Saturday, 12 November 2016

மற்றொரு பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகை தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகினர்



சமீபகாலமாக சின்னத்திரை நடிகர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பிரபல சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்தின் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

இந்நிலையில் தற்போது பிரபல தொகுப்பாளினியாக இருந்தவர் நடிகை சபர்ணா. தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது திரை பயணத்தை தொடங்கிய இவர் தற்போது ஒளிபரப்பாகும் துளசி என்ற தமிழ் தொலைக்காட்சி தொடரில் வில்லியாக நடித்து வருகிறார்.

மேலும் விஷால் நடிப்பில் வெளியான பூஜை படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தோழியாக நடித்தவர்.

இந்நிலையில் இன்று இவர் சென்னை மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இவரது உடலை மீட்ட போலீசார் இவர் தற்கொலை செய்து கொண்டாரா என விசாரித்து வருகிறார்கள்.

பல தொலைக்காட்சி நடிகர்கள் இந்த ஆண்டு தற்கொலை செய்ததால் சின்னத்திரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next

Related