Showing posts with label Lifestyle. Show all posts
Showing posts with label Lifestyle. Show all posts

Friday, 1 December 2017

உங்களுக்கு இதய நோய் உள்ளதா? வீட்டிலேயே தெரிந்துக் கொள்ளுங்கள்


இதய நோய் உள்ளதா என்பதை மருத்திவமனைக்கு சென்று தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை தாண்டி நமது கால் விரல்களை குனிந்து தொடுவதன் மூலமே தெரிந்து கொள்ள முடியும்.

செய்முறை

நின்றபடி அல்லது தரையில் அமர்ந்தபடி இதை நீங்கள் செய்யலாம். நிற்கிறீர்கள் என்றல் உங்கள் கால்களை சேர்த்து நிமிர்ந்து நில்லுங்கள். உட்காந்து இருக்கிறீர்கள் என்றாக் சம நிலையான நிலப்பரப்பில் கால்கள் இரண்டையும் நீட்டி அமருங்கள்.

இப்போது உங்கள்து முட்டியை மடக்காமல் கைகளை நீட்டி கால் விரலை தொட முயற்சியுங்கள்...

உங்களால் தொட முடிந்தால் இதயம் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அர்த்தமாம்.


தொட முடியவில்லையெனில் உங்கள் கை விரலுக்கும் கால் விரலுக்கும் இருக்கும் இடைவெளியே உங்களுக்கும் இதய ஆரோக்கியத்துக்கும் இடையே உள்ள தூரம் ஆகும்.

தொப்பை உள்ளவர்கள் அதாவது, அதிக கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களால் இதை எளிதாக செய்ய முடியாது, தேவையற்ற கொழிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தால் தான் அதிகமாக இதய நோய் ஏற்படுகிறது என்பதை மறவாதீர்கள்.

ஒரு கைப்பிடி வேர்க்கடலை... ரகசியம் தெரிந்தால் சாப்பிடாமல் இருக்க மாட்டீங்க


பீன்ஸ், பட்டாணி போன்ற தாவர வகையைச் சேர்ந்ததுதான் நிலக்கடலையும். இது மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.

பயன்கள்:


  • இதனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் ஓடிவிடும். நெஞ்சு சளியினை நீக்கும் வல்லமையும் கொண்டது வேர்க்கடலை.
  • இதில் உள்ள எண்ணெய்ச் சத்து, எளிதில் ஜீரணமாகக்கூடியது.
  • சருமத்துக்குப் பளபளப்பூட்டக்கூடியதாகவும் விளங்குகிறது.
  • வேர்க்கடலையை, வெல்லத்துடனும், ஆட்டுப்பாலுடனும் சேர்த்துச் சாப்பிடலாம். இது வளரும் குழந்தைகளுக்கும், கருத்தரித்துள்ள பெண்களுக்கும், தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கும் சிறந்த மருந்து.
  • பல தொற்றுநோய்கள், ஹெபடைடிஸ், காசநோய் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளத் தேவையான எதிர்ப்பு சக்தியை வேர்க்கடலை அளிக்கிறது.
  • ஹீமோஃபீலியா என்ற நோயில் அவதிப்படுபவர்களுக்கு அடிபட்டால் அவ்வளவு எளிதில் ரத்தம் உறையாது.
  • அதனைக் குணப்படுத்தவும், பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கில் இருந்து குணமடையவும், நீரிழிவு நோயாளிகளுக்கும் வேர்க்கடலை சிறந்த உணவாகும்.

எப்படி சாப்பிட்டால் என்ன பயன் அளிக்கும்:

ஆட்டுப் பாலில் எலுமிச்சைச்சாறு பிழிந்து, அதனுடன் ஒரு பிடி வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

புதிதாகப் பறித்த வேர்க்கடலையுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் வாயில் உள்ள ஈறுகள் உறுதியடையும்.

வேர்க்கடலையைத் தண்ணீரில் ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிகட்டிவிட்டுச் சாப்பிடுவதே சிறந்ததாகும்.

வேர்க்கடலையைக் கஞ்சியாக்கி, வாழைப்பழம், தேன் சேர்த்துச் சாப்பிடுவதால், குழந்தைகள் பலம் பெறுவார்கள்.

வேர்க்கடலையை வேகவைத்துச் சாப்பிடலாமா?

வேகவைப்பதாலும், வறுப்பதாலும் வேர்க்கடலை அதன் சத்துக்களை இழந்து விடுகிறது. பச்சையாக ஊறவைத்து சாப்பிடுவதே நல்லது.

வேர்க்கடலை சாப்பிடுவதால் உடல் எடை கூடுமா?

ஒரு பிடி வேர்க்கடலை மட்டும் சாப்பிட்டால் எடை கூடாது. உடல் எடை கூட விரும்புவோர், ஆரோக்கியமாக எடை அதிகரிக்க நிறைய வேர்க்கடலை சாப்பிடலாம்.

வேர்க்கடலை பால்

தேவையானவை


  • வேர்க்கடலை 2 கைப்பிடி அளவு (8 மணி நேரம் ஊறவைக்கவும்)
  • ஆப்பிள் 1
  • சப்போட்டா
  • நேந்திரம்
  • செவ்வாழை
  • பேரீச்சை
  • துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
  • தேன் 2 டீ ஸ்பூன் (சுவைக்கு ஏற்ப)

ஊறவைத்த வேர்க்கடலையை நன்றாக மிக்ஸியில் அரைத்து, மற்ற பொருட்களையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து பருகலாம்.

இந்த ஒரு மீனை சாப்பிட்டால் போதும்... உடலில் நோய்கள் 10 அடி தள்ளியே நிற்குமாம்


நாம் தினசரி சாப்பிடும் உணவான சைவ உணவுகளிலேயே பல சத்துக்கள் அடங்கியுள்ளது என்றாலும் கூட, நீங்கள் வாரத்தில் ஒரு முறையாவது அசைவ உணவை சாப்பிடலாம். அசைவ உணவு என்று வரும் போது நாம் சாப்பிடும் கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சியை விட மீன் உணவை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

மீன் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு மிகச்சுவையான உணவாகும். அதிலும் பிரஷ் ஆன மீனில் உள்ள சுவை என்பது வேறு எதிலும் கிடைக்காது. மீன் என்று வரும் பொழுது உங்களுக்கு இன்னொரு சந்தேகமும் வரும்... எந்த மீனில் அதிக சத்துக்கள் உள்ளது... எந்த மீன் உடலுக்கு மிகவும் நல்லது என்ற சந்தேகம் தான் அது...!

மீன்களில் மிகவும் குறைவான விலையில் கிடைப்பது நெத்திலி மீனும், மத்தி மீனும் தான்.. இதன் விலை குறைவு என்பதற்காக இதன் சுவையில் குறைவு இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்.. இது சுவையில் அலாதியானது ஆகும்...! தற்போது நெத்திலி மீன், மத்தி மீனின் நன்மைகளைக் குறித்துக் காணலாம்.

பொதுவாக மீன்களின் நன்மைகள்

மீன் உணவு மட்டுமே ஆரோக்கிய வாழ்விற்கான தனிச்சிறப்பு வாய்ந்த முக்கிய மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உட்கொள்ளுதல் அறிவாற்றலை அதிகரித்து பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகளைத்தவிர்க்க வழிசெய்கிறது.

மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.

மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் இரத்தக்குழாயின் நீட்சி மீட்சித்தன்மை அதிகரிப்பதோடு உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க வழிவகை செய்கிறது.

மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.

மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.

பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளுக்கு வலு சேர்க்கவும்கூட மீன் உணவு பயன்படுகிறது.

ஆஸ்துமா என்பது குழந்தைகளை தாக்கும் பிரச்சனைகளில் ஒன்று. மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது அதை உட்கொள்ளும் வயோதிகர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கிறது.

தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக்குறைக்க வழி செய்கிறது.

நெத்திலி மீனின் நன்மைகள்


  • நெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
  • செல்லுலார் மற்றும் இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கும், இந்த திசுக்களில் உள்ள கோளாறுகளை சரி செய்யவும் தேவையான அளவு புரோட்டீன் நெத்திலி மீனில் உள்ளது.
  • நெத்திலி மீனில் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஈ, செலினியம், போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும் உள்ளன. எனவே அடிக்கடி நெத்திலி மீனை உணவில் சேர்த்து வந்தால், சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவதோடு, சருமம் பொலிவோடு இருக்கும்.
  • நெத்திலி மீனில் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் சத்து. அதுமட்டுமின்றி இதில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.
  • நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், கண் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
  • நெத்திலி மீனில் கலோரிகள் குறைவு மற்றும் புரோட்டீன் அதிகம் என்பதால், இது உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும்.

மத்தி மீனின் நன்மைகள்


  • மத்தி மீனில் இவற்றில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளது. 100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும் உள்ளது. மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது
  • தோல்நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.
  • மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது. மத்தி மீனில் வைட்டமின் பி 12 உள்ளது. இது உடலில் ஹோமோசைஸ்டீனின் அளவை சமநிலைப்படுத்தி இதய சுவர்களில் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
  • மத்தி மீனில் அயோடின் என்ற தாதுச்சத்து உள்ளதால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீனில் செல்களில் இருந்து கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை உட்கொள்பவர்களின் தோல்கள் பளிச்சென்றும், நகங்கள் உறுதியாகவும், கண் பார்வை தெளிவாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தான் கேரள மக்கள் அதிகமாக மத்தி மீனை சாப்பிடுகிறார்கள் போல தெரிகிறது....!


தரமான மீனை தேர்ந்தெடுப்பது எப்படி?


  • கண்கள் பளபளப்பாகவும், குழி விழாமலும் குவிந்து காணப்படும்.
  • செவுள்கள் இரத்தச்சிவப்பாக காணப்படும்.
  • மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருக்காது.
  • மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழாமல் விரைப்புத்தன்மையுடன் காணப்படும்.
  • தசைப்பகுதி உறுதியாக இருக்கும்.
  • கடல் பாசி மனம் இருக்கும்.



தரமற்ற மீனை கண்டுபிடிப்பது எப்படி?


  • மீன்கள் வெளிறிய நிறத்தில் இருக்கும்.
  • விரும்பத்தகாத (அழுகிய) முட்டை மணம் அல்லது அம்மோனியா மணம் அல்லது கழிவுப்பொருட்களின் வாடை வீசும்.
  • மீனின் கண்கள் குழி விழுந்து சுருங்கி காணப்படும்.
  • செவுள்கள் வெளிறிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • மீனின் வயிற்றுப்பகுதியில் வீக்கமோ, வெடிப்புகளோ இருக்கும்.
  • மீனின் உடலை விரலால் அழுத்தினால் குழி விழுந்து காணப்படும்.
  • தசைப்பகுதிகள் மிருதுவாகவும், தளர்ந்தும் இருக்கும்.

எப்படி சாப்பிடலாம்?

கேரளாவில் இதன் பயன்பாடு அதிகம். அங்கே இதை சாளை என்பார்கள். தமிழகத்து மத்திமீனைவிட கேரளாவின் மத்திமீன் ருசியில், சதையில், மணத்தில், மருத்துவக்குணத்தில் தலைசிறந்தது. ஆனாலும், எக்காலத்திலும் ஏழைகளின் உணவு இதுவே. காரணம் விலை குறைவாக கிடைக்கும் என்பதே. இந்த மீனை மாங்காய்போட்டு குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவை மிக அருமையாக இருக்கும். அந்தக்குழம்பை மறுநாள் சுண்டவைத்து சாப்பிட்டால் சொர்க்த்தில் இருப்பது போன்ற அனுபவம் கிடைக்கும்.

Tuesday, 28 November 2017

கடுமையான வாய் துர்நாற்றமா? இதை மட்டும் பண்ணுங்க..?


வாய் துர்நாற்றத்திற்கு பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் கோளாறுகளே முதன்மைக் காரணம். இதுதவிர நுரையீரல், இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளும், செரிமானக் கோளாறுகளும் காரணமாக அமைகின்றது.

எனவே இயற்கை முறையில் நமது வாயின் கடுமையான துர்நாற்றத்தை போக்குவது அருமை.

தேவையான பொருட்கள்


  • புதினா இலை – 5
  • தேயிலை – 1 டீஸ்பூன்
  • தேன் அல்லது பனங்கற்கண்டு – 1 டீஸ்பூன்
  • பால் – 1/4 கப்

செய்முறை

ஒரு டம்ளர் நீரில் 5 புதினா இலை மற்றும் 1 டீஸ்பூன் தேயிலை ஆகிய இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

பின் இது பாதியாகச் சுண்டியதும் அதை வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு தேவைப்பட்டால் அதில் சிறிதளவு பால் கலந்து குடிக்கலாம்.

ஆனால், இந்த டீயில் பால் சேர்க்காமல் குடிப்பது தான் மிகவும் நல்லது.

மேலும், இந்த புதினா டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகம் நிறைந்துள்ளதால், நமது உடம்பின் உட்புற புண்கள் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

Friday, 24 November 2017

ஒரு நிமிடத்தில் உங்கள் கண் கருவளையங்களை காணாமலாகிடும்.... கண்டிப்பா டிரைப்பண்ணுங்க


தேவையானவை:


  • Colgate பேஸ்ட்
  • Aloe Vera ஜெல்
  • விட்டமின் E மாத்திரை
  • ரோஸ் வாட்டர்


ரோஸ் வாட்டர்

முதலில் ரோஸ்வாட்டரை எடுத்து ஒரு பஞ்சினைக்கொண்டு உங்கள் முகத்தை துடைத்துவிடவும். முக்கியமாக கண்களை சுற்றி 2 நிமிடம் மசாஜ் செய்து முகத்தை கழுவவேண்டும்.

கலவை

Aloe Vera ஜெல் அறை டிஸ்பூன், விட்டமின் E மாத்திரை ஒன்று, ரோஸ் வாட்டர் அறை டிஸ்பூன் ஆகியவை ஒரு கிண்ணத்தில் நன்கு கலந்துகொள்ளவேண்டும்.

Colgate பேஸ்ட்

பஞ்சில் சிறிதளவு ரோஸ் வாட்டரை எடுத்து பிறகு அதனுடன் பேஸ்டை கலந்து கருவளையம் உள்ள இடங்களிலும் கண்ணை சுற்றியும் ஒரு நிமிடத்திற்கு குறைவாக மசாஜ் செய்துக்கொள்ளுங்கள். பிறகு முகத்தை கழுவுக்கொள்ளவும்.

குறிப்பு

அதிக நேரம் பயன்படுத்தினால் கண்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும்.

பிறகு கலந்துவைத்த அந்த கலவையை ஒரு விரலால் கண்களை சுற்றி 2 நிமிடம் மசாஜ் செய்த பிறகு உடனேவும் கழுவலாம் அல்லது இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு காலையிலும் கழுவலாம்.

இப்படி தொடந்து 5 நாட்கள் செய்து வர உங்கள் கருவளையங்கள் காணாமல் போகும்.

இது தெரிஞ்சா தேங்காய் ஓட்டை தூக்கிய வீச மாட்டிங்க..?


உங்களது சருமத்தை அழகுப்படுத்துவதற்காக நீங்கள் எத்தனையோ வழிமுறைகளை கையாண்டு இருப்பீர்கள். ஆனால் அவை உங்களுக்கு அதிகமாக பலன் கொடுக்கவில்லை என்பது போல நீங்கள் உணரலாம்.

இதற்கு காரணம் நீங்கள் அந்த பொருளை முறையாக பயன்படுத்தவில்லை என்பது தான்.. எந்த ஒரு பொருளையும் நீங்கள் முறையாக பயன்படுத்தினால், மிகச்சிறந்த பலனை பெருவது என்பது உறுதி...

கரித்தூள்

கரித்தூள் பழங்காலமாகவே இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏன் நீங்கள் கூட கரித்தூளைக் கொண்டு பல் துலக்குவது பற்றி எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

உண்மையில் இந்த கரித்தூள் உங்களது பற்களை வெண்மையாக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

கரித்தூளை கொண்டு பற்களை மட்டுமல்ல, உங்களது முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், வெள்ளை பருக்கள் போன்றவற்றை நீங்கி முகத்தை மென்மையாக்கவும், சருமத்தை மிளிர செய்யவும் இது உதவுகிறது. இதனை ஒரு முறை டிரை செய்து பார்த்தால் நீங்கள் இது உங்களது முகத்தில் செய்யும் மாயத்தை கண்டு மீண்டும் மீண்டும் டிரை செய்ய ஆசை கொள்வீர்கள்...

தேவையான பொருட்கள்


  • 2 டேபிள் ஸ்பூன் நான்- டாக்சிக் ஒயிட் க்ளூ ( non-toxic white glue)
  • 2 கேப்சூல் ஆக்டிவேட்டேடு கரித்தூள் ( தேங்காய் ஒட்டில் இருந்து எடுக்கப்பட்டது)
  • பழைய பிரஸ் டோனர் க்ளேன்சர்

தயார் செய்யும் முறை

கரித்தூளை நீங்கள் முக்கியமாக தேங்காய் ஓட்டை நன்றாக எரித்து அதன் கரியை எடுத்துக் கொள்ளலாம்.

அல்லது ஏதேனும் ஒரு மூலிகை சார்ந்த மரத்துண்டுகளை எடுத்து எரித்து அதன் கரித்துண்டுகளை எடுத்துக் கொள்ள் வேண்டும்.

விக்ஸிற்கும், தொப்பைக்கும் இப்படியொரு சம்பந்தமா?... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


பொதுவாக நாம் அனைவரும் ஜலதோஷம், மூக்கடைப்பு, தொண்டை வலி இது போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துப் பொருள் தான் விக்ஸ்.

இந்த விக்ஸானது, உடல்நல பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மட்டுமின்றி, நம்முடைய தொப்பையை குறைப்பதிலும் கூட முக்கிய பங்கு வகிக்கிறது. விக்ஸ் மருந்தானது, பொதுவாக கொழுப்புகளை கரைக்கும் தன்மைக் கொண்டது.

எனவே நாம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விக்ஸை தடவி மசாஜ் செய்து வந்தால், அந்த இடத்தில் உள்ள கொழுப்புகளை மிகவும் வேகமாக கரைக்கிறது.

விக்ஸ் மருந்தைக் கொண்டு நாம் தினமும் மசாஜ் செய்து வருவதன் மூலம் நமது உடம்பில் உள்ள கொழுப்புச் செல்கள் அழிக்கப்பட்டு, சுருங்கும் சருமத்தில் உள்ள தழும்புகளை நீக்கி, நமது சருமத்தை அழகாக்குகிறது.

தொப்பையை கரைக்கும் விக்ஸ் க்ரீமை தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்


  • விக்ஸ்
  • கற்பூரம்
  • பேக்கிங் சோடா
  • ஆல்கஹால்

செய்முறை

முதலில் கற்பூரத்தை நன்றாக பொடி செய்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனுடன் பேக்கிங் சோடா, விக்ஸ், ஆல்கஹால் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து க்ரீம் போல கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை

நாம் தயார் செய்த விக்ஸ் க்ரீமை, உடற்பயிற்சி செய்வதற்கு முன் வயிறு போன்ற கொழுப்புகள் அதிகமாக உள்ள இடங்களில், தடவி வட்ட சுழற்சி முறையில், மசாஜ் செய்து, பின் பிளாஸ்டிக் கவரின் மூலம் க்ரீம் தடவிய பகுதியை, கட்டிக் கொண்டு 30 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

பின் இரவு நேரங்களில் வயிற்று பகுதியில் விக்ஸ் க்ரீமை தடவி, பிளாஸ்டிக் கவரை சுற்றி, இரவு முழுவதும் ஊறவைக்க வைத்து, காலையில் தண்ணீரில் கழுவ வேண்டும்.

குறிப்பு


  • நாம் தினமும் விக்ஸ் க்ரீமை பயன்படுத்தும் போது, சமச்சீரான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
  • பின் நாம் அன்றாடம் குடிக்கும் தண்ணீரின் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக குடிப்பது மிகவும் அவசியமாகும்.