Tuesday, 20 June 2017

லண்டன் தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்வு



லண்டனின் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில், ஒரே அறையில் 42 உடல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பான Grenfell Tower-ல் நடந்த பயங்கர தீ விபத்தில் 79-பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்தாவது நபரின் வயது 52 இருக்ககூடும் என்று பொலிசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நபர் ஒருவர் யூ டியூபில், Grenfell Tower-நடந்த தீ விபத்தின் போது, 42 உடல்கள் ஒரே அறையில் இருந்ததாகவும், அதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இருந்ததாகவும், ஆனால் அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்படமுடியாத நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து கூறிய நபரின் சகோதரர் அங்கு தீயணைப்புத் துறையில் வேலை செய்து வருவதாக பிரபல ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

தீ விபத்தில் சிக்கிய உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன் தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளதாக பிரித்தானிய பொலிசார் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next

Related