பாகுபலி2 படத்தின் வசூல் 1350 கோடியை தாண்டினாலும், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான கான் நடிகர்கள் அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
பாகுபலி தென்னிந்திய படம் என்பதால் தான் வயிற்றெரிச்சலில் அவர்கள் அதை புறக்கணிக்கிறார்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறிவந்தனர்.
இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் முதன்முறையாக பாகுபலி பற்றி வாய்திறந்துள்ளார். "பாகுபலி முதல் பாகத்தை பார்த்திருக்கிறேன். சினிமாவிற்கு எழுச்சியூட்டும் விதமாக அது இருந்தது. நான் இன்னும் இரண்டாம் பாகத்தை இன்னும் பார்க்கவில்லை. அதுவும் முதல் பகுதி போலவே நன்றாக இருக்கும் என நம்புகிறேன்" என கூறியுள்ளார்.
தற்போது சிஜி தொழில்நுட்பம் சினிமா துறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அது இல்லாத போதும் நாம் நல்ல படங்களை எடுத்திருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
