Friday, 10 March 2017

லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாலியல் தொல்லையா? அதிர்ச்சியில் திரையுலகம்



சினிமாவில் நடித்ததை விட தொலைக்காட்சியில் நடித்து பெயர் பெற்றவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் தொடர்ந்து தன் டுவிட்டர் பக்கத்தில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுப்பவர்.

இந்நிலையில் இவர் ஒரு ஆங்கிலப்பத்திரிக்கையில் பேசுகையில் ‘ஒரு மலையாளர் இயக்குனர் எனக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்தார்.

அவர் தமிழிலும் படங்களை இயக்கியுள்ளார், நான் மறுத்த ஒரே காரணத்தால் படப்பிடிப்பில் என்னை அசிங்கப்படுத்தினார்.

அதை தொடர்ந்து ஒரு முன்னணி இயக்குனர் அனுப்பியதாக ஒரு உதவி இயக்குனர் என்னிடம் கதை சொல்ல வந்தார். அவர் என்னிடம் மெல்ல அட்ஜெஸ்மெண்ட் குறித்து பேசினார்.

நான் கூட கால்ஷிட் பற்றி பேசுகிறாரோ என்று நினைத்தேன், பிறகு தான் அவர் எந்த நோக்கத்தில் என்னிடம் பேசினார் என்று, உடனே அவரை வெளியேற சொல்லிவிட்டேன்’ என கோபமாக பேசியுள்ளார். சரி யார் அந்த இயக்குனர்? என்பதே தற்போது பலரின் கேள்வி.


Next

Related