நயன்தாராவிற்கு ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்கிற பட்டம் கொடுத்து அசத்தியிருக்கிறது பிரபல வெளியீட்டு நிறுவனமான ‘தேனாண்டாள் பிலிம்ஸ் .
அதுவும் அவர் பிறந்த நாள் அன்று. அதற்கு ஏற்ற மாதிரியே நயனின் கிராப் சும்மா ஜிவ்வென்று உயர்ந்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மார்கெட் எகிறிக் கிடக்கிறது.
அதிலும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, வளர்ந்து வரும் இளம் ஹீரோக்கள் அனைவருமே நயன்,நயன்,நயன் என்று பித்துப்பிடித்து அலைகின்றனர்.
தவிர விஜய்,அஜீத் போன்ற சூப்பர்ஸ்டார்களும் நயன் ஜோடி சேர ஆர்வமாகவே இருக்கிறார்கள்.
ஆனால், இந்த பிறந்த நாளில் புது கொள்கை ஒன்றை வகுத்துள்ளாராம் நயன். அதாவது சம்பளம் ஐந்து கோடி. பழைய ஹீரோக்கள் படங்களில் இனி நடிப்பதில்லை.
வளர்ந்து வரும் புது ஹீரோக்கள் படங்களுக்கு முன்னுரிமை. இந்த கொள்கை முடிவைக் கேட்டு இளம் நடிகர்கள் புல்லரித்துப் போய் கிடக்கிறார்கள்.
தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் நயன் இருந்தால் உடனே டேட். என்கிறார்கள். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா காட்டில் மழையோ மழை..!
அள்ளுங்க நயன் அள்ளுங்க..!
