Friday, 24 February 2017

துரோகி கருணாசே திரும்பி போ... பொதுமக்களால் துரத்தியடிக்கப்பட்ட கருணாஸ்



தமிழ்நாட்டின் திருவாடனை தொகுதியில் நடிகர் கருணாஸ் நுழைய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள திருவாடனை தொகுதியிலிருந்து எம்.எல்.ஏவாக தெரிவு செய்யப்பட்டவர் நடிகர் கருணாஸ்.

இவர் சசிகலா தரப்பு ஆதரவாக செயல்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆதரவு தெரிவித்தார்.

இதனால் இவர் தொகுதி மக்கள் இவர் மீது மிகுந்த அதிருப்தியில் இருந்து வந்தனர்.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின் கருணாஸ் நேற்று காலை 11:00 மணிக்கு திருவாடானை வந்தார்.

அங்கு தேவர் சிலைக்கு அவர் மாலை அணிவிக்க முயன்ற போது பொது மக்களும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

துரோகி கருணாசே திரும்பி போ என அவருக்கெதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த கருணாஸ் தேவர் சிலைக்கு மாலை போடாமல் திரும்பினார்.

பின்னர் கருணாஸ் கூறுகையில், பெரும்பான்மையான எம்.எல்.ஏ.,க்கள் ஆதரித்ததால் எடப்பாடியை நானும் ஆதரித்தேன். இதில், வேறு எந்த வித சுயநலமும் என்னிடம் இல்லை என கூறியுள்ளார்.


Next

Related