Sunday, 5 March 2017

தனுஷ் என்ன செய்துக்கொண்டு இருக்கிறார் தெரியுமா?



சமூக வலைத்தளங்களே கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பில் இருக்கின்றது. இவை அனைத்திற்கும் ஒரே காரணம் சுசித்ரா என்ற பாடகி தான்.

பிரபலங்கள் பலரின் ஆபாச புகைப்படங்களை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார், நான் இதை செய்யவில்லை, என் அக்கவுண்ட் ஹாக் ஆகிவிட்டது என்று அவர் கூறுகிறார்.

ஆனால், பாடகி சின்மயி உடன் சண்டைப்போடுகிறார், சின்மயி அதற்கு பதில் அளிக்கின்றார், இதை வைத்து பார்க்கையில் இது சுசித்ராவின் அக்கவுண்ட் தான் என்பது தெளிவாக தெரிகின்றது.

தனுஷை தொடர்ந்து அசிங்கப்படுத்தும் விதமாக ஸ்டேட்டஸ் வர, தனுஷ் தரப்பில் இருந்து இதுவரை யாரும் எந்த விளக்கமும் தரவில்லை.

தனுஷும் இந்த விஷயத்தில் பெரிதாக கருத்துக்கூற விரும்பவில்லையாம், ஏனெனில் ஒரு பார்ட்டியில் த்ரிஷாவுடன் எடுத்த போட்டோவை தான் அவர் வெளியிட்டுள்ளார்.

சுசி கூறியது போல் வேறு எந்த ஆபாச போட்டோக்களும் வரவில்லை, மேலும், தனுஷ் அதையெல்லாம் பெருசாக கண்டுக்கொள்ளாமல் தன் பவர் பாண்டி படத்தின் இறுதிக்கட்ட பணிகளை பார்த்து வருகிறாராம்.


Next

Related