அஜித், விஜய் ரசிகர்களின் சண்டை டுவிட்டரில் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அஜித்தின் வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் யூடியூபில் 1 கோடி பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. இதனால் ரசிகர்கள் #1CrHitsForAalumaDoluma என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்தனர்.
இதைத் தொடர்ந்து விஜய்யின் தெறி படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டதால் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் #1YearOfTheriFirstLook என்ற டாக்கை கிரியேட் செய்து இந்திய அளவில் இவர்கள் ஒருபக்கம் டிரண்ட் செய்கின்றனர்.
இவர்களின் இந்த டிரண்ட் போட்டி எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.
