Home
News
Showing posts with label News. Show all posts
Showing posts with label News. Show all posts
Sunday, 17 December 2017
Tuesday, 5 December 2017
Friday, 1 December 2017
ரிவி சீரியல் பார்த்து உடலில் தீ வைத்த சிறுமிக்கு நேர்ந்த கதி...
கர்நாடகாவில் ரிவியில் சீரியலைப் பார்த்து, அதில் வரும் கதாபாத்திரத்தைப் போல தீ நடனம் ஆடிய 7 வயது சிறுமி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹரிஹரா டவுனைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். கூலித் தொழிலாளியான இவருக்கு மகள் பிரார்த்தனா இவர் வீட்டில் ஒரு குறிப்பிட்ட கன்னட சீரியலை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த சீரியலில் நடிகை ஒருவர் தன் கை, கால்களில் தீ வைத்து, தீப்பந்தம் ஏந்தி நடனமாடும் காட்சிகள் வந்தன. அதைப் பார்த்த பிரார்த்தனாவும் கையில் ஒரு பேப்பரை எடுத்து தீ வைத்துக்கொண்டு நடனமாடினாள். அப்போது பிரார்த்தனாவின் ஆடையில் தீப்பற்றிக் கொண்டது.
வலி தாங்க முடியாமல் சிறுமி அலரத்தொடங்கினால். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் சிறுமியின் உடலில் பற்றியிருந்த தீயை அணைத்தனர். உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சிறுமியைக் கொண்டு சென்றனர்.
கடந்த 15 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பிரார்த்தனா சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தாள். இதையடுத்து சிறுமியின் தந்தை மஞ்சுநாத் அளித்த புகாரின்பேரில் ஹரிஹரா டவுன் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரார்த்தனாவின் தந்தை மஞ்சுநாத் கூறுகையில், நான் என் மகளை கண்காணிக்கத் தவறிவிட்டேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் இதேபோல் ஒரு சீரியலை பார்த்து நிறைய பேர் கட்டிடத்தின் மேல் இருந்து பறக்க முயற்சித்து கீழே விழுந்து இறந்தனர். இப்போது என் மகள் உடலில் தீ வைத்து நடனமாடி உயிரிழந்திருக்கிறாள். இத்தகைய சம்பவங்கள் இனியும் தொடராத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முகத்தில் 50 பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பெண் ... பேய் போல் மாறிய கொடுமை
ஏஞ்சலினா ஜோலியின் அழகில் காதல் வயப்பட்டு 50 பிளாஸ்டிக் சர்ஜரியை செய்த பெண் ஒருவரின் முகம் கொடூரமாக மாறிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஈரானின் டெரான் பகுதியைச் சேர்ந்த சஹர் தாபர் என்ற பெண் ஹாலிவுட்டில் பிரபலமான நடிகையான ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். தன் அழகு ஏஞ்சலினாவை போல் காட்சி அளிக்க வேண்டும் என்பதற்காக மேக்கப்பில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளார்.
தொடர்ந்து ஏஞ்சலினா மீது காதல் அதிகரிக்கவே சஹர் தாபர் முகத்தில் மட்டும் 50 வகையான பிளாஸ்டிக் சர்ஜரிக்கு செலவிட்டுள்ளார். மேலும் உடல் எடையை டயட் இருந்து குறைத்துள்ளார். இதனால் 19 வயதான அப்பெண் தற்போது 40 வயதை தாண்டியவர் போல் காட்சியளிக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.
இவருக்கும் ரோஷன் என்பவருக்கும் திருமணம் நடக்கபோகும் நேரத்தில், இவர் இப்படி செய்ததால் நெட்டிசன்களிடமிருந்து நேர் எதிர்மறை விமர்சனங்கள் குவிகிறதாம். இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பார்த்த 3,18,000 பேர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
https://www.instagram.com/sahartabar_official/
ஒருதலைக்காதல்! தாய், மகளுக்கு ஏற்பட்ட விபரீதம்!!
காதலிக்க மறுத்த பெண் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் பலத்த காயமடைந்த தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துன்பியல் சம்பவம் சென்னை ஆதம்பாக்கத்தில் இடம்பெற்றது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது;
சரஸ்வதி நகரைச் சேர்ந்த ரேணுகா என்பவரின் மகளான இந்துஜாவை ஒருதலையாகக் ஆகாஷ் என்பவர் காதலித்து வந்தார்.
குறித்த நபர் சில நாட்களுக்கு முன் அவரது வீட்டுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் தான் காதலித்த பெண் என்று கூட பாராமல் இந்துஜா மீது பெற்றோலை ஊற்றிவிட்டு குறித்த இளைஞன் தப்பியோடிய சம்பவம் அனைவரிடத்திலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
உடல் முழுவதும் எரிந்த நிலையில் குறித்த பெண் (இந்துஜா) அதே இடத்தில் உயிரிழந்தார்.
அவரைக் காப்பாற்றச் சென்ற தாய் ரேணுகா, சகோதரி நிவேதா ஆகிய இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பெண்ணின் தாயார் உயிரிழந்துள்ளார்.
Tuesday, 28 November 2017
மகளை கௌரவ கொலை செய்த தந்தை! திரும்பி வந்த மகள் என்ன செய்தார் தெரியுமா?
பாகிஸ்தானில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சொந்த மகளை கொலை செய்த தந்தைக்கு மகள் தக்க பாடம் புகட்டியுள்ளார்.
அப்பெண்ணின் பெயர் சபா... இவர் துப்பாக்கிச் சூடு வாங்கும் இவருக்கு வயது பதினெட்டு... நெஞ்சை உறையச் செய்திடும் இச்சம்பவம் டாக்குமெண்ட்ரியாக எடுக்கப்பட்டு ஆஸ்கர் விருது பெற்றது.
காய்சர் என்ற நபரை நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் சபா. தனது அப்பா காதலுக்கு சம்மதம் தெரிவித்த மகிழ்ச்சியுடனும், கனவுகளுடனும் தனது காதலனுடன் அவ்வப்போது போனில் பேசிக் கொண்டிருந்தார்.
இவர்களின் காதலுக்கு வில்லனாக வந்தது இவரது மாமா.... காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாமா கொஞ்சம் கொஞ்சமாக அப்பாவின் மனதை மாற்ற ஆரம்பித்தார். காதலிக்கும் அந்த நபர் ஏழ்மையைக் கருதி மனதை மாற்றியுள்ளார்.
பின்பு தனது சொந்தக்கார நபர் ஒருவரை திருமணம் செய்து வைக்கலாம் என்று சபாவின் அப்பாவிடம் மாமா கூறியுள்ளார். உடனே பதறிய சபா அங்கு நடக்கும் சூழ்நிலையினை தனது காதலருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தெரிவித்தார். அவர்கள் அவரை இங்கு வந்து விடு நாங்கள் உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
திட்டமிட்டபடி வீட்டைவிட்டுச் சென்ற சபா அன்றே நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் செய்த அன்று இரவே இவர்களை பிரித்து சபாவினை பிரித்துவிட்டனர்.
பல்வேறு மிரட்டல்களை சந்தித்த சபா எதற்கும் துணிந்து நின்றார். இறுதியில் உறவினர்களின் கெஞ்சல்கள், குர்ஆன் மீது சத்தியம் எல்லாவற்றையும் அவதானித்த சபா இனி நம்மளை பிரிக்க மாட்டார்கள் என்று துணிந்து அவர்களுடன் சென்றார்ஃ
சில மணி நேரத்தில் வழியில் ஓரிடத்தில் காரினை நிறுத்தி உள்ளே உட்கார்ந்திருந்த சபாவை அவரது மாமா வெளியே இழுத்து கடுமையாக தாக்கியுள்ளார். தனனை விட்டுவிடும் படி கெஞ்சிக் கொண்டிருந்த சபாவின் குரலை அவர்கள் பொருட்படுத்தவில்லை.
ஒருவர் அவரது கையினை பிடிக்க அவரது மாமா அவரது கழுத்தினையும், வேறொருவர் அவரது தலையில் துப்பாக்கியினை பிடித்தனர். துப்பாக்கி முனையிலிருந்து தப்பிக்க அசைந்து கொண்டிருந்த சபாவின் கன்னத்தில் குண்டு நுழைந்தது. தலையில் சுடுவதற்கு வைத்த குறி தப்பிவிட்டது.
சம்பவ இடத்தில் மயங்கிய அவர் இறந்துவிட்டார் என்று அவர்கள் உறவினர்கள் அவரை மூட்டையாக கட்டி ஆற்றோரத்தில் வீசிவிட்டனர். இரவில் அங்கிருந்து தப்பிய அவரை சிலர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதன் பின்பு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மயக்கத்தில் இருந்த சபா கண்விழித்த போது விசாரணை நடத்தப்பட்டது. விபத்து என்று நினைத்துக் கொண்டிருந்த பொலிசாருக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது.
சபா கொடுத்த புகாரின் பெயரில் அவரது மாமா, அப்பாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை முடிந்து சபா காதலருடன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
குர்ரான் மீது அவர்கள் பொய் சத்தியம் செய்தார்கள். துன்புறுத்தவே மாட்டோம் என்று சொல்லிவிட்டு என்னை கொல்லத் துடித்தார்கள். அவர்களை ஒரு போதும் நான் மன்னிக்க மாட்டேன். என்ன நடந்தாலும் சரி, இடையில் யார் வந்தாலும் சரி. என் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் மன்னிப்பே கிடையாது என்று உறுதியாக சொன்னார் சபா.
தந்தையை சிறையில் அவதானிக்க சென்றவர்கள் சபாவினை புகாரை திரும்ப பெறுமாறு கூறியுள்ளனர். எதற்கும் சம்மதிக்காமல் இருந்த சபாவின் மீது அவர்களுக்கு இருந்த கோபம் மட்டும் குறையவே இல்லை.
நீதிமன்றத்தில் வைத்து தந்தையும், மாமாவும் கெஞ்சியுள்ளனர். அதனை காதில் வாங்கிக் கொள்ள மறுத்த சபா தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். தனது காதலனுடன் சந்தோஷமாக வாழ்ந்துள்ளார்.
திடீரென சபா மாமியாரிடம் ஊர்க்காரர்கள் வந்து பேச, மறுக்க முடியாமல் குழம்பிய மனநிலையில், சரி சொல்லுங்கள் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். கேஸை வாப்பஸ் வாங்கிடு என்பதனை ஒப்புக்கொண்டார். நீதிமன்றத்தில் தான் அப்பாவையும் மாமாவையும் மன்னிப்பதாக தெரிவிக்க இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். என் விதி என்ன சொல்கிறது என்று தெரியாது. மீண்டும் அவர்கள் கையாலயே கொல்லப்படலாம் யாருக்குத் தெரியும் என்கிறார் சபா. தற்போது ஒரு குழந்தையுடன் கணவர் வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
சூப்பர் சிங்கர் ஃபரிதாவின் தற்போது இவரின் பரிதாப நிலை தெரியுமா?
ஒரு தனியார் தொலைக்காட்சியின் மூலம் சூப்பர் சிங்கராக உலக தமிழர்களை கவர்ந்து வந்தவர் ஃபரிதா. 2016ம் ஆண்டு சூப்பர் சிங்கரில் இரண்டாம் இடம் பிடித்தவர். இவர் காதலித்து திருமணம் செய்து ரேஷ்மா, ரெஹானா என்ற இரு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் போதே கணவரை இழந்து வாழ்கிறார். பாட்டு ஒன்றே அவருக்கு நம்பிக்கையாக இருந்தது. ஆனால் இப்போது அது இல்லாமல் அவர் சந்திக்கும் துன்பத்தை பகிர்ந்துள்ளார்.
உலகிற்க்கு என்னை அறிமுகப்படுத்தியது விஜய் ரிவி தான். அதற்கு நான் நன்றிகடன் பட்டிருக்கிறேன். இப்போது நண்பர்கள் மூலம் கிடைக்கும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறேன். ரேஷ்மா டாக்டராக வேண்டும் என்றும், ரெஹானா காஸ்டியூம் டிசைனிங்கிலும் ஆர்வமான இருப்பதால் தன் குழந்தைகளின் படிப்பு செலவிற்காக சிரமம்படுகிறேன்.
எனக்கு தெரிந்தது பாடுவது மட்டும் தான். வாய்ப்புகள் வரவில்லை. சில படங்கள் திரைக்கு வராமல் இருக்கிறது. சமீபத்தில் யுவன் இசையில் பாடியிருக்கிறேன் அதைதான் நம்பியுள்ளேன். 36 வயதான எனக்கு இரு குழந்தைகளால் தான் தற்போது மகிழ்ச்ச்சியை தருகிறார்கள். அவர்களை 4 வருடத்திற்குள் படிப்பு மற்றும் அவர்களுக்கென சேமிப்பை நான் ஒதுக்க வேண்டும்.
என்னை போன்றவர்களுக்கு வயதை பார்க்காமல் குரல் வளத்தை பார்க்கும் வாய்ப்புகள் வரலாம், இல்லையென்றால் மியூசிக் கிளாஸ் வைத்தாவது வாழ்க்கையை பார்க்க வேண்டும். பாடகர்கள் என்றாலே பல நிகழ்ச்சியில் பாடி பணம் சேர்ப்பது தான் என்று பலரின் எண்ணம். இப்படியும் ஒரு வலிகள் இருக்கத்தான் செய்யும்.
Friday, 24 November 2017
பாலியல் வழக்கில் சிக்கிய 4 வயது சிறுவன்... அதிர்ச்சியில் பொலிசார்
புதுடில்லியில் உள்ள பள்ளி ஒன்றில் 4 வயது சிறுவன் சக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் யு.கே.ஜி. படிக்கும் 4 வயது மாணவி சமீபத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டாள். பெற்றோர் விசாரித்த போது சக மாணவன் சிறிமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சிறுமியை சேர்த்த போது சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமியின் பிறப்புறுப்பில் காயம் இருப்பதை உறுதி செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், பொலிசில் புகார் செய்ததையடுத்து அந்த 4 வயது சிறுவனுக்கு எதிராக டில்லி பொலிசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் 7 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் பொலிசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Wednesday, 22 November 2017
வெளிநாட்டில் வேலை பாரத்த பெண் இந்தியாவில் பிச்சையெடுக்கும் அவலம்!!
இந்தியாவில் இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் அமெரிக்க குழுவுக்கு ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா தலைமை வகிக்க உள்ளார்.
சுமார் மூன்று நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டினால் ஹைதராபாத்தில் இருக்கும் பிச்சைக்காரர்கள் அனைவரும் மறுவாழ்வு மையத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில் 133 பெண் பிச்சைக்காரர்கள் Cherlapalliல் இருக்கும் Ananada ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்களை Cherlapalli சிறை கண்காணிப்பாளர் K Arjun Rao விசாரித்த போது சில நம்ப முதியாத தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பிச்சைக்காரர்களில் இரண்டு பெண்களில் ஒருவர் அமெரிக்காவின் கிரீன் கார்டு ஹோல்டர் என்றும் மற்றொருவர் லண்டனில் வேலைபார்த்து வந்தவர் என்றும் பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அப்போது விசாரணையில் இரண்டு பெண்கள் அனைத்து கேள்விகளுக்கும் ஆங்கிலத்தில் பதிலளித்துள்ளனர். அந்த பெண்ணின் பெயர் Farzona (50) முதுகலை பட்டம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
லண்டனில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். இவருக்கு அமெரிக்காவிலும், ஹைதராபாத்திலும் ஒரு சொந்த வீடும் உள்ளதாம். மேலும் மகன் ஒருவர் உள்ளதாகவும் விசாரணாஇயில் தெரியவந்துள்ளது.
இநத பெண்ணின் கணவர் இறந்துவிட்டதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான இவர் கோவில் கோவிலாக சென்றுள்ளார், அதன் பின் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தற்போது பிச்சையெடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இது குறித்து அந்த பெண் கூறுகையில், தான் இங்குள்ள தர்காவில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த போது, என்னை பார்த்துவிட்டு, பார்த்தும் பார்க்காததும் போல் தன் மகன் சென்றதாகவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் இருக்கும் அவரது மகனை தொடர்பு கொண்டுள்ளதாகவும், விரைவில் அவர் வந்தவுடன் அனுப்பி வைத்துவிடுவோம் என்று கூறியுள்ளார்.
மற்றொரு பெண்ணின் பெயர் Rabiya Baseera எனவும் ஹைதராபாத்தின் Langar Houz பகுதியை சேர்ந்தவர் எனவும் அமெரிக்கவின் கிரீன் கார்டு ஹோல்டர் ஆன இவருக்கும் வீடுகல் உள்ளது. மன உளைச்சல் காரணமாகவே பிச்சை எடுத்துவருவதாக கூறியுள்ளார். இவரை அவரது உறவினர்களிடம் அனுப்பி வைத்துவிட்டதாக Arjun Rao கூறியுள்ளார்.
நித்தியானந்தா- ரஞ்சிதா கானொளி உண்மையானது!
நடிகை ரஞ்சிதாவுடன், நித்தியானந்தா ஒன்றாக இருக்கும் கானொளிக் காட்சி உண்மையானது என்று கானொளியை ஆய்வு செய்த டில்லி தடய அறிவியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
போலி சாமியார் நித்தியானந்தா , நடிகையுடன் நெருக்கமாக இருந்த கானொளி, கடந்த 2010 இல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.
ஆனால் வீடியோவில் இருப்பது தான் இல்லை. அது பொய்யாகச் சித்தரிக்கப்பட்டது என்று நித்தியானந்தா மறுத்து வந்தார்.
அதைத்தொடர்ந்து அந்தக் கானொளி டில்லி, தடய அறிவியல் ஆய்வகத்தில் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பரிசோதனையின் முடிவில் நித்தியானந்தா கானொளி சித்தரிக்கப்பட்டது அல்ல. கானொளியில் பொய்யாக எதுவும் செய்யப்பட வில்லை. நித்தியானந்தா தான் அந்தக் காட்சியில் உள்ளார் என்று டில்லி தடய அறிவியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
கானொளியை வெளியிட்ட லெனின் கருப்பன் கூறியதாவது:- ”நித்தியானந்தா வீடியோ சித்தரிக்கப்பட்டது அல்ல என்பது நிரூபணமானமாகி உள்ளது.
மேலும் நித்தியானந்தாவின் உண்மை முகம் வீடியோ மூலம் அம்பலமாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். டிசெம்பர் மாதம் 5 ஆம் திகதி நித்தியானந்தா வீடியோ வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நித்தியானந்தா ஆச்சிரம நிர்வாகிகள் தம் மீது 19 வழக்குகள் போட்டுள்ளனர் ”என்று லெனின் கருப்பன் கூறியுள்ளார்
சிறுவனின் வாழ்க்கையை சீரழித்த இளம்பெண்... கணவன் வீட்டிற்கு திரும்பிய போது கண்ட அதிர்ச்சி!
நெல்லை ராமையன்பட்டி சிவாஜி நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (33) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவருடைய மனைவி மாரி (18). கண்ணன் கேரளாவில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் ஊர் திரும்பிய போது மனைவியும், 2 அரை வயது குழந்தையும் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் பொலிசில் புகார் கொடுத்தார். இந்நிலையில் அந்த இளம் பெண் மாரி, 17 வயது இளைஞனுடன் ஓடிப்போனது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருக்குமிடத்தை கண்டுபிடித்த பொலிசார் மாரியை கைது செய்து குழந்தையை மீட்டு கண்ணனிடம் கொடுத்தனர்.
அந்த இளைஞனை காப்பகத்தில் ஒப்படைத்தனர். தமிழகத்தில் இதுபோன்ற குடும்பச் சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன.
அரசும், தனியார் பொது நல அமைப்புகளும் இதுபோன்ற குடும்பச் சிக்கல்களை தீர்க்க சேவைப்பணியில் ஈடுபடுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
Friday, 10 November 2017
பள்ளி மாணவியை சில்மிஷம் செய்த தமிழாசிரியர் என்ன ஆனார்!!
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியரால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
சென்காசி இலஞ்சி கிராமத்தை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிபவர் ராஜி ஞானம். இவர் தன்னிடம் டியூஷன் பயில வந்த 12வகுப்பு மாணவியிடம் செல்போனில் ஆபாச படம் காட்டி சில்மிஷம் செய்தாக புகார் எழுந்துள்ளது.
இதை அறிந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் அவரை பள்ளியில் இருந்து பணிநீக்கம் செய்துள்ளனர்.
விடயம் அறிந்த பொலிசார் அவரை கைது செய்ய தேடிய போது அவர் தலைமறைவாகியுள்ளார்.
Thursday, 9 November 2017
ஆசிரியைகள் செய்த மோசமான காரியம்.. உயிரை விட்ட மாணவி.!
கேரளாவில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிக்கு இரண்டு ஆசிரியைகள் தொல்லை கொடுத்து துன்புறுத்தியது தொடர்பான அறிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.கேரளா கொல்லம் நகரை சேர்ந்த க
வுரி நெஹா (15) என்ற பள்ளி மாணவி, தான் படித்துக்கொண்டிருந்த பள்ளியின் 3வது மாடியிலிருந்து கீழே குதித்து கடந்த மாதம் 20ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளியில் ஆசிரியைகளான சிந்து மற்றும் கிரிசண்ட் ஆகியோர் மாணவியை துன்புறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியிருந்தார்கள்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இரண்டு ஆசிரியைகளும் மாணவியை துன்புறுத்தியது தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் போலீசார் சமர்பித்துள்ளனர்; இந்நிலையில், முன்ஜாமின் கேட்டுள்ள இரண்டு ஆசிரியைகளுக்கும் அதனை வழங்ககூடாது எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வரவுள்ளது. கவுரி எந்த மாதிரியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார் என்பதனை போலீசார் கூற மறுத்துவிட்டனர்.
மகாத்மா காந்தி பேத்தியின் கவர்ச்சி படங்களால் அதிரும் சமூக வலைதளம்..! வைரலாகும் புகைப்படம் உள்ளே...
கவர்ச்சி படங்களால் இன்ஸ்டாகிராமை அதிர வைத்த காந்திஜி கொள்ளுபேத்தியின் புகைப்படங்கள். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் 1948 ஆண்டு காந்தியின் மகன் ஹரிலால் காந்தி அமெரிக்காவில் செட்டில் ஆனார். இவருடைய மகன் காந்தி லால் காந்தி இவருடைய மகள் அதாவது காந்திஜியின் கொள்ளு பேத்தி மேதா காந்திக்கு இவருக்கு வயது 28.
அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இவர் தற்போது அங்குள்ள பாஸ்டன் நகரில் டிஸ்கோ ஜாக்கியாக உள்ளார். பிரபல சிட்டி டிவி தயாரிப்பாளராகவும் உள்ளார். அங்கு டேவ் அன்டு ஷோ மற்றும் மேட்டி அன்ட் மார்னிங் ஷோ போன்ற நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளார். மேலும் இவர் காமெடி ஸ்கிரிப்ட் எழுதுவதில் வல்லவர்.
இவரது பொழுதுபோக்கே சமூக வலைதளத்தில் அதிக நேரத்தை செலவிடுவதுதான். பேஸ்புக்கில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
அதே போல தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
இது தற்போது சமூகவளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த இந்தியர்கள் வாயடைத்துள்ளனர்.
Wednesday, 8 November 2017
2 ஆம் வகுப்பு மாணவனை கொலை செய்த 11 ஆம் வகுப்பு மாணவன்: அதிர்ச்சி காரணம்
இரண்டாம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் அதே பள்ளியை சேர்ந்த இன்னொரு மாணவனை சிபிஐ பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்தின் குர்கானின் உள்ள ரயான் சர்வதேச பள்ளிக்கூடத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவன் பிரதுமன் (7) கடந்த செப்டம்பர் மாதம் 8-ஆம் திகதி பள்ளிக்கூட கழிவறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தான்.
இதை பார்த்த பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் இதுகுறித்து பள்ளிக்கூட தோட்டக்காரரிடம் கூறினார்.
பின்னர் பிரதுமனின் சடலம் கைப்பற்றப்பட்டது. சம்பவம் தொடர்பாக பேருந்து நடத்துனர் ஒருவரை பொலிசார் கைது செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கழிவறையில் பிரதுமன் இருப்பதை சொன்ன பதினோராம் வகுப்பு மாணவரை பொலிசார் இவ்வழக்கில் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
பள்ளியில் நடத்தப்படும் பரீட்சைகள் மற்றும் ஆசிரியர், பெற்றோர் சந்திப்பை தள்ளி வைக்கவே பிரதுமனை பதினோராம் வகுப்பு மாணவன் கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட மாணவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பள்ளியில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகள் மூலம் மாணவர் சிக்கியுள்ளார்.
இதனிடையில், தன் மகன் கொலை செய்யவில்லை எனவும், சிபிஐ அவனை கட்டாயப்படுத்தி இதை ஒப்புக்கொள்ள வைத்துள்ளதாகவும் கைதான மாணவரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
Tuesday, 7 November 2017
விடுதியில் 30 மாணவிகளை நிர்வாண படம் எடுத்து மிரட்டி கற்பழித்த செக்யூரிட்டி…!!
பெங்களூரு, சென்னை, டெல்லி போன்ற நகர பகுதிகளில் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த விடுதிகளில் போதுமான பாதுகாப்பு வசதிகள் இருப்பது கிடையாது.
அப்படித்தான் டெல்லியில் நடுத்தர வர்த்தகத்தினர் தங்க கூடிய ஒரு விடுதி உள்ளது. இந்த விடுதியின் உரிமையாளர் தனது உறவினர் ஒருவரை செக்யூரிட்டியாக நியமித்தார். அவருக்கு வயது 35 இருக்கும்.
அவர் இரவு நேரத்தில் தங்கியுள்ள பெண்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தார். மேலும் அவர்கள் பாய்பிரண்டுடன் சுற்றி விட்டு தாமதமாக வந்தாலும் எதுவும் சொல்வது கிடையாது.
இதனால் அவர் எல்லோருக்கும் நெருக்கமானவராக இருந்தார். அப்படித்தான் ஒருநாள் ஒரு மாணவி குளிப்பதை தனது செல்போனில் படம் எடுத்து விட்டார்.
அதனை காட்டி அந்த மாணவியை தனது ஆசைக்கு இணங்குமாறு கேட்டுள்ளார். அந்த மாணவியும் தனது நிர்வாண படம் வெளியில் வந்து விட கூடாது என்பதற்காக செக்யூரிட்டியின் ஆசைக்கு இணைங்கினார்.
அதோடு ஒரே வாரத்தில் அந்த மாணவி விடுதியை காலி செய்து விட்டு சென்று விட்டார்.
இதே டெக்னிக்கை பயன்படுத்தி அந்த செக்யூரிட்டி பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் அந்த விடுதியில் உள்ள பெண்களில் பெரும்பாலோனோர் விடுதியை காலி செய்ய தொடங்கினர்.
இதனால் சந்தேகம் அடைந்த உரிமையாளர் விடுதியை காலி செய்த பெண்களை தொடர்பு கொண்டு காரணம் கேட்டார்.
அப்போது செக்யூரிட்டி சரியில்லை என்று மேலோட்டமாக கூறினர். 4 பேர் மட்டுமே மிரட்டி கற்பழிக்கப்பட்டதை கூறினார்.
இதனை தொடர்ந்து அந்த செக்யூரிட்டியின் செல்போனை சோதனை செய்தபோது அதில் 30க்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாண படங்கள் இருந்தது.
மேலும் அவரிடம் விசாரணை நடத்தியபோது 30க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி கற்பழித்தது தெரியவந்தது.
அதன்பிறகு அவரை வேலையில் இருந்து நீக்கியதோடு, போலீசில் பிடித்து கொடுத்தார் அந்த விடுதி உரிமையாளர்.
Monday, 6 November 2017
தேனிலவுக்காக ஹோட்டல் சென்ற தம்பதிக்கு அதிர்ச்சி! இரகசிய கமராவினால் சர்ச்சை
திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட தம்பதியினர் தேனிலவிற்காக சென்ற ஹோட்டலில் இரகசிய கமரா மூலம் வீடியோ காட்சிகள் பதிவிடப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இந்த தம்பதியினர் முறைப்பாடு செய்துள்ளனர்.
குளியாப்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.
வழங்கப்பட்ட அதி சொகுசு அறையின் கதவில் இரண்டு துளைகள் காணப்பட்டதாகவும் இதில் ஒன்றில் இரகசிய கமரா மூலம், அறையின் உள்ளே நடந்தவை வீடியோ காட்சிகளாக பதிவிடப்பட்டிருக்கலாம் என புதுமணத் தம்பதியினர் பொலிஸாரிடம் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய ஹோட்டல் அறையை பொலிஸார் சென்று சோதனையிட்டுள்ளனர். இதன்போது ஹோட்டல் அறை முழுமையாக தென்படக்கூடிய வகையில் கதவில் இரண்டு துளைகள் இடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அறைக்கு அடுத்த அறையின் கதவிலும் இதேவிதமான துளைகள் காணப்படுவது தெரியவந்துள்ளது.
இதேவேளை, ஹோட்டல் கட்டணத்தை செலுத்தாமல் தவிர்க்க இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமது ஹோட்டலுக்கு பிரதேசத்தில் நற்பெயர் காணப்படுகின்றது எனவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமத ஹோட்டலில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு கிடையாது என தெரிவித்துள்ளது.
கார்ட்டூனிஸ்ட் பாலாவை தரதரவென இழுத்துச் சென்ற தமிழ்நாடு பொலிஸ்! வைரலான கேலி சித்திரம்..
இந்தியாவின் தமிழ்நாட்டின் நெல்லை தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக கார்ட்டூனிஸ்ட் பாலா வரைந்த கேலி சித்திரம் இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நெல்லையைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் கடந்த அக்டோபர் 23ம் திகதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் தீக்குளித்தார்.
இதில் இசக்கி முத்து, அவருடைய மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி சரண்யா, அட்சயா ஆகியோர் உயிர் இழந்தனர்.
இது தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, ‘லைன்ஸ் மீடியா ‘என்னும் இணையதளம் நடத்தி வரும் கார்ட்டூனிஸ்ட் பாலா , முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை காவல் ஆணையர் ஆகியோரை விமர்சித்து கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்திருந்தார்.
அதை லைன்ஸ் மீடியா தளத்திலும், தன் முகநூல் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். அந்தக் கேலிச்சித்திரம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. ஏராளமானோர் இதனை பார்த்ததோடு மட்டுமல்லாமல், பகிர்ந்தும் இருந்தனர்.
இதையடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்ட்டூனிஸ்ட் பாலா மீது நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் சென்னை வந்த நெல்லை காவல்துறையினர் கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்தனர். மாறுவேடத்தில் வந்த 4 காவலர்கள் சென்னை கோவூரில் உள்ள கார்ட்டூனிஸ்ட் பாலாவின் வீட்டில் இருந்து அவரை கைது செய்து தரதரவென இழுத்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் எங்கு கொண்டுச் செல்லப்படுகிறார் என்ற விவரம் தெரியவில்லை.
கார்டூனிஸ்ட் பாலா கைதுக்கு எதிராக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், புத்தியீவிகள், ஊடக நிறுவனங்கள் எனப் பலரும் கூட்டாக குரல் கொடுத்து வருகின்றனர்.
நெல்லை தீக்குளிப்பு சம்பவம் மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் உறுதியுடன் சிந்திக்க வைக்கும் தனது கார்டூன் மூலம் பதிலடி கொடுத்து வருபவர் பாலா என்பது குறிப்பிடத்தக்கது.
அழகிய மனைவியை கொலை செய்த கால்பந்து வீரர் - வெளியான அதிர்ச்சி காரணம்
கனடாவின் கால்கரி ஸ்டாம்பெடர்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள் கால்பந்து வீரர் அந்தோனி மெக்லாநகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் கால்கரி ஸ்டாம்பெடர்ஸ் அணிக்காக விளையாடிய Anthony D. McClanahan-ன் மனைவி Keri கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவின் உட்டா பகுதியில் உள்ள Park City பகுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
அவரின் கழுத்துப் பகுதியில் கத்தியால் வெட்டப்பட்ட காயம் இருந்தது. இவரை Anthony D. McClanahan தான் கொலை செய்துவிட்டார் என்று சந்தேகிக்கப்பட்டது.
இதனால் இவர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் மகனை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் மகன் அங்குள்ள Arizona பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் அவரை Anthony D. McClanahan கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் திகதி கடத்தி அதன் பின் அக்டோபர் 12-ஆம் திகதி தான் விடுவித்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)























