மலையாள நடிகை ரேகா கடந்த சனிக்கிழமை அன்று கேரளா, திரிசூரில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
தற்போது போலீஸ் விசாரணையின் போது அவரது உடல் அருகே கூல் ட்ரிங்க்ஸ் குடித்த டம்ளர், பாட்டில்கள் கிடந்துள்ளது.
ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் வலி தாங்க முடியாமல் குளிர் பானத்தில் விஷம் கலந்து குடித்து இறந்ததாக சொல்லப்படுகிறது.
வெளிநாட்டில் இருக்கும் கணவர் தன் மனைவி ரேகா இரண்டு நாட்களாக போன் எடுக்காததால் சந்தேகமான அவர் காவல் துறை உதவியை நாடிய போது சம்பவம் தெரியவந்தது.
இத்தம்பதிக்கு குழந்தை இல்லை என்று சொல்லப்படுகிறது. சீரியலில் நடித்து புகழ் பெற்ற இவர் இறந்தது பலருக்கு அதிர்ச்சியை தந்தது.
