Home
Technology
Showing posts with label Technology. Show all posts
Showing posts with label Technology. Show all posts
Monday, 10 April 2017
யூடியூப்பின் விளம்பர சேவையில் அதிரடி மாற்றம்!
உலகின் முன்னணி வீடியோ பகிரும் இணையத்தளமாக விளங்குவது யூடியூப் ஆகும்.
இத்தளமானது கூகுளுடன் இணைந்து விளம்பர சேவை ஒன்றினையும் வழங்கி வருகின்றது.
அதாவது யூடியூப் கணக்கு வைத்திருப்பவர்கள் தாம் பதிவேற்றும் வீடியோவின் ஊடாக வருமானம் ஈட்டிக்கொள்ள முடியும்.
இதுவரை காலமும் இந்த விளம்பர சேவையினை பெற்றுக்கொள்வதற்கு பெரிய அளவில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கவில்லை.
ஆனால் எதிர்காலத்தில் யூடியூப் கணக்கினை ஆரம்பித்து அதன் மூலம் வருமானம் ஈட்ட முயல்பவர்களுக்கு நிபந்தனை ஒன்றினை விதித்துள்ளது யூடியூப்.
இதன்படி விளம்பர சேவையை பெறுவதற்காக விண்ணப்பிக்கும்போது ஏதாவது ஒரு வீடியோவினை குறைந்த பட்சம் 10,000 தடவைகள் பார்வையிடப்பட்டிருக்க வேண்டும்.
எனினும் இந்த விதிமுறை நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, 4 March 2017
ஸ்மார்ட்போனினை அதிக நாள் பாதுகாக்க?
இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போனும், இன்டர்நெட்டும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது, அதேசமயம் வைரஸ்கள் மூலம் தகவல் திருடப்படுவதும் நடந்து வருகிறது.
ரஷ்யாவை சேர்ந்த இணைய பாதுகாப்பு நிறுவனமான கேஸ்பெஸ்கே லேப் நடத்திய மொபைல் வைராலஜி என்ற ஆய்வில், கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் சுமார் 85 லட்சம் வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 50 சதவீத புதிய வைரஸ்கள் இனம் காணப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் 2016ம் ஆண்டும் அதற்கு முன்னரும் கண்டறியப்பட்ட ஸ்மார்ட் போன் வைரஸ்களைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமான வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இணையங்களில் வெளிவரும் விளம்பரங்கள் மற்றும் ட்ரோஜன் எனும் வைரஸ்கள் மூலம் இவை கண்டறியப்பட்டதாக ஆய்வில் கூறிப்பிடப்பட்டுள்ளது.
ட்ரோஜன் என்னும் வைரஸ்கள் தானாகவே குறிப்பிட்ட அப்ளிக்கேஷனை தரவிறக்கம் செய்து பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
மேலும் விளம்பரங்கள் வாயிலாகவும் ஸ்மார்ட் போனில் வைரஸ்கள் பாதிப்பினை ஏற்படுத்துகிறது
ஸ்மார்ட் போனைப் பாதுகாக்க
- ஸ்மார்ட்போனில் Operating system எனும் OS-யை சரியாக அப்டேட் செய்வதன் மூலம் வைரஸ்களை தவிர்க்கலாம்.
- பாதுகாப்பான இணையதளங்களை மட்டும் உபயோகிக்கலாம்.
- ஸ்மார்ட் போனில் ஆன்டி-வைரஸ் போன்ற ஆப்களை உபயோகிக்கலாம்.
- பாதுகாப்பற்ற இணையத்தளங்கள் மெயிலில் வந்தால் அதனை தவிர்க்கலாம்.
Thursday, 22 December 2016
இனி பாஸ்வேர்ட் தேவையில்லையாம் : இதோ பேஸ்புக்கின் புதிய வழி
பேஸ்புக் நிறுவனம் பாஸ்வேர்ட் மூலம் லாக் இன் செய்யும் முறைக்கு மாற்றாக மொபைல் எண்ணை பயன்படுத்தும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
பேஸ்புக் நிறுவனம் புத்தாண்டை முன்னிட்டு பல புதிய அப்டேட்களை அளித்து வருகிறது.
பேஸ்புக் மெசென்ஜரில் க்ரூப் வீடியோ அழைப்பு செய்யும் வசதி, நண்பர்களுக்கு விடுமுறைக்கால வாழ்த்து தெரிவிக்கும் வசதி உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்தது பேஸ்புக். மேலும், பதிவுகளின் பின்னணி நிறத்தை மாற்றுவது, ஆடியோ ஸ்ட்ஃரீமிங் செய்வது ஆகியவற்றை இணைக்கவும் சோதனை நடத்தி வருகிறது.
இதனிடையே, பேஸ்புக் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்ய மொபைல் எண்ணை பயன்படுத்தும் மாற்று வழியையும் புதிய அப்டேட் மூலம் அறிமுகம் செய்துள்ளது.
அக்கவுண்ட் கிட் என்ற இந்த அம்சத்தின் மூலம் மொபைல் எண்ணை பேஸ்புக் கணக்குடன் பதிவுசெய்துவிட்டால் பாஸ்வேட் பயன்படுத்தி லாக் இன் செய்யத் தேவையில்லை.
மொபைல் எண் மட்டும் டைப் செய்து பேஸ்புக் லாக் இன் செய்யலாம். ஏற்கெனவே, பேஸ்புக்கில் உங்கள் மொபைல் எண்ணை அளித்திருந்தால், அக்கவுண்ட் கிட்டில் பதிவுசெய்யும் மொபைல் எண்ணும் அந்த எண்ணும் ஒன்றாக பொருந்துகிறதா என்று சோதிக்கும். பொருந்தும் பட்சத்தில் உடனே லாக் இன் ஆகிவிடும்.
இல்லையெனில், ஓ.டி.பி. (OTP) பாஸ்வேட் அந்த மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும். அந்த எஸ்.எம்.எஸ்.ஸில் உள்ள ஓ.டி.பி. எண்ணை தானே உள்ளீடாக எடுத்துக்கொண்டு லாக் இன் ஆகிவிடும்.
பின்னர், அந்த மொபைல் எண்ணை மட்டுமே டைப் செய்து லாக் இன் செய்யலாம், பாஸ்வேர்ட் தேவையில்லை.
Wednesday, 21 December 2016
பெண்களின் மூளையின் கட்டமைப்பை மாற்றும் பிள்ளைப்பேறு: ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு! Women of childbearing alter the structure of the brain
பெண்கள் கர்ப்பம் அடைவது முதல் குழந்தையைப் பெற்றெடுப்பது வரையில் அவர்களில் உடலில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெறுகின்றன.
ஆனால் அதன் பின்னரும் ஏற்படக்கூடிய மாற்றம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது பெண்கள் தமது குழந்தையைப் பெற்றெடுத்து இரண்டு வருடங்களின் பின்னர் அவர்களின் மூளையின் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
MRI ஸ்கானின் உதவியுடனேயே இந்த மாற்றம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இம் மாற்றத்தில் பிரதானமாக மூளையில் காணப்படும் நரை நிறப் பொருளின் கனவளவில் மாற்றம் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனை ஸ்பெயினில் உள்ள பார்சிலோனோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆய்வின்போது 25 பெண்கள் தாய்மை அடைய முன்னரும், அடைந்த பின்னரும் மூளை ஸ்கானிங்கிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sunday, 18 December 2016
யாகூ கணக்குகள் மீது மீண்டும் சைபர் தாக்குதல்
முன்னணி தேடல் பொறிகளுள் ஒன்றாகவும், சிறந்த மின்னஞ்சல் சேவையினை வழங்கிவரும் நிறுவனங்களுள் ஒன்றாகவும் யாகூ திகழ்கின்றது.
இந் நிறுவனத்தின் பயனர் கணக்குகள் மீது அண்மைக்காலமாக சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந் நிலைியல் மீண்டும் ஒரு சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஹேக் செய்யப்பட்ட மின்னஞல்களை தனது 500 மில்லியன் பயனர்களின் கணக்குகளில் இருந்து வேறுபடுத்தியுள்ளது.
அத்துடன் அவர்களுக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் ஒன்றினையும் அனுப்பியுள்ளது.
ஹேக் செய்யப்பட்ட குறித்த கணக்குளில் இருந்து பிறந்த திகதி, தொலைபேசி இலக்கங்கள் மற்றும் சில கடவுச் சொற்கள் என்பனவும் திருடப்பட்டுள்ளதாக யாகூ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இத் தாக்குதில் பாதிக்கப்பட்டவர்களுள் தவறவிடப்பட்டவர்களினது விபரங்களையும் யாகூ நிறுவனம் கோரியுள்ளது.
Saturday, 17 December 2016
ஸ்மார்ட்போன் பேட்டரி பேக்கப் நேரத்தை நீட்டிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்...
ஸ்மார்ட்போன் பயனர்களின் நீண்ட கால பிரச்சனையாக இருக்கும் பேட்டரி பேக்கப் நேரத்தை நீட்டிக்க என்னென்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் நீண்ட நாள் பிரச்சனையாக இருப்பது, அதன் பேட்டரி பேக்கப் எனலாம். ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்ய பலரிடம் எந்நேரமும் பவர் பேங்க் காணப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. துவக்கம் முதலே ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த பிரச்சனையை சரி செய்வதை விட அதிகளவு பேட்டரியை தான் வழங்கி வருகின்றன.
சில ஸ்மார்ட்போன்களில் அதிகளவு பேட்டரி வழங்கப்பட்டாலும் பேக்கப் என்னவோ ஒரு நாள் மட்டுமே கிடைக்கிறது. ஸ்மார்ட்போன்களில் சில வழிமுறைகளை பின்பற்றினால் பேட்டரி பேக்கப் நேரத்தை சற்றே கூடுதலாக பெற முடியும். அப்படியாக பேட்டரி பேக்கப் நேரத்தை நீட்டிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்..
செயலிகள்
எந்நேரமும் அனைத்து செயலிகளையும் ஓபன் செய்து வைத்தால், பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போகும். இதனால் பயன்படுத்தாத செயலிகளை அவ்வப்போது மூடி விடுவது பேட்டரி பேக்கப் நேரத்தை நீட்டிக்கும்.
பிரைட்னஸ் அளவு
ஸ்மார்ட்போன் திரையின் பிரைட்னஸ் அளவினை அதிகமாக வைத்திருந்தால், பேட்டரியின் முழு சக்தியும் சீக்கிரம் காலியாகி விடும். இதனால் வெளிப்புற வெளிச்சத்திற்கு ஏற்ப பிரைட்னஸ் அளவு வைப்பது மற்றும் ஆட்டோ பிரைட்னஸ் மோடு உள்ளிட்டவற்றை செட் செய்து கொள்ளலாம்
கனெக்டிவிட்டி
வைபை, ப்ளூடூத் மற்றும் GPS உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தாத சமயத்தில் ஆஃப் செய்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது பேட்டரி பேக்கப் நேரம் வழக்கத்தை விட அதிகமாக கிடைக்கும்.
ஆன்லைன் சின்க்
நீங்கள் பயன்படுத்தும் செயலிகளுக்கான சின்க் ஆப்ஷனை ஆஃப் செய்து வைக்கும் போதும் பேட்டரியின் பேக்கப் நேரம் அதிகரிக்கும். இந்த ஆப்ஷன் செயல்படுத்தப்பட்டிருக்கும் போது எந்நேரமும் செயலி இயக்கப்படுவதால் பேட்டரி அதிகம் செலவாகும்.
கேமிங்
உயர் ரக கேம்களை விளையாடாமல் இருந்தால் பேட்டரி பேக்கப் அதிக நேரம் கிடைக்கும். ஸ்மார்ட்போன்களில் அதிக நேர பேட்டரி பேக்கப் வேண்டுமெனில் கேமிங் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்
Thursday, 1 December 2016
ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆபர், 2017 மார்ச் 31 வரை நீட்டிப்பு.!
முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜிவின் மாபெரும் திட்டங்களை தற்போது அறிவித்துள்ளார். - முதல் மூன்று மாதங்களிலேயே, ஜியோ நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ்ஆப், ஸ்கைப்பை விட வேகமாக வளர்ந்து வருகிறது. - அது 50 மில்லியன் பயனர்களை தாண்டிவிட்டது. - ஜியோ இப்போது வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனமாகும். - ஜியோ, தரையில் இருந்து இணைய இணைப்பு கட்டப்பட்ட ஒரு வலுவான தரவு நெட்வொர்க் ஆகும்.
தொடங்கிய நாளோடு ஒப்பிடுகையில்
சராசரி பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை விட 25 மடங்கு அதிகமான தரவை ஜியோ வாடிக்கையாளர்கள் அனுபவிக்கிறார்கள். - ஜியோவின் வெல்கம் ஆஃபர் குறைபாடுகளை களைவதற்காக நங்கள் நிறைய கருத்துக்களை பெற்றோம், நீங்கள் சொல்ல நாங்கள் கேட்டு வருகிறோம். அவற்றை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது - தொடங்கிய நாளோடு ஒப்பிடுகையில் ஜியோ இப்போது மிக சிறப்பான நிலையில் உள்ளது.
சுமார் 2 லட்சம் மையங்கள்
ஜியோ மிக வேகமான பாதையை அமைத்துக்கொள்ள உதவிய அரசாங்கத்திற்கு நன்றிகள் - இன்று ஜியோ வெற்றிகரமாக ஈகேவைசி (eKYC) மூலம் இந்தியா முழுவதும் சுமார் 2 லட்சம் மையங்கள் வரை பரவியுள்ளது. - இது இந்தியாவில் உள்ள ஏடிஎம்களில் மொத்த எண்ணிகைக்கு கிட்டத்தட்ட சமமாக உள்ளது, மார்ச் 2017-ல் இந்த எண்னிக்கை இரட்டிப்பாக்கப்படும்.
ஜியோ ஹேப்பி நியூ இயர் ஆஃபர்
2016 டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு புதிய ஜியோ பயனருக்கும் தரவு, குரல், ஜியோ ஆப்ஸ், வீடியோ ஆகிய அனைத்தும் முற்றிலும் இலவசமாக மார்ச் 31, 2017 வரை வழங்கப்படும். - இதை "ஜியோ ஹேப்பி நியூ இயர் ஆஃபர்" என அழைக்கலாம். - ஏற்கனவே ஜியோ சேவையை அனுபவிக்கும் தற்போதைய வாடிக்கையாளர்களும் நீடிக்கப்பட்டுள்ள சலுகைகளை மார்ச் 31 சிம் கார்ட் எண்களை மாற்றாமலேயே அனுபவிக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)






