Friday, 25 November 2016

நடிகை சபர்ணா மரணத்தில் திடுக்கிடும் தகவல்! ஸ்டண்ட் நடிகர் சிக்கினார்



சின்னத்திரை, வெள்ளித்திரை என நடித்து வந்த நடிகை சபர்ணா சிலநாட்களுக்கு முன் இறந்து போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முதலில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என தகவல் பரவியது. பின் பிரேத பரிசோதனையின் போது அவரின் உடலில் இருந்த வெட்டுக்காயங்களை வைத்து கை நரம்பை அறுத்துக்கொண்டு தான் இறந்திருக்கிறார் என சொல்லப்பட்டது.

இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடந்தது. இதில் அருகிலிருப்பவர்களை விசாரித்தபோது அவருக்கும் பிரபல ஸ்டண்ட் நடிகருக்கும் நீண்ட நாள் தொடர்பிருப்பது தெரிய வந்தது.

வீட்டை விட்டு தனியே சென்னையில் வாழ்ந்த சபர்ணாவிற்கு அந்த நடிகர் தான் உதவியுள்ளார். சில காலமாக ஏதும் பட வாய்ப்பில்லாத அவர் அந்த நடிகரின் தயவில் பல நாட்கள் இருந்துள்ளார்.

சபர்ணா வீட்டை விட்டு வந்தது கூட அந்த ஸ்டண்ட் நடிகரால் தான் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் கூட அவரின் வீட்டில் அந்த நடிகர் மற்றும் நிறைய பேர் சேர்ந்து மது அருந்தியதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சொல்கிறார்கள்.

சபர்ணா இறந்து போவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் கடைசியாக ஒரு போன் வந்துள்ளது.


Next

Related