Home
Lifestyle
Showing posts with label Lifestyle. Show all posts
Showing posts with label Lifestyle. Show all posts
Friday, 1 December 2017
உங்களுக்கு இதய நோய் உள்ளதா? வீட்டிலேயே தெரிந்துக் கொள்ளுங்கள்
இதய நோய் உள்ளதா என்பதை மருத்திவமனைக்கு சென்று தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை தாண்டி நமது கால் விரல்களை குனிந்து தொடுவதன் மூலமே தெரிந்து கொள்ள முடியும்.
செய்முறை
நின்றபடி அல்லது தரையில் அமர்ந்தபடி இதை நீங்கள் செய்யலாம். நிற்கிறீர்கள் என்றல் உங்கள் கால்களை சேர்த்து நிமிர்ந்து நில்லுங்கள். உட்காந்து இருக்கிறீர்கள் என்றாக் சம நிலையான நிலப்பரப்பில் கால்கள் இரண்டையும் நீட்டி அமருங்கள்.
இப்போது உங்கள்து முட்டியை மடக்காமல் கைகளை நீட்டி கால் விரலை தொட முயற்சியுங்கள்...
உங்களால் தொட முடிந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அர்த்தமாம்.
தொட முடியவில்லையெனில் உங்கள் கை விரலுக்கும் கால் விரலுக்கும் இருக்கும் இடைவெளியே உங்களுக்கும் இதய ஆரோக்கியத்துக்கும் இடையே உள்ள தூரம் ஆகும்.
தொப்பை உள்ளவர்கள் அதாவது, அதிக கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களால் இதை எளிதாக செய்ய முடியாது, தேவையற்ற கொழிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தால் தான் அதிகமாக இதய நோய் ஏற்படுகிறது என்பதை மறவாதீர்கள்.
ஒரு கைப்பிடி வேர்க்கடலை... ரகசியம் தெரிந்தால் சாப்பிடாமல் இருக்க மாட்டீங்க
பீன்ஸ், பட்டாணி போன்ற தாவர வகையைச் சேர்ந்ததுதான் நிலக்கடலையும். இது மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.
பயன்கள்:
- இதனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் ஓடிவிடும். நெஞ்சு சளியினை நீக்கும் வல்லமையும் கொண்டது வேர்க்கடலை.
- இதில் உள்ள எண்ணெய்ச் சத்து, எளிதில் ஜீரணமாகக்கூடியது.
- சருமத்துக்குப் பளபளப்பூட்டக்கூடியதாகவும் விளங்குகிறது.
- வேர்க்கடலையை, வெல்லத்துடனும், ஆட்டுப்பாலுடனும் சேர்த்துச் சாப்பிடலாம். இது வளரும் குழந்தைகளுக்கும், கருத்தரித்துள்ள பெண்களுக்கும், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கும் சிறந்த மருந்து.
- பல தொற்றுநோய்கள், ஹெபடைடிஸ், காசநோய் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளத் தேவையான எதிர்ப்பு சக்தியை வேர்க்கடலை அளிக்கிறது.
- ஹீமோஃபீலியா என்ற நோயில் அவதிப்படுபவர்களுக்கு அடிபட்டால் அவ்வளவு எளிதில் ரத்தம் உறையாது.
- அதனைக் குணப்படுத்தவும், பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கில் இருந்து குணமடையவும், நீரிழிவு நோயாளிகளுக்கும் வேர்க்கடலை சிறந்த உணவாகும்.
எப்படி சாப்பிட்டால் என்ன பயன் அளிக்கும்:
ஆட்டுப் பாலில் எலுமிச்சைச்சாறு பிழிந்து, அதனுடன் ஒரு பிடி வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
புதிதாகப் பறித்த வேர்க்கடலையுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் வாயில் உள்ள ஈறுகள் உறுதியடையும்.
வேர்க்கடலையைத் தண்ணீரில் ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிகட்டிவிட்டுச் சாப்பிடுவதே சிறந்ததாகும்.
வேர்க்கடலையைக் கஞ்சியாக்கி, வாழைப்பழம், தேன் சேர்த்துச் சாப்பிடுவதால், குழந்தைகள் பலம் பெறுவார்கள்.
வேர்க்கடலையை வேகவைத்துச் சாப்பிடலாமா?
வேகவைப்பதாலும், வறுப்பதாலும் வேர்க்கடலை அதன் சத்துக்களை இழந்து விடுகிறது. பச்சையாக ஊறவைத்து சாப்பிடுவதே நல்லது.
வேர்க்கடலை சாப்பிடுவதால் உடல் எடை கூடுமா?
ஒரு பிடி வேர்க்கடலை மட்டும் சாப்பிட்டால் எடை கூடாது. உடல் எடை கூட விரும்புவோர், ஆரோக்கியமாக எடை அதிகரிக்க நிறைய வேர்க்கடலை சாப்பிடலாம்.
வேர்க்கடலை பால்
தேவையானவை
- வேர்க்கடலை 2 கைப்பிடி அளவு (8 மணி நேரம் ஊறவைக்கவும்)
- ஆப்பிள் 1
- சப்போட்டா
- நேந்திரம்
- செவ்வாழை
- பேரீச்சை
- துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
- தேன் 2 டீ ஸ்பூன் (சுவைக்கு ஏற்ப)
ஊறவைத்த வேர்க்கடலையை நன்றாக மிக்ஸியில் அரைத்து, மற்ற பொருட்களையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து பருகலாம்.
இந்த ஒரு மீனை சாப்பிட்டால் போதும்... உடலில் நோய்கள் 10 அடி தள்ளியே நிற்குமாம்
நாம் தினசரி சாப்பிடும் உணவான சைவ உணவுகளிலேயே பல சத்துக்கள் அடங்கியுள்ளது என்றாலும் கூட, நீங்கள் வாரத்தில் ஒரு முறையாவது அசைவ உணவை சாப்பிடலாம். அசைவ உணவு என்று வரும் போது நாம் சாப்பிடும் கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சியை விட மீன் உணவை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
மீன் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு மிகச்சுவையான உணவாகும். அதிலும் பிரஷ் ஆன மீனில் உள்ள சுவை என்பது வேறு எதிலும் கிடைக்காது. மீன் என்று வரும் பொழுது உங்களுக்கு இன்னொரு சந்தேகமும் வரும்... எந்த மீனில் அதிக சத்துக்கள் உள்ளது... எந்த மீன் உடலுக்கு மிகவும் நல்லது என்ற சந்தேகம் தான் அது...!
மீன்களில் மிகவும் குறைவான விலையில் கிடைப்பது நெத்திலி மீனும், மத்தி மீனும் தான்.. இதன் விலை குறைவு என்பதற்காக இதன் சுவையில் குறைவு இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்.. இது சுவையில் அலாதியானது ஆகும்...! தற்போது நெத்திலி மீன், மத்தி மீனின் நன்மைகளைக் குறித்துக் காணலாம்.
பொதுவாக மீன்களின் நன்மைகள்
மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத்தவிர்க்க வழிசெய்கிறது.
மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.
மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் இரத்தக்குழாயின் நீட்சி மீட்சித்தன்மை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகை செய்கிறது.
மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.
மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.
பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது.
ஆஸ்துமா என்பது குழந்தைகளை தாக்கும் பிரச்சனைகளில் ஒன்று. மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட்கொள்ளும் வயோதிகர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கிறது.
தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக்குறைக்க வழி செய்கிறது.
நெத்திலி மீனின் நன்மைகள்
- நெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
- செல்லுலார் மற்றும் இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கும், இந்த திசுக்களில் உள்ள கோளாறுகளை சரி செய்யவும் தேவையான அளவு புரோட்டீன் நெத்திலி மீனில் உள்ளது.
- நெத்திலி மீனில் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஈ, செலினியம், போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன. எனவே அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால், சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, சருமம் பொலிவோடு இருக்கும்.
- நெத்திலி மீனில் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் சத்து. அதுமட்டுமின்றி இதில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.
- நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், கண் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
- நெத்திலி மீனில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம் என்பதால், இது உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும்.
மத்தி மீனின் நன்மைகள்
- மத்தி மீனில் இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது. 100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும் உள்ளது. மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது
- தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.
- மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது. மத்தி மீனில் வைட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
- மத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தான் கேரள மக்கள் அதிகமாக மத்தி மீனை சாப்பிடுகிறார்கள் போல தெரிகிறது....!
தரமான மீனை தேர்ந்தெடுப்பது எப்படி?
- கண்கள் பளபளப்பாகவும், குழி விழாமலும் குவிந்து காணப்படும்.
- செவுள்கள் இரத்தச்சிவப்பாக காணப்படும்.
- மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருக்காது.
- மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழாமல் விரைப்புத்தன்மையுடன் காணப்படும்.
- தசைப்பகுதி உறுதியாக இருக்கும்.
- கடல் பாசி மனம் இருக்கும்.
தரமற்ற மீனை கண்டுபிடிப்பது எப்படி?
- மீன்கள் வெளிறிய நிறத்தில் இருக்கும்.
- விரும்பத்தகாத (அழுகிய) முட்டை மணம் அல்லது அம்மோனியா மணம் அல்லது கழிவுப்பொருட்களின் வாடை வீசும்.
- மீனின் கண்கள் குழி விழுந்து சுருங்கி காணப்படும்.
- செவுள்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.
- மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கமோ, வெடிப்புகளோ இருக்கும்.
- மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழுந்து காணப்படும்.
- தசைப்பகுதிகள் மிருதுவாகவும், தளர்ந்தும் இருக்கும்.
எப்படி சாப்பிடலாம்?
கேரளாவில் இதன் பயன்பாடு அதிகம். அங்கே இதை சாளை என்பார்கள். தமிழகத்து மத்திமீனைவிட கேரளாவின் மத்திமீன் ருசியில், சதையில், மணத்தில், மருத்துவக்குணத்தில் தலைசிறந்தது. ஆனாலும், எக்காலத்திலும் ஏழைகளின் உணவு இதுவே. காரணம் விலை குறைவாக கிடைக்கும் என்பதே. இந்த மீனை மாங்காய்போட்டு குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவை மிக அருமையாக இருக்கும். அந்தக்குழம்பை மறுநாள் சுண்டவைத்து சாப்பிட்டால் சொர்க்த்தில் இருப்பது போன்ற அனுபவம் கிடைக்கும்.
Tuesday, 28 November 2017
கடுமையான வாய் துர்நாற்றமா? இதை மட்டும் பண்ணுங்க..?
வாய் துர்நாற்றத்திற்கு பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் கோளாறுகளே முதன்மைக் காரணம். இதுதவிர நுரையீரல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளும், செரிமானக் கோளாறுகளும் காரணமாக அமைகின்றது.
எனவே இயற்கை முறையில் நமது வாயின் கடுமையான துர்நாற்றத்தை போக்குவது அருமை.
தேவையான பொருட்கள்
- புதினா இலை – 5
- தேயிலை – 1 டீஸ்பூன்
- தேன் அல்லது பனங்கற்கண்டு – 1 டீஸ்பூன்
- பால் – 1/4 கப்
செய்முறை
ஒரு டம்ளர் நீரில் 5 புதினா இலை மற்றும் 1 டீஸ்பூன் தேயிலை ஆகிய இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின் இது பாதியாகச் சுண்டியதும் அதை வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு தேவைப்பட்டால் அதில் சிறிதளவு பால் கலந்து குடிக்கலாம்.
ஆனால், இந்த டீயில் பால் சேர்க்காமல் குடிப்பது தான் மிகவும் நல்லது.
மேலும், இந்த புதினா டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகம் நிறைந்துள்ளதால், நமது உடம்பின் உட்புற புண்கள் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
Friday, 24 November 2017
ஒரு நிமிடத்தில் உங்கள் கண் கருவளையங்களை காணாமலாகிடும்.... கண்டிப்பா டிரைப்பண்ணுங்க
தேவையானவை:
- Colgate பேஸ்ட்
- Aloe Vera ஜெல்
- விட்டமின் E மாத்திரை
- ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர்
முதலில் ரோஸ்வாட்டரை எடுத்து ஒரு பஞ்சினைக்கொண்டு உங்கள் முகத்தை துடைத்துவிடவும். முக்கியமாக கண்களை சுற்றி 2 நிமிடம் மசாஜ் செய்து முகத்தை கழுவவேண்டும்.
கலவை
Aloe Vera ஜெல் அறை டிஸ்பூன், விட்டமின் E மாத்திரை ஒன்று, ரோஸ் வாட்டர் அறை டிஸ்பூன் ஆகியவை ஒரு கிண்ணத்தில் நன்கு கலந்துகொள்ளவேண்டும்.
Colgate பேஸ்ட்
பஞ்சில் சிறிதளவு ரோஸ் வாட்டரை எடுத்து பிறகு அதனுடன் பேஸ்டை கலந்து கருவளையம் உள்ள இடங்களிலும் கண்ணை சுற்றியும் ஒரு நிமிடத்திற்கு குறைவாக மசாஜ் செய்துக்கொள்ளுங்கள். பிறகு முகத்தை கழுவுக்கொள்ளவும்.
குறிப்பு
அதிக நேரம் பயன்படுத்தினால் கண்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும்.
பிறகு கலந்துவைத்த அந்த கலவையை ஒரு விரலால் கண்களை சுற்றி 2 நிமிடம் மசாஜ் செய்த பிறகு உடனேவும் கழுவலாம் அல்லது இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையிலும் கழுவலாம்.
இப்படி தொடந்து 5 நாட்கள் செய்து வர உங்கள் கருவளையங்கள் காணாமல் போகும்.
இது தெரிஞ்சா தேங்காய் ஓட்டை தூக்கிய வீச மாட்டிங்க..?
உங்களது சருமத்தை அழகுப்படுத்துவதற்காக நீங்கள் எத்தனையோ வழிமுறைகளை கையாண்டு இருப்பீர்கள். ஆனால் அவை உங்களுக்கு அதிகமாக பலன் கொடுக்கவில்லை என்பது போல நீங்கள் உணரலாம்.
இதற்கு காரணம் நீங்கள் அந்த பொருளை முறையாக பயன்படுத்தவில்லை என்பது தான்.. எந்த ஒரு பொருளையும் நீங்கள் முறையாக பயன்படுத்தினால், மிகச்சிறந்த பலனை பெருவது என்பது உறுதி...
கரித்தூள்
கரித்தூள் பழங்காலமாகவே இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏன் நீங்கள் கூட கரித்தூளைக் கொண்டு பல் துலக்குவது பற்றி எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
உண்மையில் இந்த கரித்தூள் உங்களது பற்களை வெண்மையாக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.
கரித்தூளை கொண்டு பற்களை மட்டுமல்ல, உங்களது முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், வெள்ளை பருக்கள் போன்றவற்றை நீங்கி முகத்தை மென்மையாக்கவும், சருமத்தை மிளிர செய்யவும் இது உதவுகிறது. இதனை ஒரு முறை டிரை செய்து பார்த்தால் நீங்கள் இது உங்களது முகத்தில் செய்யும் மாயத்தை கண்டு மீண்டும் மீண்டும் டிரை செய்ய ஆசை கொள்வீர்கள்...
தேவையான பொருட்கள்
- 2 டேபிள் ஸ்பூன் நான்- டாக்சிக் ஒயிட் க்ளூ ( non-toxic white glue)
- 2 கேப்சூல் ஆக்டிவேட்டேடு கரித்தூள் ( தேங்காய் ஒட்டில் இருந்து எடுக்கப்பட்டது)
- பழைய பிரஸ் டோனர் க்ளேன்சர்
தயார் செய்யும் முறை
கரித்தூளை நீங்கள் முக்கியமாக தேங்காய் ஓட்டை நன்றாக எரித்து அதன் கரியை எடுத்துக் கொள்ளலாம்.
அல்லது ஏதேனும் ஒரு மூலிகை சார்ந்த மரத்துண்டுகளை எடுத்து எரித்து அதன் கரித்துண்டுகளை எடுத்துக் கொள்ள் வேண்டும்.
விக்ஸிற்கும், தொப்பைக்கும் இப்படியொரு சம்பந்தமா?... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக நாம் அனைவரும் ஜலதோஷம், மூக்கடைப்பு, தொண்டை வலி இது போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துப் பொருள் தான் விக்ஸ்.
இந்த விக்ஸானது, உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மட்டுமின்றி, நம்முடைய தொப்பையை குறைப்பதிலும் கூட முக்கிய பங்கு வகிக்கிறது. விக்ஸ் மருந்தானது, பொதுவாக கொழுப்புகளை கரைக்கும் தன்மைக் கொண்டது.
எனவே நாம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விக்ஸை தடவி மசாஜ் செய்து வந்தால், அந்த இடத்தில் உள்ள கொழுப்புகளை மிகவும் வேகமாக கரைக்கிறது.
விக்ஸ் மருந்தைக் கொண்டு நாம் தினமும் மசாஜ் செய்து வருவதன் மூலம் நமது உடம்பில் உள்ள கொழுப்புச் செல்கள் அழிக்கப்பட்டு, சுருங்கும் சருமத்தில் உள்ள தழும்புகளை நீக்கி, நமது சருமத்தை அழகாக்குகிறது.
தொப்பையை கரைக்கும் விக்ஸ் க்ரீமை தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
- விக்ஸ்
- கற்பூரம்
- பேக்கிங் சோடா
- ஆல்கஹால்
செய்முறை
முதலில் கற்பூரத்தை நன்றாக பொடி செய்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் பேக்கிங் சோடா, விக்ஸ், ஆல்கஹால் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து க்ரீம் போல கலந்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை
நாம் தயார் செய்த விக்ஸ் க்ரீமை, உடற்பயிற்சி செய்வதற்கு முன் வயிறு போன்ற கொழுப்புகள் அதிகமாக உள்ள இடங்களில், தடவி வட்ட சுழற்சி முறையில், மசாஜ் செய்து, பின் பிளாஸ்டிக் கவரின் மூலம் க்ரீம் தடவிய பகுதியை, கட்டிக் கொண்டு 30 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
பின் இரவு நேரங்களில் வயிற்று பகுதியில் விக்ஸ் க்ரீமை தடவி, பிளாஸ்டிக் கவரை சுற்றி, இரவு முழுவதும் ஊறவைக்க வைத்து, காலையில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
குறிப்பு
- நாம் தினமும் விக்ஸ் க்ரீமை பயன்படுத்தும் போது, சமச்சீரான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
- பின் நாம் அன்றாடம் குடிக்கும் தண்ணீரின் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக குடிப்பது மிகவும் அவசியமாகும்.
Wednesday, 22 November 2017
குழந்தையின்மைக்கும் - பாவாடை தாவணி அணிவதற்கும் இப்படி ஒரு தொடர்பா?
பெண் பிள்ளைகள் எந்த ஆடை உடுத்தினாலும் அதில் உள்ள அழகே தனி. என்னதான் மாடர்ன் உடைகள் அணிந்தாலும் நம் கண் முன்னே வந்து நிற்பது லட்சுமி கடாச்சமாக தோற்றமளித்த அந்த பாவடை தாவணி அணிந்த முகம் தான்.
அதேபோல் இன்றைய மாடர்ன் பெண்களும் ஏதாவது விழா என்றால் பாவடை தாவணி அணியதான் செய்கிறார்கள்.
நம் முன்னேர்கள் எதற்காக பருவமடைந்த பெண்கள் பாவாடை தாவணி அணிய செய்தார்கள் தெரியுமா?
பருவமடைந்த பெண்கள் பருவமடைந்ததில் இருந்து, பெண்களுக்கு கர்ப்பை உள்ள இடத்திலும் தொப்பிளை சுற்றிலும் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்க்காகத் தான் பாவடை தாவணி மற்றும் சேலை அணியும் பழக்கத்தை நம் முன்னேர்கள் ஏற்படுத்தினர்.
எதற்காக இந்த காற்றோட்டம் தேவைப்படுகிறது?
பெண்களின் கர்ப்பையில் அதிக உஷ்ணம் ஏற்படாமல் தடுத்து கர்ப்பையை காக்கும் என்பதற்காகத்தான் இந்த பழக்கம் இருந்தது.
ஆனால் காலப்போக்கில் மாடர்ன் ஆடைகள் வந்ததால் காற்றோட்டம் இல்லாமல் கர்ப்பை உஷ்ணம் அடைந்து அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி கர்ப்பையில் நீர்க்கட்டி உருவாகிறது.
இதனை ஆங்கிலத்தில் Polycystic Ovarian Disease (PCOD) என அழைக்கப்படும். இந்த நீர்க்கட்டிகள் உடல் உஷ்ணம் அடைவதால் ஏற்படுவதே. ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் இந்த பிரச்சனையால் பிற்காலத்தில் குழந்தையின்மையை தருகிறது என்பது நமக்கு தெரிந்த ஒன்றே.
இதனை மனதில் வைத்தாவது அடிக்கடி பழமை மாறாமல் பாவடை தாவணி சேலைகள் அணிந்து பழகுவது நல்லது.
Friday, 10 November 2017
தூங்கி எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பொதுவாக காலையில் தினமும் எழுந்தவுடன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழக்கத்தை செய்து வருவார்கள்.
ஒருசிலர் காலையில் படுக்கையில் இருக்கும் போதே பெட்காபி குடிப்பார்கள். இன்னும் சிலர் தண்ணீரை குடிப்பார்கள்.
இந்த இரண்டு பழக்கங்களிலும், நாம் தினமும் காலையில் எழுந்து 60 நொடிகளில் தண்ணீர் குடிப்பது தான் நம் உடம்பிற்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது.
எனவே காலையில் எழுந்தவுடன் 60 நிமிடங்களில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
- காலையில் எழுந்ததும் 300 மி.லி அளவு நீர் குடித்தால், ஒன்றரை மணி நேரத்தில் நமது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தை 24% வரை அதிகம் அதிகரிக்கச் செய்கிறது.
- தண்ணீர் குடிப்பதால், நமது உடம்பின் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் உடலில் தேவையின்றி தேங்கியிருக்கும் கழுவுகளை போக்கி, நமது உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.
- தூங்கி எழுந்ததும் 60 நொடிகளில் நீர் குடித்து வருவதன் மூலம் பசியின் அளவைக் குறைத்து, அதிக அளவு உடல் பருமன் ஏற்படுவதைக் குறைக்கிறது.
- காலையில் நீர் அதிகமாக குடிப்பதால், நமது உடலில் நீர்ச்சத்துக்கள் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்திக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல், நிணநீர் மண்டலத்தை வலுவடையச் செய்கிறது.
- தினமும் நாம் காலையில் சீரான அளவில் தண்ணீரைக் குடித்து வந்தால், நமது உடலின் சருமத்தில் அதிக சுருக்கம் மற்றும் வறட்சியை ஏற்படுத்தாமல் மிருதுவான சருமத்தை தருகிறது.
- தினமும் நமது உடம்பிற்கு தேவையான அளவு நீர் குடிப்பதால், குடல் இயக்க செயல்பாட்டை சீராக்கி. மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.
சளித் தொல்லையா வீட்டிலேயே இதை செய்யுங்கள்
மழைக்காலம் வந்துவிட்டாலே பருவ மாற்றத்தின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இருமல் சளியின் என பல தொல்லைகள் உடலுக்கு வரும்.
மருத்துவ ஆலோசனையைப் பெறாமலே விளம்பரங்களில் வரும் காஃப் சிறப்களையும் குடிக்கிறோம்.
ஆனால் இதனை தவிர்த்து வீட்டிலேயே ஒரு கசாயம் வைத்து குடித்தால் சளி இருமல் சரியாகும்.
கசாயம் செய்ய தேவையானவை:
துளசி இலை (அலசி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்)
மிளகு 10 (பொடித்து வைத்துகொள்ளுங்கள்)
சித்தரத்தை (சிறிதளவு)
இவை மூன்றையும் கொதிக்கவைத்து இறக்கிய பின் கற்கண்டு சேர்த்து கலக்கவும். பெரியவர்கள் சுடாகவும், குழந்தைகள் இதச்சுட்டிலும் பருகி வந்தால் சளி இருமல் தொல்லை சீக்கிரமாக வெளிவரலாம்.
திப்பிலியுடன் , குப்பைமேனி செடியை பொடிசெய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல் சரியாகும்.
ஈர பசையுடன் உள்ள வேப்பமர பட்டையை இடித்து அதில் கால் பங்கு சீரக பொடியுடன் பசும்பாலில் கலந்து சாப்பிட காய்ச்சல் குணமாகும்.
Thursday, 9 November 2017
மல்லிகையின் மகத்துவம் தெரியுமா?... ஆண்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க?
கோடை காலத்தில் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கக்கூடியது மல்லிகைப்பூ. இது தலையில் சூட மட்டுமின்றி, இதன் இலை, மலர் என அனைத்தும் மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இது அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மல்லிகை மலர்கள் பலவகை இருந்தாலும் அனைத்து மலர்களிலும் ஏரத்தாள ஒரே குணமே காணப்படுகிறது. இப்போது மல்லிகையின் மகத்தான பயன்களை பற்றி காண்போம்.
நோய் எதிர்ப்பு சக்தி
மல்லிகையின் மருத்துவ குணங்கள் பல ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதில் லினோல், பென்சோயிக் அசிடேட், இண்டோல், ஜஸ்மோன், சாலிசிலிக் அமிலம், ஆல்கலாய்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன. இந்த இயற்கை மூலிகை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நம்மை நோய்கள் அண்டாமல் பாதுகாக்கிறது.
மன அழுத்தம்
மல்லிகை பூ டீ மிகவும் பிரபலமானது. இதை குடிப்பதன் மூலம் மன அழுத்தம் குறைகிறது. இது மனதை தெளிவுபடுத்தி மனதை அமைதியாக்குகிறது.
பாலின உணர்வு
மல்லிகைப்பூவை பெண்கள் தலையில் வைத்துக்கொண்டாலோ அல்லது தலையணையின் அடியில் வைத்துக்கொண்டாலோ இது தம்பதிகளின் மன இறுக்கத்தை போக்கி பாலின உணர்வுகளை தூண்டக்கூடியாதக உள்ளது. மேலும் மல்லிகையின் இலை ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது.
வாய் பிரச்சினைகளை போக்கும்
மல்லிகைப்பூவின் இலைகள் வாயில் உண்டாகும் பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. இது பல்வலி, ஈறு பிரச்சனைகள் போன்றவற்றை நீக்குகிறது. அது மட்டுமின்றி, தலைவலி, உடலில் உண்டாகும் அலர்ஜியை போக்குகிறது.
புண்களை ஆற்ற உதவுகிறது
மல்லிகைப்பூ கீறல்கள் மற்றும் புண்களை ஆற்ற உதவுகிறது. இதனை அரோமா தெரபி மூலம் எடுத்துக்கொள்ளும் போது இதன் வாசனை மனதை அமைதிப்படுத்துகிறது. மனதில் நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கிறது.
மசாஜ் ஆயில்
மல்லிகைப்பூ எண்ணெய்யால் மசாஜ் செய்யும் போது உடலில் உள்ள வலிகளை நீக்குகிறது. இது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு அளிக்கிறது.
இருதய பிரச்சினை
மல்லிகைப்பூ டீயை தினமும் பருகி வந்தால், கார்டிவாஸ்குலர் இருதய நோய் பாதிப்பில் இருந்து தப்ப முடியும்.
குறிப்பு
கர்ப்பமாக இருக்கும் பெண்களும், பால் கொடுக்கும் அன்னையர்களும் மல்லிகையை மருந்தாக எடுத்துகொள்ள கூடாது.
ஒற்றைத்தலைவலி இருப்பவர்களுக்கும் இது உகந்ததல்ல. இதன் அதிக வாசனை வாந்தியை உண்டு செய்யலாம்.
Tuesday, 7 November 2017
கர்ப்பகாலத்தில் பல ஆண்களுடன் டேட்டிங் சென்றேன்: தாயின் வாக்குமூலம்
நியூயோர்க்கை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனக்கு பல்வேறு நபர்களுடன் டேட்டிங் செல்வது பிடிக்கும் என்பதால் தனது கர்ப்பகாலத்தில் கூட பலருடன் டேட்டிங் சென்றதாக கூறியுள்ளார்.
Alyssa Shelasky(40) என்ற பெண்மணிக்கு தற்போது இரண்டு வயதில் குழந்தை ஒன்று உள்ளது.
தனது வாழ்க்கை குறித்து இப்பெண்மணி கூறியதாவது, பல்வேறு ஆண்களுடன் டேட்டிங் செல்லும்போது அழுத்தம் கொண்டதாக நான் உணரவில்லை. எனக்கு மகள் இருந்தாலும், தற்போது வரை டேட்டிங் செல்வதற்காக சிறந்த ஆண்மகன்களை தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்.
ஆனால் நான் ஒருபோதும் திருமணம் செய்துகொள்ளமாட்டேன், அதில் எனக்கு எவ்வித உடன்பாடும் இல்லை. ஒரு நல்ல ஆண்மகனுடன் டேட்டிங் செல்ல வேண்டும் அவருடன் எனது வாழ்க்கை பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் இது எனது ஆசை.
மேலும், எனது உடல்அமைப்பு கவர்ச்சியாக இருப்பதாகவும் உணர்கிறேன் என கூறியுள்ளார்.
Sunday, 8 October 2017
கண் பார்வை இழப்பை தடுக்க: காலையில் 5 நிமிடம் ஒதுக்குங்கள்
கண் பார்வை தொடர்பான பிரச்சனைகளை தடுத்து கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் எளிமையான சில கண் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
பாமிங் (Palming)
கம்ப்யூட்டர் டேபிளின் மீது முழங்கைகளை ஊன்றி, உள்ளங்கைகளை கண்களின் மேல் குவித்தபடி வைத்துக் கொள்ள வேண்டும். இதேபோல் உள்ளங்கைகளை கண்களுக்கு மேல் பொத்திப் பொத்தி எடுத்தால், கண்களின் களைப்பு நீங்கும்.
சன்னிங் (Sunning)
இப்பயிற்சியை இளம் காலை அல்லது இளம் மாலை வெயிலில் மட்டுமே செய்ய வேண்டும். இப்பயிற்சியை செய்யும் போது, கைகளால் கண்களை லேசாக மூடியபடி இளம் வெயிலைப் பார்க்க வேண்டும். ஆனால் இதை நீண்ட நேரம் செய்யக் கூடாது.
ஷிஃப்டிங் (Shifting)
இப்பயிற்சியை கண்களைத் திறந்தபடி அல்லது மூடிக்கொண்டு செய்யலாம். அதாவது, முகம் மற்றும் கழுத்தை திருப்பாமல், கருவிழிப் பகுதியை மட்டும் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் நகர்த்திப் பார்க்க வேண்டும்.
அதேபோல் கண்களை மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும், வட்டவடிவில் அனைத்து திசைகளிலும் சுழற்றி இடவலமாகவும், வலஇடமாகவும் கண்களை சுழற்றி பார்க்க வேண்டும்.
இதனால் கண்களுக்குள் உள்ள நுண்ணிய தசைகள் உறுதியாகி, கண்களில் ரத்த ஓட்டத்தை அதிகமாகும்.
கண்பார்வை குவிக்கும் பயிற்சி
இப்பயிற்சியானது அருகில் உள்ள ஒரு பொருளை சில நொடிகள் உற்றுப் பார்க்க வேண்டும். பிறகு தொலைவில் உள்ள ஒரு பொருளைப் பார்த்து, கழுத்துப் பகுதியானது பார்வைக்குச் சமமான நிலையில் இருக்க வேண்டும். முதலில் அருகிலுள்ள பொருளைத் தான் பார்க்க வேண்டும்.
கண்களுக்கான மசாஜ்
கண்களை மூடிக் கொண்டு மென்மையாக இரண்டு விரல்களால் வட்ட வடிவில் மசாஜ் செய்யலாம். அதேபோல கீழ் இமையின் அருகில் விரலை வைத்து மேல் நோக்கி மகாஜ் செய்து விடலாம்.
ஓர் இடத்தில் கற்பனையாக எட்டு என்கிற எண்ணை பெரிதாக எண் வடிவில் எழுதியிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு. அந்த வடிவத்தின் மீது பார்வையைப் பதித்து திரும்பத் திரும்ப எட்டு வரைவது போன்று செய்ய வேண்டும்.
ஈறு, நகம், கூந்தல் ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கும் ஒரு பொருளுக்கும் தொடர்புள்ளது!! அது எது தெரியுமா?
உங்களுக்கு தெரியுமா நமது ஈறுகள், நகங்கள், தோல் மற்றும் முடி இவை அனைத்தும் ஒரே அமைப்பைக் கொண்டுள்ளது என்று? இந்த நான்கும் ஒன்றாக பாதிக்கப்படுவதை கவனித்திருக்கிறீர்களா?
ஈறுகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கின்றது எனில் குடலின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும் என்ற தொடர்பை அறிவீர்களா? மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில் இந்த கட்டுரையில் உள்ளது.
நகம், கூந்தல், ஈறுகள் போன்ற அமைப்பிற்கு கெரட்டின் ஒரு பொதுவான காரணியாக உள்ளது. கெரட்டின் என்பது ஒரு புரதம் ஆகும். எனவே தான் நீங்கள் எடுக்கும் உணவில் புரதக் குறைப்பாடு இருக்குமானால் இவை அனைத்தும் பாதிக்கப்படும்.
ஈறுகளில் ரத்தக்கசிவு, வலி, முடி நொறுங்குதல், முகப்பரு மற்றும் நகங்களில் வித்யாசம் இவை அனைத்தையும் குறிப்பிட்டு கவனியுங்கள்.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அஜீரண கோளாறுகள் போன்ற செரிமானத்தை பாதிக்கும் கோளாறுகள் இருந்தாலும் மேற்கூறிய பிரச்சனைகள் அனைத்தும் ஏற்படும்.
செரிமான மண்டலத்தின் ஏதேனும் ஒரு பகுதியில் சுகாதார பற்றாக்குறை ஏற்பட்டிருந்தால் குடல் பகுதி பாதிக்கப்படும். குடல் பகுதியை தொடர்ந்து ஈறுகளில் பிரச்சனைகள் ஏற்படும். சில சமயங்களில் இவை வாயில் துர்நாற்றம் மற்றும் சீரற்ற சுவாசத்தையும் ஏற்படுத்தும்.
ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தால் குடல் ப்ரோபயாடிக் பாக்டீரியாவால் பாதிக்கப்படுகின்றது. இது ஈறுகளையும் தோல்களையும் பாதிக்கும்.
வைட்டமின் சி மற்றுமொரு காரணியாகும். ஆரோக்கியமான உணவு பழக்கத்தில் போதுமான அளவு விட்டமின் சி இருப்பதால் ஈறுகள், தோல், நகம் மற்றும் முடி இவற்றில் ஆரோக்கியமான வித்தியாசத்தை காண முடியும். இது ஒரு ஆன்டி-ஆக்ஸிடென்ட் ஆகும். இதுவே இவை அனைத்தின் ஆரோக்கியத்தை அதிக படுத்தவும், சீராக வைக்கவும் உதவுகிறது.
வைட்டமின் ஈ இதுவும் ஒரு ஆன்டி-ஆக்ஸிடென்ட் ஆகும். பாதாம், சிட்ரஸ் நிறைந்த பழங்கள், வால்நட்ஸ், ஆளி விதைகள் மற்றும் பச்சை இலை காய்கறிகள் இவை அனைத்திலும் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. பல்வேறு காரணங்களால் ஆரோக்கியமான உணவு பழக்கம் கூடுதலான வேலையை செய்கிறது நமது உடலில்.
தொழில் நுட்ப துறை, பயணம் தொடர்பான வேலை மற்றும் பல்வேறு துறைகளில் வேலை பார்ப்பவர்கள் என நம்மில் பலர் வீட்டில் செய்யும் உணவுகளை சாப்பிட முடியாமல் வெளியே உணவு உண்பார்கள்.
அந்த உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமற்றது. எனினும் வீட்டில் உணவு சாப்பிடுபவர்களும் வேலையில் ஏற்படும் மன அழுத்தத்தால் இவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
அத்தகைய மக்கள் இயற்க்கை முறை சார்ந்த உணவுகளை GMP(நல்ல தரமான இயற்கை உற்பத்தி) மற்றும் தரங்கள் அடிப்படையில் எடுக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பு நியூட்ரிஷியனை ஆலோசனை பெற வேண்டும்.
Friday, 6 October 2017
இது விஷம் குடித்தவரை கூட பிழைக்க வைக்கும்… கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க…
நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும்.
அதனால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் வசம்பு என்பது குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் ஒன்று என்று. ஆனால் அது அப்படியல்ல. வசம்பு பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம்.
வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.
கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது. பசியைத் தூண்டி சோம்பலைத் தீர்க்கும்.
அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது.
பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.
இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது
சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமி நாசினியாகவும் பயன்படுத்தலாம்
Wednesday, 27 September 2017
தேள் கொட்டியவுடன் உடனே இத செய்யுங்க எந்த பிரச்சினையும் இருக்காது!! அதிகம் பகிருங்கள்
எலுமிச்சையில் செடி எலுமிச்சை, கொடி எலுமிச்சை என இரண்டு வகை உண்டு. வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து கொண்டுள்ள எலுமிச்சை பல்வேறு பலன்களை தருகிறது.
தேள் கொட்டினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும். தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.
நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுந்த நிவாரணம் பெறலாம்.
மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.
எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும். அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை(கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.
நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.
சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும். சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.
எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.
சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.
Tuesday, 20 June 2017
மனைவியரை ஒழுக்கப்படுத்துவது எப்படி?சவுதி கணவன்மார்களுக்கு அறிவுரை
மனைவியரை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்பது குறித்து சவுதியை சேர்ந்த குடும்ப நல மருத்துவ ஆலோசகர் கூறிய அறிவுரை வீடியோ வெளியாகியுள்ளது.
சவுதியில் குடும்பநல மருத்துவ ஆலோசகராக பணியாற்றும்KhaledAl-Saqaby என்பவர் வழங்கிய அறிவுரையில், கணவன்மார்கள், மனைவியரை அடிப்பதில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
இது ஒரு இடைவிடாத பிரச்சனை என்பதுதான் என்றாலும், அல்லாவின் துணையோடு இந்த பாலத்தை நாம் மிகவும் கவனமாக கடக்க வேண்டும்.
மனைவியரை அடிப்பதன் நோக்கம், ஒழுக்க ரீதியாக அவர்களை கட்டுப்படுவதற்காகத்தானே தவிர கோபத்தில் அடிப்பது இல்லை.
மேலும் கணவன்மார்களிடம் மனைவியரின் உரிமை என்ன? அவர்களின் பணி என்ன என்பது குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இதனைத்தாண்டி, மனைவியானவள் தான் பயணிக்க வேண்டிய பாதையினை தவிர்த்து வேறு பாதையில் பயணிக்கையில் கணவனால் திருத்தப்படுகிறாள்.
பெரும்பாலான பெண்கள் தாங்கள் கணவன்மார்களுக்கு இணையானவர்கள் என நினைத்துக்கொள்கிறார்கள், இதுவே ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது.
அதுமட்டுமின்றி மனைவியரின் சில மோசமான செயல்பாடுகளே அவர்களை அடிப்பதற்கு தூண்டுகின்றன. இதுதவிர, மனைவியரை அடிப்பதற்கு கூர்மையான பொருட்கள், பெரிய கம்புகளை பயன்படுத்தாமல், மிகச்சிறிய அளவிலான பொருட்களை பயன்படுத்துங்கள் என கூறியுள்ளார்.
இந்த வீடியோ கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சவுதியில் வெளியாகியுள்ளது, இந்த வீடியோவானது அமெரிக்காவில் செயல்பட்டு வரும் Middle East Media Research Institute மூலம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
Friday, 19 May 2017
தாங்க முடியாத தலைவலியா? இத ஒரு கப் குடிங்க
தற்போதைய டென்சன் நிறைந்த வாழ்க்கை முறையினால், அடிக்கடி தலைவலியால் அவஸ்தைப்படுகின்றனர்.
அதிலும் ஒற்றைத் தலைவலி ஒருவருக்கு வந்தால், அதிலிருந்து அவ்வளவு எளிதில் விடுபட முடியாது. ஒற்றைத் தலைவலி முற்றிய நிலையில், குமட்டல், தலைச்சுற்றல் போன்றவையும் ஏற்படும்.
ஒற்றை தலைவலி வந்து, அது 4-70 மணிநேரத்திற்கும் நீடித்திருந்தால், அதிலிருந்து விடுபட மருந்து மாத்திரைகளை எடுப்போம். ஆனால் ஒற்றை தலைவலியை எளிய இயற்கை வைத்தியத்தின் மூலமே சரிசெய்யலாம்.
தேவையான பொருட்கள்:
காபி மற்றும் எலுமிச்சை
காபி:
காபியில் வாசோகான்ஸ்டிரிக்டிவ் பண்புகள் மற்றும் காப்ஃபைன் உள்ளது. இந்த காப்ஃபைன் லாஸோடைலேஷன் மூலம் ஒற்றைத்தலைவலியை எதிர்த்துப் போராடும். மேலும் காபி பித்தப்பையை நன்றாக விரிவடையச் செய்து, பித்தப்பையில் கற்கள் உருவாவதைத் தடுக்கும் மற்றும் மலச்சிக்கலைக் குறைக்கும்.
எலுமிச்சை:
எலுமிச்சையில் உள்ள பண்புகள், காபியுடன் சேரும் போது, ஒற்றைத் தலைவலிக்கு காரணமான காரணிகளைத் தடுத்து, உடனடி நிவாரணம் அளிக்கும்.
செய்முறை:
முதலில் நீரில் காபி தூளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினைக் கலந்து, குடிக்க வேண்டும்.
நீங்கள் செய்யும் இந்த ஒரு தவறுதான் மாரடைப்புக்கு காரணம்: எச்சரிக்கை தகவல்
வலி நிவாரண மாத்திரைகளை அதிகம் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஸ்டெராய்டல் அல்லாத ( non-steroidal) அழற்சிக்குரிய மருந்துகள் (NSAID) வலி மற்றும் அழற்சி மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது, இதய பாதிப்பு அளவை 20 முதல் 50 சதவிகிதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பி.ஜே.ஜே பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், NSAID -களான Ibuprofen, Diclofenac, Celecoxib மற்றும் Naproxen போன்றவற்றை - ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு மாதத்திற்கு மேலாக எடுத்துக்கொள்வது மாரடைப்பு ஆபத்தோடு தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மருந்துகளை அதிக டோஸ்களாக தொடர்ந்து ஒரு மாதத்திற்கு எடுத்துக்கொள்வது முற்றிலும் ஆபத்திற்கு வழிவகுக்கிறது.
ஆராய்ச்சியாளர்களின் திட்டமிட்ட ஆய்வு மற்றும் ஒரு மெட்டா பகுப்பாய்வு ஆனது 446,763 மக்களில் 61,460 பேர் இந்த மருந்துகளின் தொடர் நுகர்வால் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கிறது.
மிலானோ-பிக்கோஸ்கா பல்கலைக்கழகத்தின் முந்தைய ஆய்வின் படி, அதிகமாக பரிந்துரைக்கப்படும் மருந்துகள் மற்றும் தாமாகவே வாங்கி சாப்பிடும் பல வலி நிவாரண மருந்துகளால், அதிகப்படியானோர் இருதய மருத்துவமனைகளை நாடுவதாக தெரிவித்துள்ளது.
இவரை தெரியுமா? லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் தமிழன்
தமிழ்நாட்டில் சமையல் செய்வதை வீடியோவாக யூடியூப்பில் பதிவேற்றி லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கோபிநாத்(26), டிப்ளமோ படித்துள்ள இவர் தனது தந்தை ஆறுமுகம், தாய், மனைவி மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார்.
கோபிநாத்தின் தந்தை ஆறுமுகம் அசைவ உணவுகள் சமைப்பதில் கைதேர்ந்தவர்.
இதைவைத்து இவர்கள் குடும்பம் கடந்த ஆறு மாதங்களாக லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறது.
மாட்டிறைச்சி குழம்பு, ஆட்டு குடல் குழம்பு, இறால் குழம்பு ,வாத்து கறி போன்ற நாக்கில் எச்சில் ஊறும் அசைவ உணவுகளை ஆறுமுகம் சமைக்க அதை கோபிநாத் வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவேற்றி வருகிறார்.
அவர் குடும்பம் இதற்கு உதவியாக இருக்கிறது. Village Food Factory என்னும் தனி யூடியூப் சேனல் கோபிநாத்துக்கு உள்ளது.
கூகுள் ஆட்சென்ஸ், பங்குதாரர் வலைத்தளங்கள் மற்றும் சேனல்களின் விளம்பரங்களை மூலம் கடந்த ஆறு மாதங்களில் இந்த குடும்பம் 6.5 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது.
இது குறித்து கோபிநாத் கூறுகையில், இதுவரை 42 சமையல் வீடியோக்களை வெளியிட்டுள்ளோம். என் தந்தை தற்போது யூ-டியூப் பிரபலமாக வலம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
இதுவரை எங்கள் வீடியோவை 30 மில்லியன் மக்கள் கண்டு ரசித்துள்ளனர். முதல் மாதம் எங்களுக்கு 8000 வருமானம் தான் வந்தது. பின்னர் லட்சக்கணக்கில் வர ஆரம்பித்தது என பெருமையுடன் கூறுகிறார்.
1000 வீடியோவை பதிவேற்றுவதும், பிற்காலத்தில் ஹொட்டல் தொடங்குவதும் இந்த குடும்பத்தின் திட்டமாக உள்ளது.
Subscribe to:
Posts (Atom)



























