Tuesday, 7 March 2017

சுவாதி கொலை வழக்கு முடிவுக்கு வந்தது



தமிழகத்தையே உலுக்கிய இளம்பெண் சுவாதி கொலை வழக்கு முடித்து வைக்கப்படுவதாக சென்னை எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த வருடம் ஜூன் 24ஆம் திகதி சுவாதி (24) என்னும் மென்பொறியாளர் வெட்டி கொல்லப்பட்டார்.

அவரை கொலை செய்ததாக ராம்குமார் (25) என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் கடந்த செப்டம்பர் 18ஆம் திகதி சிறையின் மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் உயிரிழந்ததைத் தொடர்ந்து தற்போது இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதாக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Next

Related