ம நட்சத்திரத்தில் செய்ய வேண்டியவை குலதெய்வ, இஸ்ட தெய்வ வழிபாடு , புத்தாடை அணிதல், அன்னதானம், தான தர்மங்கள் செய்தல், நிலம், சொத்துகள் வாங்குதல், பதவியேற்பது போன்றவற்றை செய்யலாம்.

ஜென்ம நட்சத்திரத்தில் தவிர்க்க வேண்டியவை திருமணம், சீமந்தம், முடி இறக்குதல், காது குத்து, எண்ணெய் ஸ்நானம் ( எண்ணெய் குளியல்), தாம்பத்தியம், மருந்து உண்ணுதல், அறுவை சிகிச்சை போன்ற உடல் தொடர்பான விசயங்களை தவிர்த்தல் நலம்.

Friday, 10 March 2017

வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க வேண்டுமா? டிப்ஸ்


நம்மிடத்தில் எத்தனை வளங்கள் இருப்பினும் செல்வ வளம் முக்கியமானது, பெரும்பாலானோரின் எதிர்ப்பார்ப்பும் அதுவே.

அதனாலேயே அஷ்டலட்சுமிகளில் தனலட்சுமிக்கு வரவேற்பு அதிகம். சில வழிமுறைகளை நாம் கடைப்பிடித்தாலே திருமகளின் அருள் நமக்கு முழுவதுமாகக் கிடைக்கும்.


  • வியாழக்கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி குபேர காலத்தில் குபேரனை வழிபடவேண்டும்.
  • குபேரனுக்கு ஊறுகாய் மிக பிடித்தமானதாகும். எனவே வீட்டில் விதவிதமாக ஊறுகாய் இருந்தால் குபேரன் அருள் கிடைக்கும்.
  • வீட்டில் வெள்ளைப் புறா வளர்த்தால் பணத்தட்டுப்பாடு நீங்கும்.
  • தினம் மாலை வேளையில் ஐந்துமுக குத்து விளக்கில் டைமன் கல்கண்டினை போட்டு விளக்கேற்றினால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
  • பகல் 12 மணிக்கு (அபிஜித் நட்சத்திரத்தில்) திருநங்கையருக்கு திருப்தி அளிக்கும் வண்ணம் உணவளித்து அவர் கையால் பணம் பெற்று கொண்டால் செல்வம் நிலைத்திருக்கும்.
  • வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயிர், ஊசி, குடிநீர், உப்பு போன்றவற்றை யாருக்கும் கொடுக்கக்கூடாது.
  • வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு அருந்த நீர் கொடுத்து, பின் மஞ்சள், குங்குமம் அளித்தால் தரித்திரம் தீரும்.
  • வெள்ளிக்கிழமைகளின் சுக்ர ஓரைகளில் சுண்டல், மொச்சை செய்து நம் வீட்டில் உள்ளோர் மட்டும் சாப்பிட்டால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
  • அமாவாசையன்று வீட்டில் கோலம் போடக்கூடாது. தலையில் எண்ணெய் தேய்க்கக்கூடாது. பித்ருக்களை அன்று வழிப்பட செல்வம் சேரும்.
  • பசுவின் கோமியத்தினை தொடர்ந்து 45 நாட்கள் வீட்டில் தெளித்து, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி குளித்தால் தரித்திரம் தீர்ந்து பணம் சேரும்.
  • பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிந்தால் தனப்ராப்தி கிடைக்கும்.
  • தினசரி குளிக்கும் முன்னர் பசுந்தயிரை உடலில் தேய்த்து குளித்தால் பணவரவு கூடும்.
  • குளித்தவுடன் முதலில் முதுகைத் துடைத்தால் தரித்திரம் விலகும்.
  • தினம் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலித்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
  • சுக்ர ஓரையில் உப்பு வாங்கினால் செல்வம் குவியும்.
  • வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.
  • மஞ்சளுடன் வாசனை திரவியம் கலந்து வீட்டிலும், தொழில் நடக்கும் இடத்திலும் தெளித்தால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.
  • குபேரனுக்கு வாழைத்தண்டில் திரி போட்டு விளக்கேற்றினால் பணவரவு பெருகும்.
  • சம்பாதிப்பதி ஒரு தொகையினை சேர்த்து அன்னதானமிட்டால் அதை போல் ஐந்து மடங்கு பணவரவு கிட்டும்.
  • மகாலட்சுமிக்கு பச்சைப்பட்டு உடுத்தி வணங்கினால் பணவரவு கூடும்.
  • குலதெய்வத்தை நம்பிக்கையுடன் அதிகாலை நேரத்தில் வழிப்பட பணம் வரும்.
  • ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.
  • பூஜை அல்லது கடவுளை வணங்கும் போது கைலி எனும் லுங்கிகளை அணியக்கூடாது.
  • இரவில் தயிர் சேர்த்தால் லட்சுமி கடாட்சம் போய் விடும்.
  • வீட்டு வாசலைப் பார்த்த வண்ணம் வெங்கடாசலப்பதியின் படத்தை மாட்டி வைத்தால் தனம் பெருகும்.
  • பணத்தை ஒருவரிடம் கொடுக்கும் போது தலைப்பகுதி நம்மிடம் இருக்குமாறுக் கொடுக்க வேண்டும்.

Friday, 24 February 2017

இன்று இந்த மந்திரத்தை உச்சரித்தால் நல்ல பலன் கிடைக்கும்


சிவராத்திரி மற்றும் சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்வது பெரும் பலனை அள்ளித் தரும்.

அஸ்வினி ஸ்ரீமதாத்மனே
குணைகஸிந்தவே நம சிவாய
தாமலேச தூதலோக
பந்தவே நம சிவாயநாம
சோஷிதா நமத்
பவாந்தவே நம சிவாய
பாமரேதர ப்ரதாத
பாந்தவே நம சிவாய
பொதுப் பொருள்

ஐஸ்வர்யம் மிகுந்தவரே, குணக்கடலே, தன் ஒளித் திவலைகளால் சூரியனின் ஒளியைத் தோற்கடிப்பவரே, தன்னுடைய திருப்பெயரைச் சொல்பவருக்கு நெருங்கியவராகவும், ஞானிகளுக்கு மிகவும் நெருங்கியவராகவும் விளங்கும் சிவபெருமானே நமஸ்காரம்.