Home
Entertainment
Showing posts with label Entertainment. Show all posts
Showing posts with label Entertainment. Show all posts
Monday, 18 December 2017
ராஜா ராணி சீரியல் நடிகை செம்பாவுக்கு அந்த நடிகர் மேல அம்புட்டு காதலாம்...
நம்ம ரசிகர்களுக்கு பல நடிகர்கள் மேல காதல் இருக்கும், அது பெரிய விஷயம் இல்ல. ஆனா பாருங்க நமக்கு புடிச்ச நடிகர்களுக்கு வேறொரு நடிகர் மேல காதல் இருக்கும்.
ராஜா ராணி சீரியல்ல பல இளைசு மனச கவர்ந்தவங்க செண்பா என்கிற ஆல்யா மானசா. இவங்களுக்கு நம்ம நாயகன் கௌதம் கார்த்திக்க தான் புடிக்குமாம்.
எனக்கு அவர் மேல ஒருவித காதல், எல்லாரையும் புடிக்கும், ஆனா எனக்கு கௌதம் மேல தான் லவ்சு னு சொல்லியிருக்காங்க நம்ம செம்பா.
Sunday, 17 December 2017
Friday, 1 December 2017
மீண்டும் இணைந்த சரவணன் மீனாட்சி! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்
சினிமாவில் காதலுக்கு உதாரணமாய் பல ஜோடிகள் இருக்கிறார்கள். சின்னத்திரையில் இப்படி சொல்லிக்கொள்ள ஒரு சில ஜோடிகள் இருக்கின்றார்கள்.
அதில் சரவணன் மீனாட்சி செந்தில் ஸ்ரீஜா தான். இந்த சீரியலின் முதல் சீசனில் ஜோடியாக கலக்கியவர்கள் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்கள்.
அடுத்தடுத்து பல சரவணன் மீனாட்சிகள் போல் வந்தாலும் இந்த ஜோடி போல வருமா என்பது ட்ரண்ட் செட்.
இந்நிலையில் இவர்கள் மீண்டும் இணைகிறார்கள் ஒரு WEB SERIES க்காக. இதன் பெயர் கல்யாணம். டிசம்பர் ஒன்று முதல் நீங்கள் பிரபல வானொலியின் இணையதளத்தில் பார்த்து ரசிக்கலாம்.
கொஞ்சம் கூட வெட்கப்படாம குத்தாட்டம் போட்ட ஜூலி!! கோகுல் கொடுத்த சரியான பதில்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி வெகுவாக பிரபலமடைந்தாலும், அவர் செய்த சில விடயங்களால் மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார்.
சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து வரும் சூழலில், சினிமா பிரபலம் அல்லாத ஜூலி தற்போது, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்குகிறார்.
நல்ல பெயர் எடுக்க நீண்ட நாள் ஆகும் எனக் கூறப்படுவதை போல, ஜூலி சிறப்பாகத் தொகுத்து வழங்கினாலும், பலர் அவரைக் குறை கூறி வருகின்றனர். அவரது நடவடிக்கைகளை விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்நிகழ்ச்சியின் நடுவர் கலா மாஸ்டர், ஒருவர் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் அவரை விமர்சித்து கொண்டே இருப்பது சரியானது அல்ல.
ஒருவரை கடுமையாக விமர்சித்து திட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒளிபரப்பான ஜூலி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில், நடுவராக இருக்கும் கோகுல், ஒரு குழந்தைக்கு ஜூலியை ஆடிக் காட்டுமாறு கூறினார்.
பாடல் ஒலித்த உடனேயே, ஜூலி குத்தாட்டம் போட்டு ரசிகர்களை ஆச்சரியப் படுத்தியுள்ளார்.
ஜூலி சிறப்பாக ஆடியதைப் பார்த்த கோகுல், 'ஜூலியிடம் இருக்கும் மிகப்பெரிய ப்ளஸ்ஸே ஆடச் சொன்னதும், வெட்கப்படாமல் உடனே ஆடியதே' எனப் பாராட்டினார். ஜூலியும் மகிழ்ச்சியாக அந்தப் பாராட்டை ஏற்றுக்கொண்டார்.
வெள்ளிதிரையில் கால் பதிக்கும் ஜூலி...யாருடன் நடிக்க போகிறார் என தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க
ஜல்லிக்கட்டில் வீர தமிழச்சி என்று பெயர் எடுத்த ஜூலி பிக்பாஸில் அந்த பெயரையே இழந்தார்.
பிக்பாஸில் இருந்து வெளியே வந்த இவருக்கு தனியார் தொலைகாட்சியில் தொகுப்பாளாராக வாய்ப்பு கிடைத்தது. மேலும் அவர் அளித்த பேட்டிகளில் தனக்கு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளதாக கூறினார்.
குறிப்பாக தல அஜித் உடன் தான் நடிக்க விரும்புகிறேன் என்றார். ஆனால் தற்போது விஜய், முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க ஜுலிக்கு வாய்ப்பு அளித்துள்ளனராம்.
ஜுலிக்கு கிடைத்த இந்த வாய்ப்பையாவது சரியாக பயன்படுத்தி கொள்வாரா?
ஜாக்குலின் அந்த டிவி-யை விட்டு நீங்கிய பின்னர் அம்பலப்படுத்திய உண்மைகள்..? நடந்தது என்ன?
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ஜாக்குலின் அந்த தொலைக்காட்சியை விட்டு வெளியேறிவிட்டார்.
இதற்கான காரணங்கள் தெரியாத ரசிகர்கள் ஜாக்குலின் வெளியேர காரணம், சில நாட்களுக்கு முன் ஒளிபரப்பான கலக்கபோவதுயாரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட ஜான்விஜய்யுடன் ஆடி நடனம் என்று கூறி வந்தனர்.
இந்த நிலையில், இவர் தற்போது படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்துவதான் காரணம் என்று கூறி வருகிறார்.
இது உண்மையா இல்லை பொய்யா என்று ஜாக்குலின் விரைவில் தெரியப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அது உண்மை என்பது போன்ற செய்திகள் வைரலாகியுள்ளது. பொருத்திருந்து பார்ப்போம் ஜாக்குலின் என்ன கூறப்போகின்றார் என்று.
Tuesday, 28 November 2017
சர்ச்சை நடிகை நமீதாவின் திருமணத்தில் இத்தனை சுவாரஷ்யங்களா..?
நடிகை நமீதா என்பதை பிக்பாஸ் நமீதா என்றால் சற்று சர்ச்சை இருக்கும் என்பதே பலரின் எண்ணம். தன் காதலை கடந்த நவம்பர் 24 ல் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிகழ்வை பற்றி சில சுவாரசிய விஷயங்கள்...
நடிகை நமீதாவிடம் வீர் தான் முதலில் காதல் சொன்னாராம். பின் நமீதா ஓகே சொல்ல. ஒரு வருடம் இந்த காதல் தொடர்ந்துள்ளது. நமீதா குஜராத்தி. அவரது கணவர் வீர் தெலுங்கு.
நமீதாவின் நண்பர்கள் 10 முதல் 15 திருமண பத்திரிக்கை மாடல்களை எடுத்துக்கொடுக்க அதிலிருந்து நமீதா கிளாசிக் மாடல் ஒன்றை தேர்வு செய்தாராம்.
கல்யாணத்துக்கு முக்கியமே பட்டு புடவை தான். ஆனால் இவரது திருமண பட்டில் நமீதாவின் ஃபேவரைட் கிருஷ்ணா ராதையை டிசைன் செய்திருக்கிறார்களாம்.
இருவரும் வெவ்வேறு மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதால் இரு வீட்டு முறைபடியும் தாலி கட்டினார்களாம். மேலும் வைரத்தாலி என மூன்று தாலி அணிவிக்கப்பட்டதாம்.
திருமண நகைகள், மற்ற பொருட்கள் எல்லாம் ஆன்லைன் மூலமே வாங்கிவிட்டார்களாம். தற்போது நமீதாவின் நண்பர் ஒருவர் இசையமைப்பாளராக இருக்கிறாராம்.
அவர் மற்றும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து நமீவீர் கல்யாணம்... நமீவீர் விவாஹம் என ஒரு ஆல்பம் ரெடி பண்ணுகிறார்களாம். இதன் ஷுட்டிங் டிசம்பரில் ஆரம்பமாகிறது.
Subscribe to:
Posts (Atom)






